தோசை உப்புமா சமையல் குறிப்பு - 21515 | அறுசுவை


தோசை உப்புமா

food image
வழங்கியவர் : ஆமினா
தேதி : Sat, 07/01/2012 - 18:52
ஆயத்த நேரம் : 5 நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : 5 நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 4 நபர்கள்

 

 • தோசை மாவு- ஒரு கப்
 • பால்- 2 குழிகரண்டி
 • சீனி- 4 ஸ்பூன்
 • சின்ன வெங்காயம்-10
 • கடுகு உளுந்து-1 ஸ்பூன்
 • கறிவேப்பிலை- ஒரு கொத்து
 • பச்சை மிளகாய்-1

 

 • தோசை மாவை வார்க்கவும். ஆறியதும் ப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
 • பின்னர் அதில் சிறிது சிறிதாய் பால் விட்டு உதிரியாய் வரும் அளவுக்கு பிசையவும்.
 • கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு கடுகுளுந்து தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
 • பின்னர் சின்ன வெங்காயம் பொடியாய் நறுக்கியதையும் உப்பையும் சேர்த்து பொன்னிறமாக சுருளும் வரை வதக்கவும்.
 • அடுப்பை அணைத்து விட்டு தாளிப்பை உதிர்த்து வைத்துள்ள தோசையோடு சேர்த்து கலக்கவும்.
மீதமான தோசையினில் இது போல் செய்து கொடுக்கலாம். பெரியவர்களுக்கு என்றால் காரம் கொஞ்சம் அதிகரித்து சீனி தவிர்க்கவும்