சட்னி தோசை

தேதி: January 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (6 votes)

 

தோசை மாவு-ஒரு கப்
முட்டை-தேவைக்கு (ஒரு முட்டைக்கு ஒரு தோசை)
எண்ணெய்- தேவைக்கு

சட்னிக்கு :-
தக்காளி-2
பூடு-1
வரமிளகாய்-5


 

எண்ணெயில் சட்னிக்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து குழையும் வரை ஹைப்ளேமில் வைத்து வதக்கவும்.

பின்னர் ஆற வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும். சட்னி தயார்

தோசை சட்டியில் எண்ணெய் தடவி தோசை வார்க்கவும்

அதன் மேல் முட்டை உடைத்தூற்றி பரப்பவும்.

அதன் மேல் சட்னியில் 3 ஸ்பூன் சேர்த்து பரப்பவும்

சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடிவிடவும். வெந்ததும் பின் பக்கம் திருப்பி போட்டு வேக விட்டு பின்னர் பரிமாறவும்


முட்டை சேர்க்கலாமலும் செய்யலாம்

மேலும் சில குறிப்புகள்