திடீர் ஓட்ஸ் தோசை

தேதி: January 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (11 votes)

 

ஓட்ஸ் - 2 க‌ப்
அரிசி மாவு -‍ 1/2 கப்
த‌யிர்/மோர் ‍ 1 ல் இருந்து 1 1/2 க‌ப் வரை
சிக‌ப்பு வெங்காய‌ம் - 1 (சின்ன‌து)
ப‌ச்சை மிள‌காய் - 3
சீர‌க‌ம் - 1 தேக்க‌ர‌ண்டி
உப்பு, எண்ணெய் -‍ தேவையான‌ அள‌வு


 

ஓட்ஸ், அரிசிமாவு இர‌ண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, இதில் த‌யிர்/மோரை ஊற்றி, ஓட்ஸ்+மாவு முழுதும் தயிரில் மூழ்கும் படியாக கலந்து ஒரு 15 - 20 நிமிடம் ஊற விடவும்.

வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கலந்து வைத்த ஓட்ஸை மிக்ஸியில் போட்டு, ஊற வைக்க பயன்படுத்திய தயிரையும் அதனுடனேயெ சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். மாவு தோசைமாவு பதத்தைவிட சற்று தண்ணியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

இப்போது இதில், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சீரத்தை போட்டு தேவையான அளவு உப்பையும் சேர்த்து, நன்கு கலக்கி, தோசைக்கல்லில் தோசையாக சுட்டு எடுத்து பரிமாறவும்.

இது, உடனடியா மிகக்குறைந்த நேரத்தில் தயார் செய்துவிடக்கூடிய‌ ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டி!. வெறும் இட்லிப்பொடியுடனேயே சாப்பிட மிக அருமையாக இருக்கும். தக்காளி சட்னியும் நல்ல காம்பினேஷனாக இருக்கும். செய்து பாருங்கள் தோழிகளே!


விருப்ப ப‌ட்டால் ஒரு மிளகாயை குறைத்துக்கொண்டு, பதிலாக ஒரு 1/4 தேக்கரண்டி மிளகை உடைத்துப் போட்டும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

simply super

நன்றி தனலஷ்மி!

அன்புடன்
சுஸ்ரீ

Hai,

oats dosa receipe is really superb. I will try it tomorrow.
Thanks a lot for sharing your idea.

with love
yasskamal

உங்க பாராட்டிற்கு மிக்க நன்றி yasskamal

இப்போதுதான் பார்த்தேன் உங்க பதிவை - அதுதான், தாமதமான பதில்!அப்புற‌ம், ஓட்ஸ் தோசை செய்து பார்த்தீர்க‌ளா?!

அன்புடன்
சுஸ்ரீ

சுஶ்ரீ இன்னிக்கு திடீர் ஓட்ஸ் தோசை செய்தேன். செய்ய ரொம்ப எளிதாக ஆனால் சுவை சூப்பராக இருந்தது. நன்றி சுஶ்ரீ!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப சூப்பர். இப்ப தான் டேஸ்ட் பார்த்தேன், இன்னும் சாப்பிடல. ரொம்ப பிடிச்சிருக்கு சுஸ்ரீ. நல்ல குறிப்புக்கு நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுஸ்ரீ நேற்று காலை திடீர் ஓட்ஸ் தோசை செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. எளிதில் செய்யக்கூடிய சுவையான குறிப்பு வாழ்த்துக்கள்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

Dosai came very well.It was quick , healthy and tasty recipe. Thanks for posting the recipe.