பிஸ்கீமியா (Biskeemiya)

தேதி: January 10, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

மைதா மாவு - ஒரு கப்
உப்பு
பேக்டு பீன்ஸ் இன் டொமேட்டோ சாஸ் - 4 மேசைக்கரண்டி (Can)
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
பூண்டு - 2 பல்
கறிவேப்பிலை
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
Smoked Tuna - சிறிது (விரும்பினால்)
வேக வைத்த முட்டை - ஒன்று (விரும்பினால்)


 

மைதா மாவில் உப்பு சேர்த்து சிறிது எண்ணெய், தேவையான நீர் விட்டு சமோசாக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை கலந்து வதக்கவும்.
இதில் பேக்டு பீன்ஸ் சேர்த்து பிரட்டி விடவும். (மீன் அல்லது பொடியாக நறுக்கிய முட்டை சேர்க்க விரும்பினாலும் இப்போதே சேர்க்கலாம்)
பின் மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து எடுக்கவும்.
மைதா மாவை வட்டமாக திரட்டி கொள்ளவும்.
அதன் நடுவே பீன்ஸ் கலவையை ஒரு தேக்கரண்டி அளவு வைக்கவும்.
இரண்டு பக்கம் மூடி ஒரு தேக்கரண்டி மைதா மாவை நீரில் கரைத்து பேஸ்ட் செய்து அதை கொண்டு ஒட்டவும்.
இதே போல் மற்ற இரண்டு பக்கமும் சேர்த்து மைதா பேஸ்ட் கொண்டு மூடி விடவும்.
இது போல் எல்லாவற்றையும் தயார் செய்து வைத்து கொண்டு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.
சுலபமான சுவையான பிஸ்கீமியா தயார். இதிலும் இந்த ஊர் குட்டி மிருஸ் தான் பயன்படுத்திருக்கிறோம்.
இந்த குறிப்பு மாலத்தீவு சமையலில் பல வருட அனுபவம் உள்ள திருமதி. சித்ரா அவர்கள் செய்து காட்டியது.

மாலத்தீவு சமையலில் எல்லாம் can tuna கலந்திருக்கும். நான் அதை விரும்பாததால் சித்ரா அவர்கள் சேர்க்கவில்லை. நீங்கள் விரும்பினால் சேர்த்து கொள்ளவும். இதில் வேக வைத்த முட்டையையும் பொடியாக நறுக்கி சேர்த்து செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனிதாக்கா சூப்பர். குறிப்பு. நல்ல குறிப்பு கொடுத்திருக்கீன்க.பேரே வித்தியாசமா இருக்கு. ஒரு நாள் ட்ரை பண்ணி பார்க்கிறேன். பேக்டு ப்பின்ஸ் எல்லா இடத்திலும் கிடைக்குமா? சித்ராம்மாவுக்கு என் வாழ்த்தை சொல்லிடுங்க.

வனிதாக்கா குறிப்பு நன்றாகவுள்ளது.நிச்சயம் செய்துபார்க்கிரேன் டூனா சேர்த்து. டூனா கணவருக்கு பிடிக்கும்.

வாவ்... பப்ஸ் மாதிரி இருக்கு.. உள்ளே மீன்... ஆஹா செய்துட்டு சொல்றேன். படங்கள் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள்

"எல்லாம் நன்மைக்கே"

வனிதா மேடம்,

டின் பொருட்களை பிரெஷ் பொருட்களோடு replace செய்யலாமா?
வாழ்த்துக்களை சித்ராவிடமும் சொல்லிடுங்க..

என்றும் அன்புடன்,
கவிதா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. எனக்கு தெரிஞ்சு எல்லா ஊர்லையும் கிடைக்கும். நம்ம ஊரில் சிட்டில சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும். அது இல்லன்னா ஒன்னும் ஃபீல் பண்ணாதீங்க... நீங்க பீன்ஸ் ஊற வெச்சு வேக வெச்சு எடுத்துக்கங்க. கூட தக்காளியை மிக்ஸீயில் அடிச்சு சேருங்க. அவசியம் சித்ராம்மா வந்ததும் சொல்லிடுறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. செய்து பார்த்து பிடிச்சுதான்னு சொல்லுங்க. எனக்கு பிடிச்சது. எண்ணெய் குடிக்கவே இல்லை. இங்க எல்லாரும் டூனா சேர்த்து தான் செய்யறாங்க. எனக்கு என்னவோ அந்த கேன் டூனா சேர்க்க பயம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. ஆவசியம் செய்து பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க. காத்திருக்கேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தாராளமா ரீப்லேஸ் பண்ணலாம். இங்க எல்லாரும் எதையும் ஃப்ரெஷ்ஷா பயன்படுத்துவதில்லை... மீன் தவிற. அதுவும் டூனா என்றால் டின் தான். இத்தனைக்கும் இங்கே டூனா ஃப்ரெஷ்ஷா கிடைக்குது. விலையும் குறைவு. சோம்பேரிதனம் போலும். ;) நீங்க ஃப்ரெஷ்ஷா எல்லாம் சேர்க்கலாம். செய்து பார்த்து சொல்லுங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

wish u a happay pongal to all

பேரு எப்படி கண்டு பிடிக்கறீங்க? வாய்ப்பே இல்ல.... நல்ல ஸ்நாக்ஸ் வனி....பௌல் அழகோ அழகு தான்.. இந்தியாக்கு பார்சல் பண்ணிட்டு வந்துடுங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

பார்க்கும் போதே நன்றாக உள்ளது. கண்டிப்பாக ட்ரை பண்ணி பார்க்கிறேன் இன்றே.நன்றி இப்படி ஒரு நல்ல குறிப்புக்கு.

நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. பேரெல்லாம் நான் வைக்கலங்க, இந்த ஊரில் நம்ம ஊர் சமோசா, இட்லி, தோசைக்கு பேரு வெச்ச மாதிரி இவங்க வேச்சிருக்காங்க ;) செய்து பாருங்க, சுலபமா சுவையா இருந்தது எல்லாம். சித்ராம்மா செய்து கொடுத்ததை எல்லாம் சாப்பிட்ட அனுபவம் :)

ப்ளேட் இங்க வாங்கினது தான்... பார்சல் பண்ணிடுவோம் சுகிக்கு :) (என்ன கலர் வேண்டும்??)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) இன்னைக்கேவா... ஐயா... ஜாலி. செய்துட்டு வாங்க, காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி
நானும் செய்துபார்க்க போகிறேன்

இதுவும் கடந்து போகும்

மிக்க நன்றி. செய்து பார்த்து எப்படி வந்ததுன்னு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா