சட்னி மீன் சாப்ஸ்

தேதி: January 10, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

பொரிச்ச மீன் - 2 துண்டுகள்
தக்காளி - 2
வெங்காயம் - 2
முழு பூண்டு - 2
வரமிளகாய் - 2
தாளிக்க:
கடுகு, உளுந்து, கடலைபருப்பு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெங்காயம் - ஒன்று


 

தக்காளியை நான்காக நறுக்கவும். வெங்காயத்தை நடுத்தரமாக நறுக்கவும். பூண்டுகளை தோல் நீக்கி வைக்கவும்.
சிறிது எண்ணெயில் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பின்னர் தக்காளி, வரமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு குழைந்து வதங்கியதும் இறக்கி ஆற விடவும்.
பின்னர் மைபோல் அரைக்கவும்.
கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும்.
அதில் பொரித்த மீன் துண்டுகளை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் சட்னியை சேர்த்து 2 மீனிலும் மசாலா இறங்கும் வரை (2 நிமிடங்கள் போதுமானது) வைத்திருந்து பின் இறக்கவும்.
சட்னி மீன் சாப்ஸ் தயார். சாத வகைகளுக்கு பொருந்தும். மழைக்காலங்களில் மழையை ரசித்துக்கொண்டே வெறுமனே சாப்பிட அருமையாக இருக்கும்.
இந்த சட்னியை இட்லி தோசைக்கும் சேர்த்து சாப்பிடலாம்.
தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து மீனுக்கு பதில் சாதம் கொட்டி அத்துடன் சட்னியும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கினால் சட்னி சாதம் தயார்.

இந்த சட்னியை ஆற வைத்து பிரிட்ஜில் வைத்துக் கொண்டால் அவ்வப்போது தேவைக்கு உடனடியாக உணவு தயார் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆமினாக்கா சூப்பர். குறிப்பு . பார்க்கவே சாப்பிட தோனுது. இதையும் ஒரு நாள் ட்ரை பண்ணி பார்க்க வேண்டியதுதான். உங்க ரசம் வச்சேன். சூப்பரா இருந்த்து. அங்கேயும் பின்னூட்டம் கொடுத்திருக்கேன் பார்த்துருங்க. . நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா எப்படி இருக்கீங்க உங்கள் profile பார்த்து சிரிப்புத்தான் வந்தது.நீங்கள் தற்பொழுது எங்கு வசிக்குரீர்கள்?குறிப்பு அருமையாகவுள்ளது படங்கள் இன்னும் மெருகூட்டுகின்றன.

பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு. தயிர் சாதத்துக்கு கரெக்ட்டா இருக்கும். இன்னைக்கு மீன் வாங்கி செய்ய போறேன். மிக்க நன்றி.

"எல்லாம் நன்மைக்கே"

ஆமி,
ஆல் இன் ஒன் டிஷ்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ஹ்ம்ம் நாக்கு ஊரும் டிஷ், அழகா பண்ணி காட்டி இருக்கீங்க ஆமி, வாழ்த்துக்கள்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

@நஜீம்
மிக்க நன்றி நஜீம். அங்கேயே பார்த்தேன்.

@kifa
வ அலைக்கும் சலாம் வரஹ்...
நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க நலமா இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். நான் இப்ப என் சொந்த ஊரில் வசிக்கிறேன் பா. வருகைக்கு மிக்க நன்றி.

@பாக்யலெட்சுமி
தயிர்சாதத்துக்கு செம காம்பினேஷன் தான். வருகைக்கு நன்றி

@கவிதா
உங்க 100வது குறிப்புக்குதான் வெய்ட்டிங்க். எப்ப அனுப்ப போறீங்க :-) வருகைக்கு நன்றி

@சுகி
மிக்க நன்றி சுகி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நல்லா இருக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா