ஈசி பொட்டட்டோ கட்லெட்

தேதி: January 11, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 4
வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
இஞ்சி -‍ சிறிய துண்டு
ப்ரட் ஸ்லைசஸ் -‍ 4
வறுத்த சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - ‍ 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
கசூரி மேத்தி - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி/தேவைகேற்ப‌
உப்பு - தேவைகேற்ப‌


 

முதலில் உருளைக்கிழங்கை கழுவிவிட்டு, மைக்ரோவேவ் அவனில் வைத்து வேகவைத்து எடுக்கவும். வெந்து சூடு ஆறியதும், தோலுரித்து கொள்ளவும்.

இஞ்சியை தோலை நீக்கிவிட்டு மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

தோலுரித்த‌ உருளையை காய்கறி துருவதை வைத்து துருவிக்கொள்ள‌வும். இதனுடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, ப‌ச்சை மிளகாய், எல்லா பொடி வகைகள், தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து ரொம்ப‌வும் அழுத்தாம‌ல் க‌லந்து பிசைய‌வும்.

ப்ர‌ட்டை ஒன்றிரண்டாக பிய்த்து மிக்ஸியில் போட்டு ஒரு சில‌ நொடிக‌ள் ப‌ல்ஸ் மோடில் ஓட்ட‌வும். தயாரான ப்ர‌ஷ்ஷான இந்த ப்ரட் க்ர‌ம்ஸை ஒரு பெரிய‌ த‌ட்டில் கொட்டி ப‌ர‌த்தி விட‌வும்.

இப்போது த‌யார் செய்து வைத்திருக்கும் உருளைக்க‌ல‌வையை சிறிய‌ எலுமிச்சை அள‌வுக‌ளாக‌ எடுத்து உருட்டி, லேசாக‌ த‌ட்டி, ப்ர‌ட் க்ர‌ம்ஸ் உள்ள‌ த‌ட்டில் போட்டு, இர‌ண்டு ப‌க்க‌மும் லேசாக‌ அழுத்தி எடுத்து வைக்கவும்.

ஒரு த‌வாவில், சிறிது எண்ணெய்விட்டு, சூடான‌தும் நான்கைந்து க‌ட்லெட்டாக‌ போட்டு ஷாலோ ஃப்ரை செய்யவும்.

இப்போது சுவையான பொட்ட‌ட்டோ க‌ட்லெட் த‌யார்! கெட்சப் உடன் பரிமாற நன்றாக ஒருக்கும்.

இதையே கொஞ்சம் பெரிய அளவில் செய்து, பன்னிற்கு நடுவில் வைத்து, ஒரு சீஸ் ஸ்லைஸ் சேர்த்து சான்ட்விச் மாதிரியும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


உருளையை வேகவைக்கும்போது தண்ணீர் ரொம்ப சேர்க்காமல் இருப்பது அவசியம். அப்போதுதான் உருளை துருவி சேர்க்க தகுந்தமாதிரி இருக்கும். இதற்கு மைக்ரோவேவ் அவ‌னில் வேக‌வைத்தால் ரொம்ப‌ பெஸ்ட்டாக‌ இருக்கும். இல்லையானால், குக்க‌ரில் ரொம்ப‌ த‌ண்ணீர் சேராம‌ல் வேக‌வ‌த்து எடுத்துக்கொள்ள‌லாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ur recipe expalnation s very gud.. can we do this without kasturi methi.. is it very neccesary madam.

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி லின்சி!
கசூரி மேத்தி சேர்ப்பது எக்ஸ்ட்ரா ஃப்ளேவருக்காகத்தான். இல்லாமலும் செய்யலாம், நன்றாகவே இருக்கும். செய்து பார்த்தால், எப்படி இருந்ததென்று வந்து சொல்லுங்கள்.
அப்புறம், மேடம் எல்லாம் வேண்டாமே... அதை கட் பண்ணிடுங்கள்! :) நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

kandipa senjutu solran ka