பச்சடி & பொரி

தேதி: January 11, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (3 votes)

 

வடகம் வாழைப்பழ தயிர் பச்சடி:
வடகம் - அரை கப்
வாழைப்பழம் - ஒன்று
தயிர் - ஒரு கப்
கொத்தமல்லி - 2 கொத்து
கடுகு - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
வெஜ் பொரி:
பொரி - 1 1/2 கப்
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
காரட் - பாதி
கொத்தமல்லி - ஒரு கொத்து
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி


 

<b>வடகம் வாழைப்பழ தயிர் பச்சடி:</b> வாழைப்பழத்தை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வடகத்தை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதைப் போல கடுகை தாளித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் நறுக்கின வாழைப்பழத்தை போட்டு அதனுடன் கடுகை போடவும்.
அதன் பிறகு இந்த வாழைப்பழத்துடன் தயிர், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
அதில் பொரித்த வடகத்தையும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
மேலே கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.
<b>வெஜ் பொரி:</b> தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயம், காரட், கொத்தமல்லி மூன்றையும் பொடியாக நறுக்கவும்.
ஒரு தட்டில் நறுக்கின தக்காளி, காரட், வெங்காயம், கொத்தமல்லி, மிளகாய் தூள், உப்பு போட்டு நன்கு பிசறி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
பரிமாறும் போது அதில் பொரியை கலந்து பரிமாறவும். முன்பே கலந்து வைத்தால் நமுத்து போயிடும்.
எளிதில் செய்து விடக் கூடிய ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நாளைக்கு பின்னாடி இப்போ தான் அறுசுவைக்கு வந்தேன், முகப்புல போட்டோ பாத்துட்டு ஆசையா வந்தேன். ரொம்ப வித்தியாசமா இருக்கு. இந்த மாதிரி பச்சடி கேள்வி பட்டது இல்ல. நேரம் கிடைக்கும் பொது கண்டிப்பா பண்ணி பாக்கறேன். வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எனக்கு பொரி ரொம்ப பிடிச்சிருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா