கேப்சிகம் இடியாப்பம் சமையல் குறிப்பு - 21555 | அறுசுவை


கேப்சிகம் இடியாப்பம்

food image
வழங்கியவர் : ஆமினா
தேதி : வியாழன், 12/01/2012 - 10:17
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

 • இடியாப்பம்-6
 • கேப்சிகம்-1
 • பச்சைமிளகாய்-1
 • கறிவேப்பிலை- ஒரு கொத்து
 • கொத்தமல்லி-சிறிதளவு
 • வெங்காயம்-2
 • தக்காளி-1
 • இஞ்சிபூண்டு விழுது-2 ஸ்பூன்
 • மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
 • முட்டை-2
 • கடுகு,உளுந்து,கடலைபருப்பு- ஒரு ஸ்பூன்

 

 • இடியாப்பத்தை ஆறவைத்து ப்ரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரங்களுக்கு பின் உதிர்த்துவிடவும். (இப்படி செய்வதால் நன்கு உதிர்த்துவரும். ஒட்டவும் செய்யாது)
 • கேப்சிகம் ஒரு இஞ்ச் நீளவாக்கில் மெல்லிய அகலத்துடன் நறுக்கி வைக்கவும். விதைகள் வேண்டாம்.
 • எண்ணெயில் கடுகுளுந்து, கடலைபருப்பு சேர்த்து தாளிக்கவும்.
 • வெடித்ததும் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்
 • அதன் பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், கேப்சிகம் சேர்த்து முக்கால் பாகம் கேப்சிகம் வேகும் வரை வதக்கவும் (நீர் ஊற்ற கூடாது)
 • முட்டையை உடைத்தூற்றி நன்கு கிளறவும்.
 • பின்னர் உதிர்த்து வைத்த இடியாப்பம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்.
 • கேப்சிக இடியாப்பம் தயார். சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.