கேப்சிகம் சோயா சன்னா மசாலா சமையல் குறிப்பு - 21556 | அறுசுவை


கேப்சிகம் சோயா சன்னா மசாலா

food image
வழங்கியவர் : ஆமினா
தேதி : வியாழன், 12/01/2012 - 10:19
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

  • கேப்சிகம்-1
  • மில்மேக்கர்-20 உருண்டைகள்
  • சன்னா- ஒரு கப்
  • வெங்காயம்-2
  • தக்காளி-2
  • இஞ்சிபூண்டு விழுது-3 ஸ்பூன்
  • பச்சைமிளகாய்-2
  • மிளகாய் தூள்- அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- கால் ஸ்பூன்
  • சீரகத்தூள்- அரைஸ்பூன்
  • மிளகுதூள்- அரைஸ்பூன்
  • கறிமசாலா தூள்- 1 1/2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை-ஒருகொத்து
  • உப்பு-தேவைக்கு
  • எண்ணெய்-தாளிக்க

 

  • சன்னாவை முதல் நாளே ஊற வைத்து வேக வைத்து எடுக்கவும்.
  • மில்மேக்கரை சுடுநீரில் ஊறவைத்து 3 நிமிடங்கள் கழித்து நீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும்.
  • கேப்சிகமை சதுரமாக நறுக்கி வைக்கவும். (விதை தேவையில்லை)
  • எண்ணெயில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்
  • பொன்னிறமானதும் இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்
  • தக்காளி துண்டுகளை சேர்த்து குழைய வதக்கவும்.
  • கேப்சிகம் அரைபதமாக வேகும் அளவுக்கு வதக்கவும்.
  • பின்னர் சன்னா, மில்மேக்கர் மற்றும் மசாலா தூள்களை சேர்த்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி வேகவிடவும். சுருண்டதும் இறக்கி பரிமாறவும்.
  • இது சப்பாத்தி,பூரிக்கு ஏற்றது.