கேழ்வரகு கூழ்

தேதி: July 18, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 1.5 (2 votes)

 

கேழ்வரகு மாவு - கால் படி
தேங்காய்ப் பால் - 400 மில்லி
சீனி - 50 மில்லி
உப்பு - ஒரு ஸ்பூன்
தண்ணீர் - 3/4 லிட்டர்


 

மேலே சொல்லியுள்ள அளவில் தண்ணீர் எடுத்து கேழ்வரகு மாவில் நன்றாக கலக்கி, பிறகு அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கட்டி விழாமல் கிண்டவும்.
மாவுவெந்து திக்கலான கூழ் பதத்தில் வந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய்ப் பால் ஊற்றி, உப்பு, சீனி சேர்த்து கலக்கி ஒரு தட்டையான பாத்திரத்தில் ஊற்றவும்.
ஆவியும் சூடும் குறைந்தவுடன் அதை ஃபிரிட்ஜில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர்ந்தவுடன் எடுத்து சாப்பிடலாம்.
இது மிகவும் சத்தான ஒரு பாரம்பரிய உணவு.


விருப்பமுள்ளவர்கள் (சாப்பிடும் சமயத்தில்) இத்துடன் 2 ஸ்பூன் கெட்டித்தயிர் சேர்த்து கலக்கியும் சாப்பிடலாம். இதை காலை டிஃபனாக சாப்பிடுபவர்கள் முதல் நாள் இரவே செய்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளலாம். ஃபிரிட்ஜ் குளிர்ச்சி ஒத்துக்கொள்ளாதவர்கள் தேங்காய்ப்பால் சேர்க்காமல் செய்துவைத்து மறுநாள் காலையில், தேங்காய்ப்பால் மட்டுமோ அல்லது தயிரும் சேர்த்தோ சாப்பிடலாம். நன்றாக ஆறி சாப்பிட்டால்தான் சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்