ஈஸி மீன் வறுவல்

தேதி: January 12, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (8 votes)

 

மீன் - 5 துண்டுகள்
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
ஆரஞ்ச் கலர் - சிறிதளவு (விருப்பப்பட்டால் மட்டும்)
எண்ணெய் - பொரிக்க தகுந்த அளவு


 

மீனை சுத்தம் செய்து வைக்கவும். மற்ற பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
மீனில் உள்ள நீரை நன்கு வடித்து அத்துடன் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு குலுக்கி அரை மணி நேரம் ஊற விடவும்.
எண்ணெயை சூடாக்கி பின்னர் மீன் துண்டுகளை போட்டு 2 பக்கமும் திருப்பி விட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான உடனடி மீன் வறுவல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

200வது குறிப்புக்கு வாழ்த்துக்கள் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆமினா மேடம் மீன் வறுவல் மிகவும் அருமை... 200வது குறிப்பிற்கு வாழ்த்துக்கள்

ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள். நான் எப்பவுமே மீனை தோசை கல்லில் போட்டு தான் சுட்டு எடுப்பேன். எண்ணையில் போட்டு பொரித்தால் மசாலா எண்ணையில் போயிடுது, மீன் மட்டும் தனியா வந்திடுது. மீனில் மசாலா ஒட்டி வர என்ன செய்யலாம் எதாச்சும் சீக்ரெட் இருந்தா சொல்லுங்க ஆமீனா...
இது உங்களோட இருநூறாவது குறிப்பா.. மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்...

"எல்லாம் நன்மைக்கே"

ஹாய் ஆமினா அஸ்ஸலாமு அலைக்கும்
நலமா ரொம்ப நாள் ஆனது பேசி ஆமினா
மீன் பொரியல் அழகா இருக்கு 200 குறிப்புகள் குடுத்ததுக்கு வாழ்த்துக்கள்........)))))

எல்லா புகழும் இறைவனுக்கே!

என்றும் அன்புடன்,
ஷிரின்

very nicee !!!!