சுகர் குறைய .......

Hello., என் அன்புக்குரிய அறுசுவை தோழிகளே ....

எனக்கு சுகர் அதிகமா இருக்குனு Dr. சொன்னங்க. Diet Food முலமாக சுகர் குறைக்க முடியும் சொன்னங்க. நான் எந்த மாதிரி Food எடுக்கணும்.,எதை எல்லாம் தவிர்க்கணும். என்ன பண்ணின சுகர் நார்மல் வரும். பிளஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. இபோ எனக்கு 8month ஸ்டார்ட் ஆகுது.

வெள்ளை சர்க்கரையை அறவே தவிர்த்துடுங்க..இனிப்புக்கு ஆசை வரும்போது கொஞ்சமா வெல்லம்,கறுப்பட்டி அப்படி எதாவது சேத்துக்கலாம்.பொறுமையா நிதானமா மென்னு அரைத்து கூழ் போல சாப்பிடுறதை இறக்குங்க.அவசரமா சாப்பிடவே கூடாது.பாவக்காய் சேத்துக்குங்க.தினமும் வாக்கிங் போங்க.

கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகர் வருவது நார்மல் தான்.அதனால் பயப்படாதீங்க.
சாதத்தின் அளவை குறைத்து,காய்கறிகள் அதிகம் சேர்த்து சாப்பிடுங்க.பழச்சாறை தவிர்த்து பழங்களாக சாப்பிடுவது நல்லது.பால்,ஜூஸ் இவற்றில் சர்க்கரை சேர்க்காமல் குடிங்க.வொயிட் ப்ரெட்-க்கு பதில் வீட் ப்ரெட் சாப்பிடுங்க.ஒரு வேளை அரிசி உணவுக்கு பதில் கோதுமை,கேழ்வரகு சேர்த்துக்கோங்க.சப்பாத்தி,அடை இப்படி சாப்பிடலாம்.
நல்ல படியாக குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

Very Thanks da. நல்ல ஐடியா குடுத்து இருக்கேங்க. நான் இதையே செய்து பார்கறேன். நான் P.Ch Person. என்னால் வாக் பண்ண முடியாது. சாபிடுவதற்கு எதாவது ரேசிபே இருந்த சொலுங்க pls

Very Thanks mam . நீங்களும் நல்ல ரேசிபே இருந்த சொலுங்க சுகர் குறைய... நீங்க சொன மாதிரி சாதம் குறைசுகறேன். எனக்கு ராகில எதாவது ரேசிபே இருந்த சொலுங்க பிளஸ் அண்ட் அலசோ கம்பு அண்ட் கேழ்வரகு.

1. சுகர் உள்ளவங்க எந்த உணவையும் கஞ்சியாக எடுத்துக் கொள்ள கூடாதாம். ஓட்ஸ் உகந்தது இல்ல.
2. கோதுமை, சோயா, கேழ்வரகு, சோளம் இப்படி அரைத்த மாவில் தோசை, சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம்.
3. காலையில் வெறும் வயிற்றில் வெந்தய பொடி, பட்டை பொடி சாப்பிடவும். வெந்தயத்தை ஊற வைச்சு மென்னும் சாப்பிடலாம்.
4.பழங்கள் ஆப்பிள் தோலுடன் 2, 3 துண்டுகள் சாப்பிடலாம். சாத்துக்குடி 2, 3 சுளைகள் மட்டும்.
5. உடம்பில் நல்ல கொழுப்பு அதிகரிக்க தினமும் 5 பாதாம் அல்லது வேர்க்கடலை அல்லது வால்நட் சாப்பிடலாம்.
இது டாக்டர் சொன்ன அட்வைஸ் தான் இன்னும் இருக்கு. பிறகு சொல்கிறேன்.

அதாங்க அவங்க விவரமா சொல்லிட்டாங்களே.வெள்ளையான உணவுகளை குறைச்சுடுங்க அல்லது தவிர்த்துடுங்க..அப்படியே ஆசை பட்டால் சிகப்பரிசி சோறு சாப்பிடலாம்.சப்பாத்தி,ராகி களி,ராகி புட்டு,ராகி இடியப்பம்,கம்பு கூழ்,சத்து மாவு கூழ் எவ்வளவு இருக்கு

அதாங்க அவங்க விவரமா சொல்லிட்டாங்களே.வெள்ளையான உணவுகளை குறைச்சுடுங்க அல்லது தவிர்த்துடுங்க..அப்படியே ஆசை பட்டால் சிகப்பரிசி சோறு சாப்பிடலாம்.சப்பாத்தி,ராகி களி,ராகி புட்டு,ராகி இடியப்பம்,கம்பு கூழ்,சத்து மாவு கூழ் எவ்வளவு இருக்கு

நடக்க முடியலன்னா என்ன... பரவாயில்லை. சாப்பாட்டிலேயே குறைக்கலாம். :) சரியா?

1. தினம் பாவக்காய் சம்பந்தப்பட்ட எதையாவது சாப்பிடுங்க. (http://www.arusuvai.com/tamil/recipes/235 - இந்த லின்க்’ல் நிறைய பாவக்காய் குறிப்பு இருக்கு)

2. கொய்யா பழம், வெள்ளரிபிஞ்சு சாப்பிட்டா நல்லது.

3. வாழைப்பழம் சுத்தமா கூடாது.

4. சாதாரண அரிசிக்கு பதிலா ப்ரவுன் ரைஸ் எடுத்துக்கங்க.

5. ரெகுலர் ப்ரெட்டுக்கு பதிலா வீட் ப்ரெட் எடுத்துக்கங்க.

6. கோதுமை, ராகி, ஓட்ஸ் சேர்த்துக்கலாம். (http://www.arusuvai.com/tamil/recipes/220 - ஓட்ஸ், http://www.arusuvai.com/tamil/recipes/219 - ராகி,
http://www.arusuvai.com/tamil/recipes/215 - கோதுமை - இதில் உருளை இருப்பது வேண்டாம்)

7. உருளைக்கிழங்கு வேண்டாம்.

8. நிறைய நட்ஸ், தானிய வகை உணவுகள் எடுக்கலாம்.

9. வெந்தயம் சாப்பிடலாம்.

வேறு எதாவது வேணும்னா கேளுங்க, நேரம் இருக்கும்போது கண்டிப்பா தேடி தரேன். சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சர்க்கரை ஒரு நோயே கிடையாது மற்றும் அது கட்டுப்படுத்தவேண்டிய விசயம் அல்ல, விரட்டி அடிக்க வேண்டிய விசயம்.
சர்க்கரை குறைபாட்டினை கண்டிப்பாக குணப்படுத்த முடியும். நிறைய பேர் குணமாகியுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு
வெங்கட்
9865824794

எனக்கும் sugar இருந்துது மா. இத கவனிக்காததால முதல் குழந்தை 4 month ல அபார்ஷன் ஆகிட்டுது. அப்புறமா 4 month கழிச்சு மறுபடியும் கன்சிவ் ஆனேன். எனக்கு டாக்டர் Metformin 500 tablet குடுத்தாங்க. டயட் இருக்க சொன்னாங்க. நான் காலைல வாக்கிங்க் போனேன் வேகமாக இல்லை மிக மெதுவாக ஒரு 4 ரவுன்ட் பின் 7 மணிக்கு ப்ரோட்டின் பவுடர் குடிப்பேன். 8.30 க்கு 2 தோசை சாப்பிடுவேன். 11 மணிக்கு கொன்டைகடலை சாப்பிடுவேன். 1 மணிக்கு கொஞ்சம் சாதம் நிறைய காய்கறிகள். தண்ணீர் காய்கறிகள் like சுரைக்காய், புடலங்காய் etc., முருங்கை கீரை சேர்த்துக்குவேன். 3 மணிக்கு 1 டம்ளர் பால் வித் பிஸ்கட், இடையே பழங்கள் ஓவ்வொரு துண்டு. evening சின்ன வாக்கிங். நைட் ஓட்ஸ், or கோதுமை தோசை. 1 டம்ளர் பால், பாகற்க்காய் நிறைய எடுத்துக்கிட்டேன். பால் நிறைய குடித்தேன். சுரைக்காய் எடுத்துக்கிட்டா பனிக்குட நீர் நன்றாக இருக்குமாம். குழந்தைக்கு பால் நன்றாக இருக்குமாம். அப்புறம் குழந்தை அசைவை நன்றாக கவனித்து கொள்ள சொன்னார்கள். ஒரு நாளைக்கு எத்தனை தடவை அசைந்தான் என்பதை நோட் பன்ன சொன்னார்கள். இதெல்லாம் செய்தும் 8 மாதத்தில் sugar கூடிவிட்டது. பின் இன்சுலின் இஞ்சக்சன் போட சொன்னார்கள் தினமும் மதியம் சாப்பாட்டிற்க்கு முன் 3 point போட்டு கொள்வேன். blood செக்கப் காலைல fasting, afternoon after meal 2 hour chek பன்னிக்குவேன். டாக்டர் phone no என்கிட்ட இருக்கு blooa sugar அதிகமானா அவங்ககிட்ட கால் பன்னி கேட்டுகுவேன். நல்லா வாக்கிங் போனேன். இப்ப 2மாத ஆண் குழந்தை உள்ளது. கவனமா பாத்துக்கோங்க குளுக்கான் மீட்டர் வாங்கி வச்சுக்கிட்டு அடிக்கடி blood chek பன்னிக்கோங்க. டாக்டர் நம்பர் வாங்கி வச்சிக்கோங்க. கவலை படாதீங்க கவலைனால கூட sugar ஏறும். நல்ல படியா குழந்தை பெற்று எடுக்க என் வாழ்த்துகள். வேறு எதாவது இருந்தா சொல்கிறேன். ok all the best.

என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ

மேலும் சில பதிவுகள்