பொங்கல் பலகறிக் குழம்பு

தேதி: January 14, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பூசணி, பரங்கி, கத்தரி, காரட், உருளைக்கிழங்கு,
சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு,
வாழைக்காய் - சற்று பெரிதாக நறுக்கிய துண்டுகள் தலா கால் கப்
மொச்சைக் கொட்டை, பட்டாணி - கால் கப்
அவரை, கொத்தவரை, பீன்ஸ் - கால் இன்ச் நீள துண்டுகள் தலா 1/8 கப் (கால் கப்பில் பாதி)
துவரம் பருப்பு - கால் கப்
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
பெருங்காயம் - ஒரு துண்டு
கடலைப் பருப்பு - 4 தேக்கரண்டி
தனியா - 6 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10 முதல் 15
துருவிய தேங்காய் - அரை கப்
தாளிக்க:
கடுகு - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை


 

புளியுடன் 4 கப் நீர் சேர்த்துக் கரைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள காய்கறிகளை அதன்படி நறுக்கி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3 மேசைக்கரண்டி எண்ணெயில் முறையே பெருங்காயம், கடலைப் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல், தேங்காய் முதலியவற்றை தனித் தனியே சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸியில் பொடியாக்கவும்.
காய்கறித்துண்டுகளை நீர் சேர்த்து நசுங்கும் பதத்திற்கு வேக வைத்து வடிகட்டவும்.
புளிக்கரைசலைக் கொதிக்கவிட்டு சற்று புளிவாசனை போனதும் பாதி வெந்த காய்கறிகள், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து சேர்ந்து கொண்டதும், அதில் பொடி செய்த கலவை, வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
10 நிமிடம் கொதித்ததும் இறக்கி, ஒரு மேசைக்கரண்டி எண்ணெயில் கடுகு, வாய் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து தாளித்து போடவும். மேலே கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
கமகமக்கும் பொங்கல் ஸ்பெஷல் குழம்பு ரெடி. விருப்பப்பட்டால் இதில் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்க்கலாம். எல்லா காய்கறிகளும் கிடைக்காவிட்டால் இருக்கும் காய்கறிகளை வைத்தும் இந்தக் குழம்பு செய்யலாம். முருங்கை, முள்ளங்கி, வெங்காயம் இதில் சேர்ப்பதில்லை.
எல்லாரும் சர்க்கரைப் பொங்கலுடன் என் பாட்டி செய்து காட்டியுள்ள இந்த ஸ்பெஷல் குழம்பும் செய்து பொங்கலை கோலாகலமாகக் கொண்டாடுங்கள்! பொங்கலோ பொங்கல்!!


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பொங்கல் பல கறிக்குழம்பு அருமையாகவுள்ளது.

பொங்கல்களுக்காக நீங்க செய்து காட்டிய ஸ்பெஷல் குழம்பா ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள். உங்க பேத்தியும் க்யூட்.

ராதாம்மா சூப்பர்ப் நாளைக்கு செய்ய வேண்டியத இப்பவே செய்துட்டீங்களா எங்களுக்காக செய்து காட்டியதற்கு ரொம்ப நன்றிம்மா. இவங்க யாரு மூணாவது பேத்தியா இவங்க பேரு என்ன.
பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்

பொங்கல் பலகறிக் குழம்பு நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்

ராதாம்மா நான் இன்று உங்கள் பொங்கல் பலகறிக் குழம்பு தான் செய்தேன் நன்றாக வந்தது. இன்னிககு தான் முதன் முதலா பொங்கல் கறி செஞ்சேன் சூப்பரோ சுப்பர்ர்ர்ர்ர்ர். வாழ்த்துக்கள்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

பொங்கல் பல‌கறிக் குழம்பு பார்த்ததுமே பொங்கலுக்கு செய்தாச்சு! சுவை அருமை! நல்ல அருமையான குறிப்புக்கு நன்றி!

உங்க பேத்தி ரொம்ப க்யூட்.

அன்புடன்
சுஸ்ரீ

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவைக் குழுவினர்க்கு நன்றி...

கிஃபா....வினோஜா....வாழ்த்துக்கு நன்றி...

முகில்....பொங்கல் அன்று குழம்பு செய்தாயா? இது என் முதல் பேத்தி...பெயர் சோஃபியா...

ஆனந்தி....வாழ்த்துக்கு நன்றி...

ஷிபா, சுஸ்ரீ.....செய்து பார்த்து சாப்பிட்டு மகிழ்ந்ததற்கு மிக்க நன்றி...

ரொம்ப நல்ல குறிப்பு இத நான் எங்க சொந்தகாரங்க வீட்ல சாப்டுருக்கேன் நல்லா இருக்கும் கண்டிப்பா செய்றென் ஆன்ட்டி ரொம்ப சூப்பர் குறிப்பு குட்டியும் சூப்பர்.

அன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு

நன்றி மீனு....எங்கப்பா உன்னை ஆளையே காணும்? எல்லாரும் அறுசுவையை மறந்தாச்சா?