முந்திரி பர்பி

தேதி: July 19, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

ஒடித்த முந்திரிப்பருப்பு - 2 கப்
பொடித்த சர்க்கரை - 1 கப்
பால் - 1 கப்
நெய் - 1 கப்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்


 

முந்திரிப் பருப்பை 2 - 3 மணி நேரம் பாலில் ஊற வைத்து, பின் நன்றாக அரைத்து எடுக்கவும்.
தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
வாணலியில் நெய் சேர்த்து முந்திரி விழுது, சர்க்கரை, ஏலக்காய் பொடி போடவும்.
நன்றாக கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.
பிறகு நெய் சேர்த்து, வாணலியில் ஓரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, நெய் தடவிய தாம்பாளத்தில் ஊற்றி, நன்றாக ஆறியவுடன் வில்லைகளாக வெட்டவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மேடம், உங்களோட நிறையக் குறிப்பை செய்து பார்த்து இருக்கேன். எல்லாமே நல்ல வந்து இருக்கு. இந்தக் குறிப்புல ஒரு சந்தேகம். பொடித்த சர்க்கரை ன்னு நீங்க சொல்லியிருக்கறது நாட்டுச் சக்கரையா.. சீனியா..? பதில் தரவும்.

சீனியை நன்றாக பொடித்து போடவேண்டும்.