ஈசி பிஷ் ப்ரைட் ரைஸ்

தேதி: January 15, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

சாதம்- ஒருகப்
பொரிச்சமீன் -2துண்டுகள்
கேரட்,பீன்ஸ்,கோஸ்-ஒரு கப்
நெய்-3 ஸ்பூன்
சோயாசாஸ்- 2 ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
தக்காளிசாஸ்-1 குழிகரண்டி
வினிகர்- 2 ஸ்பூன்
வெங்காயம்-2
முட்டை-1
கறிவேப்பிலை-சிறிதளவு
பச்சைமிளகாய்-1
பூடு-4 பல்


 

மீனை முள் இல்லாமல் எடுத்து வைக்கவும்

சாதத்தை உதிரியாக வடித்து எடுத்துக்கொள்ளவும்

கடாயில் நெய் விட்டு கறிவேப்பிலை, பச்சைமிளகாய்,பூடு சேர்த்து தாளிக்கவும்

வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் முட்டை உடைத்தூற்றி நன்கு கிளறிவிடவும்

மீன் சேர்த்து வதக்கியபின் காய்கறிகளை சேர்க்கவும்.

பின்னர் சாஸ் வகைகள் மற்றும் வினிகரை சேர்த்து காய்கறிகளை வேகவிடவும்

சாதத்தை கொட்டி கிளறி பின்னர் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மேலே சாக்லெட் படம் தெரியுதே :-))

அன்பை ஒரு தடவை கொடுத்துப்பார் அது ஆயிரம் முறை திரும்ப வருவதை பார்ப்பாய்

எனக்கு வட்டமா வெங்காய பஜ்ஜி மாதிரி தெரிஞ்சுது ஜெய். ;))
இங்க வந்தா நல்ல பையனா குறிப்பைப் படிச்சு 'நல்ல குறிப்பு'ன்னு சொல்லிட்டு கிளம்பணும். இப்பிடி டவுட்டு கேக்கப்படாது. ;)

ஆமி குறிப்பு புடிச்சு இருக்கு. ட்ரை பண்ணதும் திரும்ப வந்து கமண்ட் போடுறேன். அடுத்த தடவை சமைக்கிறப்ப படம் எடுத்து டீமுக்கு அனுப்புங்க, இந்த லிங்க் கூட. ஜெய் மாதிரி ஆளுங்க சாக்லேட்னு நினைக்காம இருப்பாங்க. ;)

‍- இமா க்றிஸ்