மீன் குழம்பு சமையல் குறிப்பு - படங்களுடன் - 21589 | அறுசுவை


மீன் குழம்பு

வழங்கியவர் : amina mohammed
தேதி : செவ்வாய், 17/01/2012 - 14:30
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4.666665
6 votes
Your rating: None

 

 • மீன் - அரைக் கிலோ
 • புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
 • தக்காளி - 3
 • வெங்காயம் - 2
 • பச்சைமிளகாய் - 4
 • கத்தரிக்காய் - 4
 • வெண்டைக்காய் - 4
 • கறிவேப்பிலை - ஒரு கொத்து
 • எண்ணெய் - 2 குழிக்கரண்டி
 • உப்பு - தேவைக்கு
 • மீன் குழம்பு தூள் - 5 தேக்கரண்டி
 • மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி (குழம்பு பொடியில் மிளகாய் சேர்க்கவில்லை என்றால் 2 ஸ்பூன் போட்டுக் கொள்ளலாம்)

 

மீனை நறுக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும்.

புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும். அதில் மீன் குழம்பு தூள் சேர்த்து கரைக்கவும். பின் தக்காளி, பச்சைமிளகாய், கத்தரிக்காய் (இரண்டாக வெட்டி நடுவில் இரு கீறல் விடவும்), வெண்டைக்காய் சேர்க்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை தாளிக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்னர் மிளகாய் தூள் சேர்த்து நெடி போக வதக்கவும்.

அதன் பிறகு புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.

நன்கு கொதித்து மசாலா வாசனை அடங்கியதும் மீன் துண்டுகளை வெவ்வேறு இடங்களில் போடவும். அத்துடன் தேவைக்கு ஏற்ப உப்பையும் சேர்க்கவும்.

மீன் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..மீன் குழம்பு

மீன் குழம்பு அருமையாகவுள்ளது.நிச்சயம் செய்து பார்க்கிரேன்.படங்கள் இன்னும் ருசியைத் தூண்டுகிறது. வாழ்த்துக்கள்.

ஆமி....

ஆமி...இதே முறையில் நான் கருவாடு போட்டு செய்வதுண்டு.மீன் குழம்பு காய் போட்டு செய்ததில்லை.இந்த செய்முறையில் செய்து பார்க்கிறேன்..:)

radharani

மீன் குழம்பு பொடி எப்படி

மீன் குழம்பு பொடி எப்படி செய்யணும்? மீன் துண்டங்களை பாத்தாலே குழம்பு சாப்பிடணும் போல இருக்கு..... இது என்ன வகை மீன்?

நன்றி

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ப்ரியா ஜெயராம்

http://www.arusuvai.com/tamil/node/16363

இந்த லிங்கில் புளிகுழம்புதூள் செய்முறை கொடுத்துருக்கேன். அதே தூள் தான் இதற்கும்.

படத்தில் உள்ளது மொரல் மீன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா