பட்டர் குக்கீஸ்

தேதி: January 17, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

வெண்ணெய் - 1/2 கப்
ஆல் பர்ப்பஸ் மாவு/மைதா - 1 கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
உப்பு - 1 சிட்டிகை

வெண்ணிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
பால் - 1 (அ) 2 தேக்கரண்டி (தேவைப்ப‌ட்டால்)


 

முதலில், வெண்ணையையும் பொடித்த சர்க்கரையையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, பீட்டரால்/ பெரிய ஃபோர்க்கால் நன்கு கலக்கவும். சர்க்கரை நன்கு கரைந்து வெண்ணெய் குழைந்து வந்தால், குக்கீஸ் சாஃப்ட்டாக வரும்.

ஒரு சல்லடையில், ஆல்பர்ப்பஸ் மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு சலித்து எடுத்துக்கொள்ளவும்.

இதனை அடித்து வைத்திருக்கும் வெண்ணெய் கலவையில் போட்டு நன்றாக சேர்த்து பிசையவும். எசன்ஸ் சேர்ப்பதாக இருந்தால், மாவு பிசையும்போதே சேர்த்துவிடவும். (மாவு ரொம்பவும் சேராமல், அங்கங்கே வறண்ட மாதிரி தெரிந்தால், சிறிது பாலை தெளித்து பிசைந்து கொள்ளலாம்.)

ஒரு பேக்கிங் ட்ரேயில், அலுமினியம் ஃபாயில் விரித்து, தயார் செய்து வைக்கவும்.

பிசைந்து வைத்திருக்கும் மாவை பெரிய நெல்லிக்காய் அளவிற்கு கிள்ளி, உருண்டைகளாக உருட்டி ட்ரேயில் வைக்கவும். பின்னர், ஒரு ஃபோர்க் கொண்டு ஒவ்வொரு உருண்டையையும் லேசாக அழுத்திவிடவும்.

இதனை, 350 டிகிரி முற்சூடு செய்த அவனில் வைத்து, 10 - 12 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

இப்போது சுவையான க்ரிஸ்ப்பி பட்டர் குக்கீஸ் தயார்!


அவரவர் அவனிற்கு ஏற்றமாதிரி பேக்கிங் செய்யும் நேரத்தை அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் ரொம்ப நாளா இப்பிடி ஒரு இலகுவான பிஸ்கட் அயிட்டம் தேடிட்டு இருந்தேன் .செய்து பார்த்துடுவோம்,
பேக்கிங் சோடா - என்பது என்ன அது இல்லாமல் செய்யலாமா?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

உங்களுக்கு குறிப்பு பிடித்திருப்பதில் ரொம்ப மகிழ்ச்சி! பேக்கிங் சோடா என்பது, பொதுவா கேக், பிஸ்கட் போன்ற பேக் செய்து எடுக்கும் ஐய்ட்டங்களில்,அவை நன்றாக எழும்பி/பொங்கி வருவதற்காக சேர்க்கப்படுவது. சோடா சேர்க்காமல் செய்தால், அந்த அளவுக்கு உப்பி மொருமொருப்பா வராமல், கொஞ்சம் தட்டையாக வரும்னு நினைக்கிறேன். நான் செய்து பார்த்ததில்லை. வேண்டுமானால், அதற்கு பதில் நம்ம சமையல் சோடா சேர்த்து கொஞ்சமா செய்து பாருங்க.

பேக்கிங் சோடா, கடைகளில் பேக்கிங் பொருட்கள் எல்லாம் வைத்திருக்கும் செக்ஷெனில் கிடைக்கும். செய்து பார்த்து சொல்லுங்க, எப்படி இருந்ததுன்னு. நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ