காய்கறி குருமா

தேதி: January 18, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (8 votes)

 

1. காய்கறி கலவை - 2 கப் (கேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி, சன்னா)
2. வெங்காயம் - 1 [பெரிது]
3. தக்காளி - 2 [பெரிது]
4. உப்பு

அரைக்க 1:

4. பச்சை மிளகாய் - 2
5. இஞ்சி - 1 சிறு துண்டு
6. பூண்டு - 3 பல்
7. சோம்பு - 1/4 தேக்கரண்டி

அரைக்க 2:

8. தேங்காய் துருவல் - 1/2 கப்
9. முந்திரி - 5
10. பொரிகடலை - 1 தேக்கரண்டி

தாளிக்க:

11. எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
12. பட்டை - சிறு துண்டு
13. லவங்கம் - 2
14. ஏலக்காய் - 2


 

காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து வைக்கவும்.
அரைக்க 1’ல் இருப்பவற்றை தனியாகவும், 2’ல் இருப்பவற்றை தனியாகவும் நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இதில் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த கலவை சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் வேக வைத்த காய்கறி கலவை மற்றும் தேங்காய் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு எடுக்கவும்.


சன்னா சேர்ப்பதாக இருந்தாலும், காய்ந்த பட்டாணி சேர்ப்பதாக இருந்தாலும் ஊற வைத்து தனியாக வேக வைத்து சேர்க்கவும். காய்கறியுடன் சேர்த்து வேக வைத்தால் காய் குழைந்து போகும். சப்பாத்தி, தோசை, இட்லி, ஆப்பம் அனைத்துக்கும் சூப்பர் காம்பினேஷன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

athan udan verkadalai serththuaraithal suvai kodum.

அடுத்த முறை நிச்சயம் சேர்த்து செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நேற்று இந்த‌ குருமா செய்தேன். நன்றாக‌ இருந்தது. சப்பாத்தி காலி. நன்றி

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு