ரச சாதம்

தேதி: January 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (8 votes)

 

புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
சாதம் - ஒரு கப்
துவரம் பருப்பு - ஒரு கைப்பிடி
தக்காளி - 2
மிளகுதூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
வறுத்து பொடிக்க:
பூண்டு - ஒன்று
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
சீரகம் - அரை தேக்கரண்டி
கடலைபருப்பு - ஒரு தேக்கரண்டி
விழுதாக்க:
சின்ன வெங்காயம் - 8
பூண்டு - 4 பல்
கொத்தமல்லி - ஒரு கொத்து
பச்சைமிளகாய் - 2


 

பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் வறுக்க கொடுத்துள்ள பொருட்களை மொத்தமாக கொட்டி சிறுதீயில் மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்
பின்னர் ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும்.
விழுதுக்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் ஒரு சுற்றுக்கு மட்டும் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இல்லையேல் அம்மியில் தட்டிக் கொள்ளலாம்.
சட்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இடித்த விழுதை சேர்த்து வதக்கவும்.
பின்னர் வறுத்து பொடித்த தூளை சேர்க்கவும்.
அதன் பின் தக்காளியை பிசைந்து விடவும்.
பின்னர் மற்ற தூள் வகைகளை சேர்த்து கிளறவும்.
அதன் பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல், உப்பு மற்றும் வேக வைத்த பருப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
அதன் பின் சாதத்தை கொட்டி ஒரு முறை கொதிக்க விட்டு இறக்கவும்.
ரச சாதம் தயார். சுட்ட அப்பளம், உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உங்க ரசம் சாதம் குறிப்ப பார்க்கும் போதே வாசம் வர மாதிரி இருந்தது. என் வீட்டில் எல்லோருக்கும் ரசம் சாதம் என்றால் மிகவும் பிடிக்கும்..இன்னும் அருமையான குறிப்புகள் தர வாழ்த்தும் உங்கள் அன்பு தோழி சுபா..

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

வறுப்பதிர்க்கும் அரைப்பதிற்கும் பூண்டை தோலுரித்து போட வேண்டுமா?? எனக்கு ரசம் ரொம்ப பிடிக்கும்...

ALL IS WELL

ரசம் செய்யும் போது பூண்டை தோலுடன் போடுவது வழக்கம். விரும்பினால் தோல் உரித்தும் சேரிங்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி உங்க வருகைக்கும் கருத்துக்கும்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

thank u for ur rply

ALL IS WELL