எண்ணெய் கத்தரிக்காய்

தேதி: January 19, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.6 (7 votes)

 

கத்தரிக்காய் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
நறுக்கிய கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
சாம்பார் தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைபருப்பு - தாளிக்க
கறிவேப்பிலை


 

கத்தரிக்காயை நறுக்கி வைக்கவும். தக்காளியை விழுதாக அரைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் சுற்றி எடுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். இதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் அரைத்த வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கத்தரிக்காய் வதங்கியதும் அரைத்த தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
இத்துடன் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டி மூடி போட்டு சிறுதீயில் வேக விடவும். நீர் சேர்க்க தேவை இல்லை.
கத்தரிக்காய் வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது எடுக்கவும். சுவையான எண்ணெய் கத்தரிக்காய் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எண்ணெய் கத்தரிக்காய் நன்றாகவுள்ளது.நளை செய்துவிட்டு பின்னூட்டம் தருகிரேன்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி. :)

கீஃபா... முன்பெல்லாம் என் குறிப்பில் முதல் பதிவு சுகி அல்லது இமாவாக தான் இருக்கும். இப்போ இருவரும் பிசி :) உங்க பதிவு தான் அதிகமா முதல் பதிவா இருக்கு. மிகுந்த மகிழ்ச்சி. நன்றி கீஃபா. நாளை சொல்லுங்க, நான் காத்திருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

So yummmyyyyyy.I ll try this week end..

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

மிக்க நன்றி. செய்து பார்த்து பிடிச்சுதான்னு மறக்காம சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கண்டிப்பா vanitha.
நான் கத்திரிக்காய் கறி செஞ்சதே இல்ல.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

அருமையான குறிப்பு. செய்வது மிகவும் சுலபம். நான் இது மாதிரி ஒரு குறிப்ப தான் எதிர் பார்த்தேன். நன்றி. இன்னும் நிறைய குறிப்புகள் உங்களிடமிருந்து எதிர் பார்க்கும் உங்கள் அன்பு தோழி சுபா...

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

மிக்க நன்றி. இது செய்ய சுலபம், சுவையும் அருமையா வரும். செய்து பார்த்து அவசியம் சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Vanitha Akka super..

Enaku oru doubt tomato ena pananum nu neenga solaliya..

ரொம்ப நல்லா இருக்கு எண்ணெய் கத்தரிக்காய் நீங்க கத்தரிக்காய் கட் பன்னிருக்கதே சாப்பிட ஆசையை தூண்டுது இதே மாதிரி நானும் ட்ரை பண்ணி பார்க்குறேன் அக்கா வாழ்த்துக்கள் BY Elaya.G

பதிவுக்கு மிக்க நன்றி. தக்காளியை அரைத்து சேர்க்க சொல்லி இருக்கனே. முதல் ஸ்டெப் பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க, சுலபமா வரும். படம் அனுப்ப மறந்துடாதீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு பிடித்த டிஷ்.... அம்மா ரொம்ப நல்லா செய்வாங்க... நானும் ட்ரை பண்ணிட்டு சொல்ரன்

ALL IS WELL

மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து பிடிச்சுதான்னு சொலுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதாக்கா நேற்று மட்டன் குழம்புக்கு சைட்டிஸ் உங்கள் எண்ணெய் கத்தரிக்காய்தான்.இது பிரியானிக்கும் நல்ல சைட்ட்டிஸ். பார்டிகளுக்கும் செய்துகொள்ளலாம். அருமையாக இருந்தது.பாராட்டுக்கள் உங்களுக்கு.

மிக்க நன்றி. ஆமாம் இது புலாவு, பிரியாணி போன்றவைக்கு தான் சரியான காம்பினேஷன். செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மீண்டும் நன்றி கீஃபா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Na Sariya kavanikama sonathuku.. Nanum entha dish panan super ra irunthuchi.. Birinji ku super combination..

இதுக்கு எதுக்குங்க சாரிலாம்... நாங்களும் இது போல் கேள்வியெல்லாம் அப்பப்போ கேட்போமாக்கும்... :) ஏதோ கவனத்தில் குறிப்பை அனுப்பிட்டு அதுல கரக்‌ஷன் பண்ண சொல்லி அட்மின் மக்களை பாடா படுத்துவேனாக்கும். அதனால் என்கிட்ட சாரிலாம் கேட்க கூடாது. வனிகிட்ட சாரி கேட்டா பென்ச் தான். செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி திருமதி. குமார். மகிழ்ச்சியாக இருக்கிறது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா