வாழைக்காய் பொரியல்

தேதி: July 20, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முற்றிய வாழைக்காய் - 2
கடுகு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மிளகாய்தூள் - 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - 5 அல்லது 6 ஸ்பூன்
உப்பு - ஒரு ஸ்பூன்


 

வாழைக்காயை தோல் சீவி சற்று தடிமனான துண்டுகளாக வட்டவடிவில் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்தவுடன் கறிவேப்பிலையை போடவும்.
பிறகு வாழைக்காய் துண்டுகளைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து அதன்மேல் ஊற்றி பிரட்டிவிட்டு, வேகும் அளவு (சுமார் ஒரு டம்ளர்) தண்ணீர் விட்டு மூடி போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் வைத்து வெந்தவுடன் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

FIRST TIME I MADE THE PORIYAL FROM YOUR WEBSITE.

EVERY ONE IN MY FAMILY HAS APPRECIATED THE TASTE

MANY THANKS FOR GIVING EXCELLENT RECIPE

I CAN RATE ARUSUVAI DOT COM IS NO1 WEBSITE IN GIVING ON LINE RECIPE.

- VENKAT-

சகோதரர் வெங்கட் அவர்களுக்கு, தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்களின் வார்த்தைகள் எங்களை மேலும் உற்சாகமாக பணியாற்ற வைக்கும். இந்த பாராட்டுகள் அனைத்திற்கும் தகுதி வாய்ந்தவர்கள், இது போன்ற குறிப்புகளைக் கொடுத்துவரும் சகோதரிகள்தான். அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

சகோ.வெங்கடேஷ் அவர்களுக்கு,
வாழைக்காய் பொரியல் செய்து பார்த்து பாராட்டியதற்கு மிக்க நன்றி! உங்கள் குடும்பத்தினருக்கும் என் சந்தோஷத்தை தெரியப்படுத்துங்கள்! சுவைத்து ரசித்த அவர்களுக்கும் நன்றி!

எனக்கு முன்பே பதில் கொடுத்த பாபு அண்ணனுக்கும் எனது நன்றிகள்!

Dear sir;
VERY NICE ;

I am here self cooking,I am allways looking
arusuvai cooking methods and now Iam cooking myself

THANK YOU