தேதி: January 20, 2012
மண் பானை
ஃபேப்பரிக் பெயிண்ட் - கறுப்பு மற்றும் வெள்ளைநிறம்
ப்ரஷ்
பென்சில்
மண் பானை முழுவதும் கறுப்பு நிற பேப்பரிக் பெயிண்டை அடித்து காயவிட்டு எடுத்துக் கொள்ளவும்.

பானையின் நடுப்பகுதியை சுற்றி 5 செ.மீ இடைவெளியில் இரு கோடுகள் வரைந்து விடவும்.

முதலில் பென்சிலால் அந்த கோட்டின் உள்ளே இருமுக்கோணங்களின் கூர்மையான முனை இணைந்து இருப்பது போல் வரையவும். மேல் முக்கோணத்தின் நடுவில் இரு சிறு கோடுகள் இடைவெளிவிட்டு வரைந்து அதன் மேல் ஒரு வட்டம் வரையவும். அந்த வட்டத்தின் வலது பக்கத்தில் சற்று கீழ் இறக்கி கொண்டை போல் சிறு வட்டம் வரையவும். கீழ் வரைந்த முக்கோணத்தின் நடுவில் இரண்டு கால்களை வரையவும்.

மெல்லிய ப்ரஷால் வெள்ளைநிற பெயிண்டால் அவுட்லைன் போன்று முதலில் வரைந்துக் கொள்ளவும். அடுத்து தலை, கால் பகுதியை வரைந்து விடவும்.

உடல், தலைப்பகுதியின் உள்பக்கங்களை வெள்ளைநிற பெயிண்டால் நிரப்பவும்.

பானை சுற்றி வரிசையாக இந்த பெண் உருவங்களை வரைந்து முடிக்கவும். கைகளை படத்தில் உள்ள வளைவு போல் வரைந்துக் கொள்ளவும்.

பானையின் மேல் ஓரங்களில் உங்களுக்கு விருப்பமான டிசைன் வரைந்து நிரப்பவும்.

மண்பானையில் வரைந்த வார்லி பெயிண்டிங் ரெடி.

Comments
Warli Art
ரேவதி, பத்மா... இந்த ஆர்ட் செய்து அனுப்ப நான் ரொம்ப மாசமா ட்ரை பண்ணிட்டு இருந்தேன்... ஒன்னு அப்ப்டியே பாதியில் வீட்டில் விட்டுட்டு வந்தேன். முடிச்சபாடில்லை. உங்களோடது ரொம்ப அழகு... பானையில் செய்திருப்பது நல்ல ஐடியா. கியூட்டா இருக்கு. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வார்லி ஆர்ட்..
ஆஹா இப்படி ஒரு விஷயத்தைதான் இத்தனை நாளா தேடிட்டு இருந்தேன்.. முயற்சி செய்து பார்க்கணும்... சதுரம் முக்கோணம்லாம் நாம ஈசியா போடுவோம்ல ;) வட்டம் மட்டும் கொஞ்சம் கஷ்டம்.. அட்ஜஸ்ட் செய்திடலாம்... ;)
மண் பானை வேலைப்பாடு
மண் பானை வேலைப்பாடு மிகுந்த நேர்த்தியாகவும்,அழகாகவுமுள்ளது.
அருமையான 'டீம்'
டீம்னா இதான் டீம்; அருமையான டீம் ஒர்க். ;) ஒருத்தர் காமரா பின்னாடி, ஒருத்தர் பானை பின்னாடி. அப்புறமா மாத்தி டர்ன் எடுக்கணும். ஹ்ம்! எனக்கு இப்பிடி ஒரு டீம் அமைய மாட்டேங்குதே! ;)
சூப்பரா இருக்கு வேலை. பளிச் படங்கள். எனக்கு பானை கிடைக்காது. ;( பார்த்து ரசிச்சுட்டு மட்டும் போறேன். வாழ்த்துக்கள் டீம்.
பி.கு
//வார்லி பெயிண்டிங்// எந்தப்பிரதேசத்துக்குரிய கைவேலை! ஆங்கிலத்தில் ஸ்பெல் பண்ணி உதவமுடியுமா!
- இமா க்றிஸ்
வேலைபாடு
ரொம்ப அழகான வேலைபாடு.கோடு போட்டு வரிசை சரிபண்ணும் ஐடியா ரொம்ப நல்லா இருக்கு
imma
warli painting
வார்லி பெயிண்டிங்
வார்லி பெயிண்டிங் வேலைப்பாடு ரொம்ப அழகா இருக்கு! பெண்கள் கைகோர்த்து வரிசையா நிற்கும் டிசைன் சிம்ப்ளி சூப்பர்! இதை செய்த பத்மா & ரேவதிக்கு, பாராட்டுகள் & வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சுஸ்ரீ
வார்லி பெயின்டிங்
நன்றி ரம்ஸ். இங்கே என் கேள்வியைப் பார்த்ததும் மகிஅருணும் வனிதாவும் கூட விபரம் அனுப்பி இருந்தாங்க. மூவருக்கும் என் அன்பு நன்றிகள்.
- இமா க்றிஸ்
பத்மா & ரேவதி :)
பெங்களூரில் ஒரு உணவகத்தில் இந்த மாதிரி செய்திருந்தார்கள். ஆச்சிரியமாக பார்த்துட்டே இருந்தேன். இப்போ எனக்கு செய்யவும் தெரிந்து விட்டது. வாழ்த்துக்களும் நன்றிகளும் பல.
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!