சன்னா பட்டூரா

தேதி: January 20, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

 

பட்டூராவிற்கு:
மைதா மாவு - 2 கப்
தயிர் - அரை கப்
பால் - 3/4 கப்
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சமையல் சோடா - 2 சிட்டிகை
உப்பு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - வேகவிட
சன்னாவிற்கு:
வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப்
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறுத்துண்டு
பூண்டு - 5 பல்
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
பட்டை - சிறுத் துண்டு
காரப்பொடி - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
டால்டா - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

சன்னா பட்டூரா செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பட்டூராவிற்கு கூறப்பட்டுள்ளவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு அடித்துப் பிசையவும். அதனை மூன்று மணி நேரம் காற்றுப் புகாமல் மூடி வைக்கவும்.
கொண்டைக்கடலையை 12 மணி நேரம் நீரில் ஊற வைத்து, குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து 5 சத்தம் வரும் வரை வேக விடவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, ஏலம், கிராம்பு, பட்டை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய், டால்டா சேர்த்து அதில் அரைத்த விழுதை போட்டு எண்ணெய் பிரிய வதக்கவும். அதில் தேவையான உப்பு, காரப்பொடி சேர்க்கவும்.
வெந்த கொண்டைக்கடலையை கரண்டியால் சற்று மசிக்கவும். வேக வைத்த நீரை வீணாக்காமல் கடலையுடன் சேர்த்து வதக்கிய விழுதில் விடவும்.
நன்கு சேர்ந்து கொண்டு கெட்டியானதும் இறக்கவும். மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை, எண்ணெயில் வதக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். சன்னா தயார்.
இனி பட்டூரா செய்வோம்... பிசைந்த மாவை மேலும் நன்கு அடித்துப் பிசைந்து, பூரியைவிட சற்று திக்கான பட்டூராக்களை இடவும். எண்ணெயில் பொரித்து எடுத்து, சன்னாவுடன் பரிமாறவும்.
நம் வீடுகளில் செய்யும் பட்டூராக்கள் ஹோட்டல் மாதிரி பெரிதாக செய்ய வேண்டாம். சிறிதாகச் செய்தால் எண்ணெய் குடிக்காது. மைதாவில் செய்வதால் ஆறியவுடன் நமுத்துவிடும். சூடாக சாப்பிட்டால் தான் ருசியாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சன்னா+பட்டூரா சூப்பர். லீவுநாளில் பொறுமையா செய்துப்பார்க்கனும். விருப்பபட்டியலில் சேர்த்துட்டேன்.

-

சன்னா பட்டூரா பெயரே ரொம்ப நல்லா இருக்கு சன்னா ல செய்ற எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் ஆன்டி by Elaya.G

ராதா,
சன்னா கலரே அள்ளுது!!
அவசியம் செய்துவிட்டு சொல்லுறேன்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பட்டூரா அருமையா இருக்கு... கன்டிப்பா செய்து பார்கிரென்.

அன்புடன்,
லலிதா

அன்புடன்,
லலிதா

ராதாம்மா பட்டூரா அதோட சன்னா எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ் அக்கா வீட்டுக்கு போகும் போது செய்வாங்க அப்போ சாப்பிட்டு இருக்கேன் இப்போ நீங்க குறிப்பு கொடுத்துட்டீங்க நானே செய்துடுறேன்.

ராதாம்மா நல்ல குறிப்பு நான் விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன் செய்து பார்கிறேன் படங்கள் நல்லா இருக்கு நன்றி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவைக் குழுவினருக்கு மிக்க நன்றி.
வினோஜா, இளயா, கவிதா, லலிதா, முகில், தனா....உங்கள் அனைவருக்கும் நன்றி....செய்து பார்த்து விட்டு கண்டிப்பாக சொல்லுங்கள் தோழிகளே!

Super,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ராதாம்மா பட்டூரா ரொம்ப நன்னாருக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

hi mam
very nice recipe...tried it for dinner. came out very well.bhatura super and channa double super..

பானு....சூப்பர்ங்கறதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாத உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க!!!!

ஸ்வர்ணா....வாழ்த்துக்கு நன்றி....

லாவண்யா....செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்தமைக்கு ரொம்ப நன்றிம்மா..

நேத்து நைட் சன்னா பட்டூரா பண்ணேன் சன்னா taste நன்றாக இருந்தது நான் சன்னா மசாலா எல்லாதையும் வதக்கி அப்புறம் தான் அரைப்பேன் இது சுவை வேறு மாத்ரி நல்ல இருந்தது நன்றி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்