பிஸ் / எக் கட்லட்ஸ்

தேதி: January 20, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (6 votes)

 

முட்டை - 3
உருளை - 2
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறு துண்டு
உப்பு
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள்
கறிவேப்பிலை
எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி
ப்ரெட் க்ரம்ப்ஸ் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு


 

உருளையை வேக வைத்து தோல் நீக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு, கறிவேப்பிலை, தூள் வகைகள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக பிசையவும்.
2 முட்டையை வேக வைத்து பாதியாக நறுக்கி ஒவ்வொரு பாதியின் மேலும் உருளை கலவை வைக்கவும்.
இப்போது இதை முழு முட்டை போல் உருட்டி பிடிக்கவும்.
மீதம் உள்ள ஒரு முட்டையை ஊற்றி அடித்து கொள்ளவும். இதில் நாம் பிடித்து வைத்த முட்டை உருளை உருண்டையை முக்கி எடுக்கவும்.
இதை ப்ரெட் க்ரம்ஸில் பிரட்டி நன்றாக உருட்டி விடவும்.
இது போல் எல்லா முட்டை உருண்டையும் தயார் செய்து எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும்.
சுவையான பிஸ் கட்லட்ஸ் அல்லது முட்டை கட்லட் தயார்.
மாலத்தீவு சமையலில் பல வருட அனுபவம் உள்ள திருமதி. சித்ரா அவர்கள் செய்து காட்டியது.

இத்துடன் டூனா மீன் சேர்த்து செய்வது இவர்கள் வழக்கம். நான் அதை விரும்பாததால் மீன் இல்லாமல் செய்திருக்கிறார்கள். நீங்கள் விரும்பினால் உருளை கலவையுடன் டூனா மீன் துண்டுகள் சேர்த்து பிசையவும். இதில் பயன்படுத்தி இருக்கும் மிளகாய் இந்த ஊர் ”கீது மிருஸ்” (githeyo mirus). துளி சேர்த்தாலே காரம் பிச்சிடும். இதுக்கு இன்னொரு பெயர் கோஸ்ட் சில்லி. :)


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் சித்ரா மேடம் பிஸ் கட்லெட்ஸ் பார்க்கவே அருமையா இருக்கு. பாதி எக், பாதி உருளைக்கிழங்கு மசாலா சாப்பிட யம்மியா இருக்குமே வனி.

மொறு மொறுவென்று அசத்திட்டீங்க.. வாசம் இங்க அடிக்குது. ஒரு நல்ல ஸ்நாக்ஸ் செய்து காண்பிச்சு இருக்கீங்க... தேங்க்ஸ்..

"எல்லாம் நன்மைக்கே"

வனிதாக்கா சூப்பரா இருக்கு பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு எங்க வீட்டுல முட்டைய வைத்து என்ன ஐட்டம் செய்தாலும் விரும்பி சாப்பிடுவாங்க இத நான் கண்டிப்பா செய்து பார்ப்பேன் ரொம்ப நன்றி வனிக்கா..ஆனா இதோட பெயர் எனக்கு கரக்டா சொல்லுங்களேன் பிஸ் எப்ப்டி இங்க்லிஷ் ல சொல்ரது

அன்புடன்,
zaina.

ரொம்ப அருமையா இருக்கு பார்க்கவே சாப்பிட தோணுது சீக்கிரமே செய்துட்டு சொல்லுறேன் சித்ரா அக்காக்கு என்னோட நன்றிகள சொல்லிடுங்க வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் by Elaya.G

எளிமையான புதுமையான குறிப்பு திரும்பவும்.. ;) அசைவம் சாப்பிடுவதை விட்டுடலாம்னு இருக்கேன். (ஆனா முட்டை முழு சைவம் தானே!! அதை மட்டும் சாப்பிடலாம்னும் ஐடியா :D) பார்க்கலாம் முடியுதானு.. ஆனா கண்டிப்பா ஊருக்குப் போகும் போது இந்த டிஷ் செய்து தருவேன் எல்லோருக்கும்...

விருப்பப்பட்டியல்ல சேர்த்தாச்சு.. :)

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

இந்த குறிப்பில் சொல்ல மறந்தது... bis என்றால் திவேகி மொழியில் முட்டை தான். அதனால் தான் biscutlets.

வினோ.. ஆமாங்க, சுவை நல்லா இருந்தது. நீங்களும் ட்ரை பண்னிபாருங்க :)மிக்க நன்றி.

பாக்கியா... மிக்க நன்றி. செய்து பாருங்க, அடிக்கடி செய்வீங்க :)

ஸைனா... மிக்க நன்றி. ஆங்கிலத்தில் Biscutlets / egg cutlets ‘னு சொல்வாங்க. அவசியம் செய்து பார்த்து பிடிச்சுதான்னு சொல்லுங்க :)

இளையா... மிக்க நன்றி. கண்டிப்பா செய்துட்டு சொல்லுங்க :)

சாந்தினி... மிக்க நன்றி. நம்ம சொன்னா சைவம் தான் :) அவசியம் செய்து பாருங்க, செய்வது மிக சுலபம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதாக்கா எக்கட்லட் சாப்பிட அருமையாகவே இருக்கும்.மாலைதீவு சமையலுக்கும் இலங்கை சமையலுக்கும் நிறையவே தொடர்பு இருக்கும் போலவே இருக்கிறது.இவ்வகையான சிற்றுண்டிகள் எங்கள் ஊரில் மிகவும் பிரபலம்.இதே முறையிலும் செய்வார்கள், முட்டை கலவையை மைதா சீட்டில் வைத்து குட்டி ரோல்ஸ்ஸாக பொரித்தெடுப்பார்கள்.இதில் டூமா சேர்த்தும்,இறைச்சி சேர்த்தும் வேறுவேறாக விற்பார்கள்.நான் இச்சிற்றுண்டி வகைகளை பல விதமாக ரம்ஸான் நோன்பு காலங்களில் செய்வேன் .

வனிதா மேடம்,

மாலே சமையல் ரொம்ப சத்தானது போலே..
நானும் செய்துவிட்டு வரேன்..
வாழ்த்துக்களை சித்ராவிடமும் சொல்லுங்க

என்றும் அன்புடன்,
கவிதா

என்ன ஒரு காம்போ பாதி முட்டை பாதி வெஜ்.....நல்லாயிருக்கு. சித்ரா கையிலிருப்பது உங்களின் கைத்திறமையா? சித்ராவை விடாமல் கெட்டியாக பிடித்து இன்னமும் நிறைய எங்களுக்கு சொல்லி கொடுங்க பார்ப்போம்.

கோல்டன் ரிம் போட்ட செட் ரொம்பவே அருமை :)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஆஹா பார்க்கவே சூப்பரா இருக்கு நிச்சயம் டேஸ்ட்டும் நல்லாவே இருக்கும். நிச்சயம் செய்வேன் வனிக்கா. சித்ராம்மா கலக்குறாங்க. பைனல் போட்டோ ரொம்ப சூப்பரா இருக்கு.

கீஃபா... மிக்க நன்றீ. ஆமாம் இங்குள்ள உணவுகள் பலவும் இலங்கை மற்றும் கேரள உணவின் தாக்கம் தான் அதிகம். இங்கும் இதில் பல வகை உண்டு. செய்ய சுலபமானதாக முறை தெரிந்து கொண்டால் பின் எல்லா விதமும் செய்ய உதவும் என்றே ஈசியான குறிப்புகளாக கொடுத்தேன். :)

கவிதா.. மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க. :)

லாவண்யா... மிக்க நன்றி. அட பாவி இத்தனை நாளா என் ஹென்னா டிசைன் பார்த்தும் அது யாருடையதுன்னு கண்டு பிடிக்க முடியலயா?? சத்தியமா நானில்லை. அவங்களே போட்டாங்களாம் ஊருக்கு போக. கடைசி படத்தில் இருக்கும் அந்த செட்... எனக்கு பிடிச்சது, காரணம் திருமணம் ஆனதும் நாங்க வாங்கிய முதல் செட். :)

யாழினி... மிக்க நன்றி. செய்து பார்த்து மறக்காம இங்க சொல்லனும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சில குறிப்புக்கள் பார்த்ததுமே செய்து சாப்பிடத்தோன்றும். அப்படிப்பட்ட அருமையான குறிப்பு. நன்றி வனிதா.

Haleema

அன்புடன்,
ஹலீமா

கொவப்படபிடாது.......பார்த்ததுமே தெரிஞ்சுது......இருந்தாலும் சும்மா சீண்டி பார்ப்போமே என்று தான் ;)

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஹலீமா... மிக்க நன்றி சகோதரி. அவசியம் செய்து பார்த்து பிடிச்சுதான்னு சொல்லுங்க :)

லாவண்யா அக்கா... என்னை வம்பிழுக்குறதுல எல்லாருக்கும் என்னா ஆனந்தம்!!! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சைவம் பாதி, அசைவ‌ம் பாதி
கலந்து செய்த கலவை நான்!
உள்ளே உருளை, வெளியே முட்டை
அருமையான கட்லெட் நான்!...

என்ன வனி, பார்க்கறீங்க?. உங்க 'பிஸ் கட்லட்' தான் என்னைப்பார்த்து பாடறமாதிரி இருக்கு! :) அந்த கடைசிப்படம் ப்ரசண்டேஷன் ஃபோட்டோ அவ்வளவு அழகு! ஒரே புதுமையான குறிப்புகளாக புகுந்து விளையாடறீங்க! தொடர்ந்து கலக்குங்க.

வாழ்த்துக்கள் உங்களுக்கும், குறிப்பை தந்த சித்ரா அவர்களுக்கும்!

அன்புடன்
சுஸ்ரீ

வனி கட்லட் பார்க்கவே அழகா இருக்கு ,

வாழ்த்துக்கள் உங்களுக்கும், குறிப்பை தந்த சித்ரா அவர்களுக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வனி, பிஸ் கட்லெட்டுன்னு சொன்னீங்களேன்னு பிஸ்ஸை தேடிட்டு இருந்தேன். என்னை ஏமாத்திட்டீங்க பார்த்தீங்களா? ;( எக் கட்லட் டேஸ்டி,டேஸ்டி.. உங்களுக்கும்,சித்ராவுக்கும் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சுஸ்ரீ... கொஞ்ச நாளா தான் என் குறிப்பில் யாரும் பாட்டு பாடாம இருந்தாங்க... நீங்க மீண்டும் துவக்கி வெச்சுட்டீங்க போல ;) அருமையா பாட்டி யோசிக்கறீங்க, எப்படி தான் முடியுதோ. மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க. :)

சுவர்ணா... மிக்க நன்றி. வாழ்த்தை மறக்காம சொல்லிடுறேன் :)

கல்பனா... இது fish இல்ல bis. bis என்றால் திவேகி மொழியில் முட்டை. ;) ஆனா இதோட டூனா மீன் சன்க்ஸ் சேர்ப்பாங்க இவங்க. அவசியம் செய்து பாருங்க. நேற்று பார்ட்டியில் இங்க கொடுத்த குறிப்புகள் மற்றும் பல மாலத்தீவு உணவுகள் இருந்தது. டூனா மீன் போட்டு தான் இருந்தது, சாப்பிட நல்லா தான் இருந்தது, இனி மீன் சேர்த்து செய்யலாம்னு யோசிக்கறேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி உங்க குறிப்பை செய்தேன் நேற்று ரொம்ப நல்லா இருந்தது..

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

மிக்க நன்றி. செய்து பார்த்து சொல்லி எனக்கு இன்னைக்கு வருசையா பதிவு வருது... பெரிய சந்தோஷம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா