கருவாடு தொக்கு சமையல் குறிப்பு - படங்களுடன் - 21618 | அறுசுவை


கருவாடு தொக்கு

வழங்கியவர் : amina mohammed
தேதி : Sat, 21/01/2012 - 11:45
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
4.57143
7 votes
Your rating: None

 

 • பீர்க்கங்காய் - அரைக் கிலோ
 • கருவாடு - 2 துண்டுகள்
 • வெங்காயம் - 3
 • தக்காளி - 3
 • மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
 • சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
 • உப்பு - தேவைக்கு
 • எண்ணெய் - 1 1/2 குழிக்கரண்டி
 • தாளிக்க:
 • கடுகு
 • உளுந்து
 • சீரகம்
 • கடலைபருப்பு
 • பூண்டு - 3 பல்
 • கறிவேப்பிலை - ஒரு கொத்து
 • பச்சைமிளகாய் - 2

 

பீர்க்கங்காயை தோல் சீவி நீரில் சுத்தம் செய்து பின் நறுக்கிக் கொள்ளவும்.

கருவாடு துண்டுகளை அரை மணி நேரம் நீரில் ஊற வைத்து நன்கு சுத்தம் செய்து எடுத்து வைக்கவும்

கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

இந்த கலவைகளை ஓரமாக ஒதுக்கி விட்டு நடுவில் சேரும் எண்ணெய் மூலம் கருவாடு துண்டுகளை இருப்பக்கமும் பொரிக்கவும். அல்லது தனியாக எண்ணெயில் பொரித்தும் போடலாம்.

கருவாடு நன்கு பொரிந்ததும் கொத்தி விட்டு கிளறவும்.

அத்துடன் பீர்க்கங்காயை சேர்க்கவும். ஒரு சேர கிளறி 2 நிமிடம் வதக்கவும்.

பின்னர் தூள் வகைகளை சேர்த்து மூடியிட்டு வேக விடவும். நீர் விடவேண்டாம்.

10 நிமிடங்களில் அனைத்தும் குழைந்து இருக்கும். அப்போது தேவைக்கு மட்டும் உப்பு தூள் சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கி பின்னர் இறக்கவும்

பீர்க்கங்காய் கருவாடு தொக்கு தயார்.

இதே முறையில் புடலங்காய் மற்றும் சுரைக்காய் சேர்க்கலாம். சதை பற்றுள்ள எந்த கருவாடு துண்டுகளையும் பயன்படுத்தலாம். நெய்மீன் கருவாடு என்றால் சுவை இன்னும் அதிகம் கூடும்.amina

வாவ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.வித்தியாசமாகவுமிருக்கு.விருப்ப பட்டியலில் சேர்த்தாச்சு.

பயனுள்ள குறிப்பு

எனக்கு மிகவும் பயனுள்ள குறிப்பு கொடுத்து உள்ளீர்கள்.... மிக்க நன்றி... நெய் மீன் என்றாலும் நெய்த்துளி என்றாலும் ஒரே வகையா? நீங்கள் காட்டி உள்ளது என்ன வகை?

கிபா

மிக்க நன்றி

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ப்ரியா ஜெயராம்

நெய்துளி கேள்விபட்டதில்லை.. விஷாரித்து சொல்கிறேன்

படத்தில் உள்ளது தேங்காய் பாறை கருவாடு

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா