ராகி தோசை

தேதி: January 21, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (11 votes)

 

இட்லி மாவு - ஒரு கப்
ராகி மாவு - 2 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
இஞ்சி - சிறுத் துண்டு
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவைக்கு


 

இட்லி மாவையும் ராகி மாவையும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கரைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும்.
கரைத்து வைத்திருக்கும் மாவில் நறுக்கியவற்றை சேர்க்கவும்.
தோசைகல்லை சூடாக்கி தோசை ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுகலாக எடுக்கவும்.
சுவையான ராகி தோசை தயார். தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ராகி தோசை ரொம்பவே அருமையாக இருக்கறது.சத்தானதும் கூட.நிச்சயயம் செய்து பார்ப்பேன்.வாழ்த்துக்கள்.

என் குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா மற்றும் குழுவிற்க்கு நன்றி...

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி கிஃபா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனக்கு ராகி தோசை ரொம்ப பிடிச்சிருக்கு. நான் கோதுமை தோசை கூட தாளித்து தான் செய்வேன். அந்த மாவின் வாசம் ரொம்ப வராம இருக்கும்னு. நீங்க தாளிக்காம சேர்த்திருப்பது நல்லா இருக்கு. கண்டிப்பா இதையும் செய்றேன். இங்க மாவு ஏகமா இருக்கு. :) முடிக்க வழி காட்டிட்டீங்க. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராகி தோசை பார்க்க ரவா தோசை போல அழகாக உள்ளது. எனது சந்தேகம் என்னவென்றால் ராகி மாவை வறுக்க வேண்டுமா என்பதுதான்.

நம்மைப் பொறுத்தவரை நல்லபடியாக நடந்துக்கொள்ள வேண்டும். அதை ஏற்பதும் மறுப்பதும் மற்றவர்கள் பொறுப்பு.

வனி இம்முறையில் செய்து பாருங்க தாளிக்கனும் என்ற அவசியமே இல்லை நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.

///இங்க மாவு ஏகமா இருக்கு. :) முடிக்க வழி காட்டிட்டீங்க./// ஹா ஹா மிக்க நன்றி..;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கல்யாணி ராகி தோசை சாப்பிடவும் நல்லாருக்கும் :) மாவை வறுக்க வேண்டிய அவசியமே இல்லைங்க அப்படியே கலந்து செய்து பாருங்க,நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுவா, ராகி அடை,புட்டுன்னு சாப்டிருக்கேன். ராகி தோசை இப்பதான் கேள்விபடுறேன்பா. ஊருக்கு போய் தான் இதையெல்லாம் லிஸ்ட் போட்டு செய்து சாப்பிடனும். நல்ல சத்தான,எளிதில் செய்யக்கூடிய குறிப்பு தந்த உங்களுக்கு சத்தான வாழ்த்துக்கள் சுவா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்ப்ஸ் சத்தான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.
ராகியில் களி,அடை,புட்டு,ரொட்டி இப்படி எது செய்தாலும் நல்லாருக்கும் பா:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்வர்!!!

ராகி தோசை,எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஸ்வர்.

வழக்கம் போலவே சுவையான,சத்தான ரெசிபி,அழகான போட்டோஸ்.

பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் தங்கப்பெண்ணே.

அன்புடன்
நித்திலா

நித்தி சாரிப்பா இப்பதான் பார்க்கிறேன் உன்னோட பதிவை :(
வாழ்த்துக்கும்,பாராட்டிற்க்கும் மிக்க நன்றிப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா டின்னர்க்கு ராகி தோசை செய்து சாப்பிட்டாச்சு. நான் இட்லிமாவில் ராகி கலந்து செய்யும் போது வெங்காயம் இஞ்சி எதுவும் சேர்ப்பதில்லை. உங்கள் முறைப்படி செய்தது டேஸ்டியாக இருந்தது.சிம்ப்ளி சூப்பர்ப்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சூப்பரா இருந்ததுங்க... தோசை மாவு போதுமானதா இல்லாம இருந்தது, ராகி மாவு கலந்ததும் கரக்ட்டா போச்சு. வெங்காயம் எல்லாம் சேர்த்து ரொம்ப நல்லா இருந்துது. இனி தோசை மாவு கொஞ்சமா மிச்சம் இருந்தா இது தான் :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுவர்ணா உங்க குறிப்பிலிருந்து ராகி தோசை, தக்காளி கொத்சு செய்யலாம்னு ஒப்பன் பன்னினா அட இது நான் அடிக்கடி செய்யும் டிபன் ஆச்சே!!! எங்கள் இருவருக்கும் ரொம்ப புடிக்கும். அதிக முறை செய்தாச்சு ஆனா இப்பா தான் பின்னுட்டு தர முடிந்தது. நல்ல சத்தான சுலபமான குறிப்பு வாழ்த்துக்கள்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

ஹாய் சுவா ராகி தோசை சூப்பரா இருக்கு.. சத்தான குறிப்பா கொடுத்திருக்க.. நிச்சயம் செய்து பார்த்து சொல்கிறேன்.. வாழ்த்துகள்ம்மா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

Innaiku morning breakfast ku unga raagi dosai with coconut chutny thaan pa. Taste sema super... Thanks for the recipe swarna...

அன்புடன்,
நித்யாசரவணன்ஹர்ஷிதா.

hai swarna gud non ragi mava eppadi seiya theriyama iruntha ungalathai parthu senje supera irunthathu ippa adikadi ragi dosathan romba thanks