கொண்டைக்கடலை பிரியாணி

தேதி: January 21, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

1. பாசுமதி அரிசி - 1 கப்
2. கொண்டைக்கடலை - 1/2 கப்
3. வெங்காயம் - 1 [பெரிது]
4. தக்காளி - 1 [சின்னது]
5. உப்பு
6. மஞ்சள் தூள் - சிறிது

அரைக்க:

6. தக்காளி - 1 [சின்னது]
7. இஞ்சி, பூண்டு - சிறிது
8. பச்சை மிளகாய் - 2
9. தேங்காய் துருவல் - 1 மேஜைக்கரண்டி
10. முந்திரி - 5
11. கொத்தமல்லி இலை - சிறிது

தாளிக்க:

12. நெய் + எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
13. பட்டை - 1 துண்டு
14. லவங்கம் - 2
15. ஏலக்காய் - 1
16. பிரியாணி இலை - 1/2


 

அரிசியை கழுவி ஊற வைக்கவும். கொண்டைக்கடலையை முன் நாளே ஊற வைத்து லேசாக உப்பு சேர்த்து வேக வைத்து வைக்கவும்.
அரைக்க கொடுத்தவற்றை விழுதாக அரைத்து வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
இப்போது அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது அரிசியை நீர் இல்லாமல் வடித்து சேர்த்து பிரட்டவும்.
அரிசி நன்றாக கலந்த பின் 2 கப் நீர் விட்டு கொதிக்க விடவும்.
கொதி வந்ததும் சிறுந்தீயில் வைத்து மூடி வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் வேக வைத்த கொண்டைக்கடலை சேர்த்து மூடி தம் போட்டு வேக விடவும்.
சுவையான கொண்டைக்கடலை பிரியாணி தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வனி வாழ்த்துக்கள், கொண்டைக்கடலை பிரியாணிய ரெம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன், குறிப்பு அருமையாக இருக்கு, இந்த weekend செய்துட்டு சொல்கிறேன்.

மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கொண்டைகடலை பிரியாணி வித்தியாசமா இருக்கு. கொண்டைகடலையை புளிக்குழம்பாகவே சாப்பிட்டு போரடித்துபோச்சு. கண்டிப்பா இன்னைக்கு கொண்டைகடலை பிரியாணிதான். வாழ்த்துக்கள் வனி.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

மிக்க நன்றி. செய்தீங்களா? எப்படி வந்ததுன்னு சொல்லவே இல்லையே... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா