Septate Uterus பற்றி தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.

Septate Uterus பற்றி தெரிந்தவர்கள் தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்களேன்.இந்த நிலையில் கர்பம் தரிப்பதில் உள்ள Difficulties என்ன?

பெரும்பாலும் யூடிரஸ் ஒரே மாதிரி தான் இருக்கும்..சிலருக்கு மட்டும் அமைப்பில் வித்யாசம் இருக்கும்..அதில் பல வகை உண்டு பலருக்கும் அது ஒரு ப்ரச்சனையே இருக்காது.இதனை மருத்துவர் தான் சொல்ல முடியும்....நீங்க உங்க மருத்துவர் ஆலோசனை படி செய்யுங்க.

நன்றி அக்கா.உங்களுடைய உடனடி பதிலுக்கு.ஆனால் நான் கூகுளில் தேடி பார்த்த போது miscarriage ஆகி விடும் வாய்ப்பு மிக அதிகம்னு போட்டு இருந்தது. அதனால் தான் கவலையாக உள்ளது. யாருக்காவது இது போல் இருந்து குழந்தை பிறந்திருக்கானு தெரியனும்.

Ungaluku oru chinna advice.namakku theriyatha visayangala net la parthu therinjukalam nnalum intha mathiree sila visayangala pakkama irukarathu nallathu.veena manasa kulapama ineme doctor advice padi nadanga.netla idha pathi thedaratha vidunga.kandippa ungalukku kulanthai pirakkumnu nambikkayoda irunga.ippo yevlo advance a technology irukku.:-)

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நீங்கள் conceive ஆகறதுக்கு முன்னாடியே இந்த abnormality saripanna treatment எடுத்துடீங்கன்னா miscarraige ஆகுற chances ரொம்ப ரொம்ப குறைஞ்சிரும். nalla அனுபவமுள்ள டாக்டர் ஐ பாருங்கள். நம்பிகையோட இருங்கள், சீக்கிரமே நல்லபடியா ஒரு பிரச்னையும் இல்லாம குழந்தை பிறக்கும்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

பதில் கொடுத்த இருவருக்கும் ரொம்ப நன்றிங்க. கொஞ்சம் ஆறுதலா இருக்கு.ஆனா மனசுகுள்ள தவிப்பாதான் இருக்குங்க. ஒரு பெண்னுக்கு முழுமையே தாய்மை தான். அதுவே பிரச்சனை ஆகும் போது பயம் வருவது இயல்பு தானே. எனக்கு உள்ள பிரச்சனை போல் யாருக்காவது இருந்து நல்ல முறையில் குழந்தை பிறந்து இருந்தால் உங்கள் அனுபவங்களை பகிந்துகோங்க. அது என் நம்பிக்கைய் அதிகரிக்கும். தளிகா அக்கா சொன்னது போல டாக்டர் சொல்படி நடக்க போகிரேன்.அதற்கு மேல் ஆண்டவன் செயல். இதுக்கு மேல சொல்ல வரல.................... :-(

ஒரு பெண்ணுக்கு முழுமையே தாய்மையா?அப்படின்னு யார் சொன்னது?தாய்மை குழந்தை பெற்றுப் போடுவதில் இல்லைங்க.எனக்கு தெரிஞ்சு பேருக்கு மூனு குழந்தைக பிரசவித்து விட்டு அதுகளை சரியா கவனிக்காம காசு மட்டும் குறியா இருக்கிற அம்மாவையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அதுவும் தாய்மையா?.குழந்தைகளே இல்லாத எங்கள் சித்தி எங்கள் பிள்ளைகளை எங்களை விட நல்லாவே பார்த்துக்குவார் இல்ல இது தாய்மையா..எல்லாரும் வழிவழியா சொல்லி வச்சதை நாமும் அர்த்தமே இல்லாம ஏன் தூக்கிட்டு வரனும்.நீங்க இப்படியெல்லாம் மனசை போட்டு குழப்பிக்காதீங்க இதுக்கான ட்ரீட்மென்ட் எடுத்துட்டு கர்ப்பமாவது நல்லது..அல்லது டாக்டர் என்ன அட்வைஸ் பண்ணியிருக்காங்களோ அது போல..அதுவரை வாழ்க்கையை சந்தோஷமா அனுபவியுங்க.
ஏன் குழந்தைக பிறந்ததும் எல்லாரும் அப்படியே 100% சந்தோஷத்தோடயும் குதூகலத்தோடயும் தான் இருக்காங்களா...சொல்ல போனால் குழந்தை இருக்கிறவங்களுக்கு அவங்களை குறித்த எதிர்காலத்தில் பயமும்,அவர்களை வளர்த்தும் சிரமங்களும்,அவர்களுக்கு ஒரு சளி பிடித்தால் கூட வரும் மன உளைச்சலுமாக ஆக மொத்தம் இன்பம் துன்பம் நிறைந்ததுவே வாழ்க்கை...அது குழந்தை இருந்தாலும் சரி இல்லாட்டாலும் சரி..
இப்பல்லாம் வர வர இளம் பெண்கள் ரொம்ப மனசை குழப்பியே கர்ப்பம் தரிப்பதில் ப்ரச்சனை வந்துவிடுது..மன்றத்திலயே பாருங்க எத்தனை கேள்வி .இப்போ இருக்கும் லைஃப்ஸ்டைலில் நாமும் கொஞ்சம் பொறுமையா இருக்க வேண்டியது அவசையம்.சாப்பிடும் சாப்பாடு மாறிப் போச்சு உழைப்பு மாறிப் போச்சு சுற்றுச்சூழல் மாறிப் போச்சு கொஞ்சம் பொறுத்திருக்க தான் வேணும்.ஆனா சந்தோஷமா இருக்கணும்
இதெல்லாம் சொல்வது கொஞ்சம் ஓவெர் தான் ஆனால் நீங்க இப்படி சொல்லும்போது சும்மா இருக்க முடியலை

உங்க வெளிப்படையான அட்வைஸ்கு ரொம்ப தேங்ஸ்.

உங்க வெளிப்படையான அட்வைஸ்கு ரொம்ப தேங்ஸ் அக்கா. எல்லாம் நன்மைக்கே.

மேலும் சில பதிவுகள்