leather sofa

ஹாய்,எங்கல் வீட்ல் leather சோபா உட்காரும் இடத்தில் கிழிந்து விட்டது.அதை எப்படி மரைப்பது.குசன் வைத்தாலும் கீலெ விலுந்து விடுகிரது.plz give some ideas....

ம்... பொருத்தமான நிற லெதர் அல்லது ரெக்சீன் வாங்கிக் கொள்ளுங்கள். இது சோஃபா செய்கிற இடங்களில் கிடைக்கும். சோஃபா ரிப்பேர் செய்பவர்களிடம் கேட்டால் சின்னத் துண்டுகள் மலிவாகக் கிடைக்கும். தேவையானால் பொருத்தமான இரண்டு மூன்று நிறங்களில் வாங்கி வாருங்கள். அமரும் இடத்தில் பொருத்த வேண்டி இருப்பதால் வாங்குவதை மெல்லிதாக வாங்கினால் நல்லது.

அவர்களிடமே பேசி எந்த மாதிரி க்ளூ நன்றாகப் பிடிக்கும் என்று அறிந்து கொள்ளுங்கள். (இல்லாவிட்டால் ஹார்ட் வெயார் கடைகளில் விசாரிக்கலாம். லெதர் கூட அங்கு கிடைக்கும்.) சாதாரண க்ராஃப்ட் க்ளூ இப்படியான வேலைக்குத் தாங்காது. கூடுமானவரை சிறிய டப்பாவாகப் பார்த்து வாங்குங்கள். சால்வன்ட் உங்கள் சோஃபா துணியை உருக்கிக் கெடுத்துவிடவும் கூடும், அதனால் முதலில் மறைவான ஒரு இடத்தில் அல்லது கெட்டுப் போய் இருக்கும் இடத்தில் கொஞ்சமாக வைத்துப் பாருங்கள்.

சோஃபா சுத்தம் செய்ய... ஸ்பிரிட் - சர்ஜிகல் ஸ்ப்ரிட், சில துணிகளுக்கு நெய்ல் பாலிஷ் ரிமூவரும் சரிவரும். இதுவும் முதலில் மறைவான இடத்தில் தேய்த்து செக் பண்ணிப் பாருங்கள்.

உங்க வீட்டு கர்ட்டன், கார்ப்பட் அல்லது குஷன் இப்படி ஏதாவது ஒன்றில் உள்ள டிசைனுக்குப் பொருந்துகிற மாதிரி பூக்கள், குருவி, ஹார்ட் என்று ஏதாவது டிசைன் வெட்டிக் கொள்ளுங்கள். டிசைனில் எங்கும் கூராக வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தால் வளைத்துவிடவும். (கூர் முடிவுகள் விரைவில் பிரிய ஆரம்பிக்கும்.)

இனி சோஃபாவில் திருத்தப் போகும் இடம் முழுவதையும் பஞ்சில் ஸ்பிரிட் தொட்டு நன்றாக சுத்தம் செய்துகொள்ளுங்கள். அதிகம் சிலும்பி இருந்தால் அந்த இடத்தை மெதுவாக சின்னதாக வெட்டி நீக்கிவிடலாம்.

ஸ்பிரிட் சட்டென்று உலர்ந்துவிடும். கவனமாக டிசைன் பின்புறம் முழுவதும் க்ளூ பூசிக் கொண்டு ஒட்டிவிடுங்கள். க்ளூ டிசைனின் வெளி ஓரங்களில் சீராகப் பிடித்திருக்க வேண்டும் என்பது முக்கியம். அதிகமாகவும் இல்லாமல் போதாமலும் இல்லாமல் சரியான அளவு பூச வேண்டும்.

முக்கியம் - 1. க்ளவ் போட்டுக் கொள்ளுங்கள். 2. க்ளூவை கையால் தொட வேண்டாம். ஐஸ்க்ரீம் குச்சி வைத்துப் பூசலாம். 3. முகர்ந்து பார்க்க வேண்டாம். 4. வேலை செய்யும் முன் தரைக்கு பழைய பேப்பர் விரித்துக் கொள்ளுங்கள்.

அது போல் முதலிலேயே க்ளூ டப்பாவில் உள்ள இன்ஸ்ட்ரக்க்ஷனை வாசித்து விடுங்கள். மேலதிக க்ளூவை எப்படி நீக்குவது, 'க்யூரிங் டைம்' என்பது பற்றிய தகவல் கொடுக்கப் பட்டிருக்கும். அதன்படி காய விடுங்கள். தேவையானால் காயும் வரை டிசைன் மேல் ஒரு சிறு பாரம் வைத்துவிடலாம். இது டிசைனோடு ஒட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இதே போல் மாட்சிங்காக மீதி சோஃபாக்களிலும் ஒட்டி விடுங்கள்.

இப்படியான வேலைகள் அனுபவமில்லாது முதல் தடவை செய்கிற போது க்ளூ டப்பாவில் உள்ள விபரங்களைப் படித்து வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். முதலுதவி தெரியவேண்டும். நன்கு காய்ந்து பிடித்துக் கொள்ளும்வரை குழந்தைகளைக் அருகே விடவேண்டாம்.

சரியாகச் செய்தால் முடிவு அழகாக வரும். நிறையப் பாராட்டையும் வாங்கித் தரும். இப்படிச் செய்ய முடிவு செய்து வேறு ஏதாவது சந்தேகம் வந்தால் கேளுங்கள்.

முக்கியமான விடயம்.. சோஃபா திருத்தும் ஆளிடம் துணி வாங்கப் போகிறேன் என்று அதிகம் பேச்சுக் கொடுத்தால்... காரியம் கெட்டுவிடும். ;) அவர்கள் பேசுகிற விதத்தில் உங்களிடம் பேசி தங்களிடமே திருத்தக் கொண்டுவந்து கொடுக்க வைத்துவிடுவார்கள். பெரிய செலவு அது. ;)) விஷயத்தை முழுவதாக வெளியே விடாமல் க்ராஃப்ட் செய்யப் போவதாக மட்டும் சொல்லி வைக்கலாம். ;)

‍- இமா க்றிஸ்

இமா அனுபவம் பேசுற பேச்சு போலவே இருக்கே.உம்ம்.நானும் பாயின்ட்ஸ் நோட் பண்ணி வச்சிருக்கேன்;-)

அப்பிடில்லாம் கிடையாது தளி. எதுன்னாலும் நாம பண்ணினா அதுல ஒரு தனித்துவம், அழகு, லாபம், திருப்தி இருக்கும்.

வீட்டு வைத்தியத்துல சுகமாகிரும்கற விஷயத்துக்குல்லாம் எதுக்கு டாக்டர்ட்ட போகணும். ;))

ஊர் போயிருந்தப்ப தமிழ்ல ஒரு ரப்பர் ஸ்டாம்ப் செய்யப் போனேன். நான் விட்ட ரூல்ஸ்ல அந்த அங்கிள் என் வாயை குடைஞ்சு விபரம்லாம் அரைகுறையா வாங்கிட்டு... வெளிநாடுன்னு வேற மோப்பம் பிடிச்சுட்டு... ஒரு எம்போஸிங் மெஷினை தலைல கட்ட நினைச்சாங்க. நாம யாரு, இமால்ல. கர்ர்ர்னுட்டு கிளம்பி வந்துட்டேன். கடைசில வேற குட்டிக் கடைல போய் என் இஷ்டத்துக்கு திருப்தியா செய்து எடுத்தாச்சு. அவங்க பிஸ்னஸ் அவங்களுக்கு முக்கியம்; நம்ம பிஸ்னஸ் நமக்கும் முக்கியம்ல. ;)

ரேணுகா கார்த்தி.... சோஃபா போட்டோ எடுத்து எப்பிடியாச்சும் ;) அனுப்பினீங்கன்னா நான் அதுக்கேத்த மாதிரி அழகா டிசைன் போட்டு அனுப்புவேன்.

‍- இமா க்றிஸ்

நீங்கள் கூறிய பதில் எனக்கு கண்டிப்பாக ரொம்பவே உபயோகப்படும். நாங்கள் வைத்திருந்த லெதர் சோபாவை ஏன் குட்டிகள் பதம் பார்க்க நானும் இப்படி தான் கடையில் வித்த ஏதோ ஒரு பாட்ச் (கம்மும் அதுலே இருந்தது) வாங்கி ஓட்ட, அது பார்வையாகவே இல்லை. அதனால் அதை குட்வில்லுக்கு கொடுத்துட்டு இப்போ புதுசு வந்திருக்கு. நானும் மைக்ரோபைபர் தான் வாங்கலாம் என்றேன்......இருந்தாலும் அதன் மெயிண்டனன்ஸ் இதை விட ஜாஸ்தி என்பதால் இதையே வாங்கி விட்டோம். எதாவது ஆச்சுனா உங்களுக்கு எப்படியாவது போட்டோ (?!) கண்டிப்பாக வரும்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ம்... நிச்சயம் உதவி கிடைக்கும். ;)

‍- இமா க்றிஸ்

thanks for ur rply frnds.நீங்கல் சொன்ன ஐடியா நான் டிரை செயிரென்.நான் u.s இருக்கிரென்.இங்கு அது பொல் எங்கு கிடைகும் தெரியுமா?how can i send the photo?

மேலும் சில பதிவுகள்