பூண்டு ரசம்

தேதி: January 25, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (7 votes)

 

புளி - சிறு எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு - கால் கப்
தக்காளி - ஒன்று
உப்பு - தேவையான அளவு
பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை
வறுத்து அரைக்க:
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 2
பூண்டு - 8 பல்
தேங்காய்த்துருவல் - 4 மேசைக்கண்டி
தாளிக்க:
நெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 2 தேக்கரண்டி
மேலே அலங்கரிக்க:
கொத்தமல்லி, கறிவேப்பிலை


 

தேவையானவைகளை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
எண்ணெயில் வறுக்க வேண்டிய சாமான்களை ஒன்றன் பின் ஒன்றாக சிவக்க வறுத்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.
புளிக்கரைசலை கேஸில் வைத்து அத்துடன் தேவையான உப்பு, பெருங்காயப்பொடி, நறுக்கிய தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.
ஒன்றரைக் கப்பாக குறைந்து புளி வாசனை போனதும், அரைத்த விழுதை அதில் சேர்க்கவும்.
மேலும் பத்து நிமிடங்கள் கொதித்ததும் வெந்த துவரம்பருப்பை ஒன்றரைக் கப் தண்ணீரில் கரைத்து விட்டு, ரசம் பொங்கி வந்ததும் இறக்கவும்.
நெய்யில் கடுகு தாளித்து மேலே கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும்.

விருப்பப்பட்டால் சில முழுப் பூண்டுகளை நெய்யில் வதக்கி ரசம் கொதிக்கும் போது சேர்த்தால் அருமையாக இருக்கும். ரசத்தை எப்போதும் கொதிக்க விடக் கூடாது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆன்ட்டி அருமையான ரசம். நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்.

ரசம் ரொம்ப சூப்பரா இருக்கு.. வாழ்த்துக்கள்

"எல்லாம் நன்மைக்கே"

சூப்பரான ரசம் நான் ஒரு நாள் செய்து பார்கிறேன் ராதாம்மா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

உங்க குறிப்பு புடிச்சு இருக்குங்க ராதா. இதோ பூண்டுரசம் ட்ரை பண்ணப் போறேன். ;)

‍- இமா க்றிஸ்

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவைக் குழுவினருக்கு நன்றி.
நசீம், பாக்யா வாழ்த்துக்களுக்கு நன்றி.
தனா, இம்மா....ரசம் செய்து பார்த்துவிட்டு எப்படினு சொல்லுங்க...உங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

ராதாம்மா, ரசம் சாப்பிடுவேனோ இல்லையா.. ரச வாசனையை செலவில்லாம பிடிப்பேன். உங்களோட குறிப்பு வாசனையை பிடிக்கறதோட இல்லாம, செய்து சாப்பிடவும் தூண்டிருச்சி. நாளைக்கே பண்ணிட வேண்டியது தான். தேங்காய் சேர்த்து வித்தியாசமான,மணமான ரசம். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹ்ம்ம்...நன்றி கல்பனா...ரச வாசனையை மட்டும் பிடிக்கற உன்னை செய்யவே தூண்டின என் ரசத்தை செய்து பார்த்து சாப்பிட்டு சொல்லு!

ராதாம்மா இன்னைக்கு பூண்டு ரசம் பண்ணேன் சுவை நன்றாக இருந்தது நன்றி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

nandri.