க்ரிஸ்பி பொட்டேடோஸ்

தேதி: January 25, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.4 (14 votes)

 

உருளைக்கிழங்கு - 2
கார்ன் ஃப்ளேக்ஸ் (ரெகுலர்) - தேவையான அளவு
எண்ணெய் - தேவைக்கு
மைதா மாவு - அரை கப்
கார்ன் மாவு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி, பூண்டு - சிறிது [விரும்பினால்]


 

உருளையை தோல் சீவி நீள துண்டுகளாக வெட்டி சிறிது உப்பு சேர்த்து அரை பதமாக வேக வைக்கவும்.
வேக வைத்த துண்டுகளை எடுத்து நீர் இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன் மாவு, உப்பு சேர்த்து கலக்கவும்.
அரைக்க கொடுத்தவற்றை நைசாக அரைக்கவும்.
இதை மாவு கலவையுடன் சேர்த்து தேவையான நீர் விட்டு சற்று கெட்டியான மாவாக தயார் செய்யவும்.
கார்ன் ஃப்ளேக்ஸ் தேவையான அளவு எடுத்து சப்பாத்தி கட்டையால் ஒன்றிரண்டாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காயவிடவும்.
உருளை துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கரைத்த மாவில் விட்டு எடுக்கவும்.
பின் பொடித்த கார்ன் ஃப்ளேக்ஸில் பிரட்டி எடுத்து கையால் லேசாக பிடித்து நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.
சுவையான க்ரிஸ்பி பொட்டேடோஸ் தயார். பார்ட்டிக்களுக்கு ஏற்ற ஸ்டாட்டர். பொரித்து நீண்ட நேரம் வைத்தால் மொறு மொறுப்பு போய்விடும். செய்த உடனே சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனிக்கா வழக்கம் போலவே நல்ல குறிப்பு. க்ரிஸ்பி பொட்டேடோ சூப்பர். வாழ்த்துக்கள்.

வனிதா சூப்பர்.... கலக்குங்க... எப்படி தான் உங்கலுக்கு இப்படி புதுசு புதுசா ஐடியா தோனுதோ... பின்ரீங்க...”பல கலை அரசி’’னு உங்கலுக்கு பட்டம் அளிக்கலாம் இன்றூ முதல்...

புகழ்ச்சியை மூளைக்கு கொண்டு செல்லாதே, கவலையை மனதிற்கு கொண்டு செல்லாதே.நிதானமே நல்லது.

அன்புடன்,
*பர்வீன் பரீத்*

வனி அக்கா முகப்பில் போட்டோ பார்த்ததும் நீங்களாக தான் இருப்பீங்கனு நினைத்தேன்., சரியா இருக்கு., என்க்கு பொட்டட்டோ ல என்ன செய்தாலும் ரொம்ப பிடிக்கும்., ஈவ்னிங் செய்துடுறேன்., போட்டோ'ஸ் சூப்பர்ப்., கலக்குங்க., வாழ்த்துக்கள் .,

Yarupa athu vanitha thanae ... Ninaichean. Recipe parkum pothae vani sister than irukumnu ninaichean. Super intha recipe romba nala nan thedi kittu iruthean. Thank u

அசத்தீடீங்க.. ரொம்ப நல்லா இருக்கு. வித்தியாசமா யோசிச்சு இருக்கிங்க..

"எல்லாம் நன்மைக்கே"

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

தோழிகளே... இந்த குறிப்பை செய்யும்போது கார்ன் ஃப்லேக்ஸை இன்னும் நல்லா பொடி பண்ணிகிட்டு செய்யலாம். அப்போ உருளை முழுக்க நல்லா ஒட்டும். நாங்க கொஞ்சம் உருளை தெரிய, முழுக்க க்ரிஸ்பியா இல்லாத மாதிரி செய்திருக்கோம், பார்ட்டிக்கு பெரிய ஆட்கள் மட்டும் வந்ததால். குட்டீஸ்க்கு முழுசும் க்ரிஸ்பியா இருந்தா பிடிக்கும். அதனால் நல்லா பொடிச்சு உருளை முழுக்க ஒட்டும் படி செய்து பாருங்க.

நசீம்... மிக்க நன்றி. அவசியம் செய்து பாருங்க :)

பர்வீன்... பட்டமெல்லாம் தரீங்க ;) மிக்க நன்றி. என்ன செய்ய புதுசா செய்யலன்னா பார்ட்டியை ஓட்ட முடியாதே.

சோபனா... அவசியம் செய்து பார்த்து சொல்லுங்க. நான் சொன்ன மாதிரி இன்னும் கொஞ்சம் பொடி பண்ணி செய்து பாருங்க. மிக்க நன்றி.

கௌதமி... மிக்க நன்றி. அவசியம் செய்து பார்த்து எப்படி வந்ததுன்னு சொல்லுங்க. எப்படி தான் கண்டு பிடிக்கறீங்கன்னு எனக்கு தெரியல. :) நானும் கப்பு, தட்டு எல்லாம் மாற்றி பார்க்குறேன், அப்பவும் கண்டு பிடிச்சுடுறீங்க.

பாக்கியா... மிக்க நன்றி. இதே போல் சிக்கன், இட்லி எல்லாம் ஃப்ரை பண்ணலாம். கொஞ்ச நாள் போகட்டும், நேரம் கிடைக்கும் போது செய்து அனுப்பறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிரிஸ்பி பொடேடோ சூப்பர் பா..... அடுத்த தடவை செய்யும் போதே சொல்லிடுங்க..... அங்க வந்துடறேன்...
அப்பத்தான் சுட சுட சாப்பிட முடியும்..... :)

நல்ல குறிப்பு வனி என் பசங்களுக்கு எண்ணைல பொறித்த டிஷ் ரொம்ப ரொம்ப புடிக்கும் நான் கண்டிப்பா ட்ரை பண்றேன் வாழ்த்துக்கள்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

இதுவும் மாலத்தீவு ரெசிப்பியா குறிப்பு நல்லா இருக்கு. செய்து பார்க்கிறேன்.

வனீக்கா ரொம்ப ரொம்ப சூப்பரா க்றிஸ்பியா இருக்கு.

ஹாய் அக்கா ரொம்ப வித்தாயாசமான recipe சூப்பர்

ஸஃபிகா

குறிப்பு அருமையா இருக்கு. உங்க வீட்டு பார்ட்டிக்கு வந்த மூணு நாலு பவுண்ட் ஏறாம போக மாட்டாங்க போல.....இந்தியா வந்தால் கண்டிப்பாக நீங்களும் சென்னை வாங்க....அப்போ தானே எனக்கு ட்ரீட் வைக்க முடியும் :)...வரும்போது பெரிய பட்டாளத்துடன் வருவேன்....அதுவே பெரிய பார்டி மாதிரி இருக்கும்....பயப்பட கூடாது....சரியா....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

சூப்பர் ரெசிபி,கைவசம் நிறைய இருக்கு உங்ககிட்ட..

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனிதா, evening snacks ku உங்க கிரிஸ்பி பொட்டேடோஸ் செய்தேன் . சூப்பரா, கிரிஸ்பி ஆ இருந்தது. என் மகனும் விரும்பி சாப்பிட்டான்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

வனிக்கா பார்க்கவே நல்லா இருக்கு 2 நாளைக்கு முன்னாடி தான் பொடட்டொ ல எதாவது செஞ்சி தா ன்னு என் ஹஸ் கேட்டாங்க நல்ல டைம்ல நீங்க போஸ்ட் பன்னிர்க்கிங்க ரொம்ப நன்றி வனிக்கா. .

அன்புடன்,
zaina.

வனி, சாதாரணமா உருளைகிழங்குன்னு பேப்பர்ல எழுதி தந்தாலே பேப்பரை மேய்ஞ்சுடுவேன் (தப்பா நினைக்கப்படாது.) அவ்ளோ பாசம் உருளை மேல. இன்னும் நீங்க வேற அசத்தலா, வெங்காயம்,மிளகாய்,இஞ்சி, பூண்டு கூட்டணில க்றிஸ்பி பொட்டேட்டோ குறிப்பு தந்துட்டீங்க. இனி நிதம் நிதம் க்றிஸ்பி தான் ;) புதுமையான குறிப்பிற்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள் வனி :) அதென்ன ரெண்டே ரெண்டு எனக்கு மட்டும் வச்சிருக்கீங்க? மத்த கோழீஸ் கோச்சுக்கறதுக்குள்ள அவங்களுக்கும் கொஞ்சூண்டாச்சும் தந்துருங்க வனி :D

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

தீபா... மிக்க நன்றி. அடுத்த முறை செய்யும்போது நிச்சயம் சொல்லிடுறேன் :)

தனா... மிக்க நன்றி. எனக்கும் ரொம்ப விருப்பம் :) ட்ரை பண்ணிட்டு அவசியம் சொல்லுங்க.

வினோ... இது மாலத்தீவு குறிப்பில்லை, நம்ம ஊர் குறிப்பு தான். ;)பார்ட்டிக்கு செய்தது. செய்து பார்த்து அவசியம் சொல்லுங்க. மிக்க நன்றி :)

கீஃபா... மிக்க நன்றி. ட்ரை பண்ணி பாருங்க :)

ஸஃபிகா... மிக்க நன்றி. புதிதாக இணைந்திருக்கீங்களா?? உங்க பெயர் அழகு. :)

லாவண்யா... ஊருக்கு வந்தாலே சென்னைக்கு தானே வரேன்... வேற எங்க போறேன் ;) இதுக்காகவாது வீட்டுக்கு வந்தா மகிழ்ச்சி தான். அவசியம் வாங்க. மிக்க நன்றி.

முசி... மிக்க நன்றி. ஹிஹிஹீ. ஏதோ கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கறேன் :)

கார்த்திகா... மிக்க நன்றி. அதுக்குள்ள செய்துட்டீங்களா??? மிக்க மகிழ்ச்சி :)

ஸைனா... செய்து கொடுத்து பிடிச்சுதா எப்படி வந்ததுன்னு அவசியம்ச் ஒல்லனும். மிக்க நன்றி :)

கல்பனா... மிக்க நன்றி. எனக்கும் உருளை பிடிக்கும், அதுக்கும் என்னை பிடிக்கும் (வாய்வு ;) ஹிஹிஹீ) அவசியம் செய்து பாருங்க. பார்ட்டி அன்று செய்தது, அதுக்கு மேல நின்னு பொரிக்க எனக்கு நேரமில்லை, பார்ட்டி துவங்கின பின் வேலை ஆட்கள் தான் முழுசும் பொரிச்சாங்க. அப்போ போட்டோ எடுக்க முடியாதுன்னு முதல்ல அவசரமா இரண்டு மட்டும் நான் செய்து எடுத்தேன். நேரில் வாங்க... எல்லாருக்கும் நிறைய செய்து கொடுத்துடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Its very nice:) I will also try :)

மிக்க நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா