மீன் குழம்பு - 2

தேதி: January 27, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (8 votes)

 

மீன் - ஒரு கிலோ
வெந்தயம் - கால் தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
கசகசா - 1 1/2 தேக்கரண்டி
புளி - 2 நெல்லிக்காய் அளவு
தக்காளி - 3
வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பச்சைமிளகாய் - 4
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காய விழுது - கால் கப்
தனியா தூள் - 5 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
மாங்காய் - ஒன்று
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து


 

மீனை சுத்தம் செய்து வைக்கவும்.
வெந்தயம் மற்றும் சீரகத்தை லேசாக மட்டும் வறுத்து பொடிக்கவும்
கசகசாவை ஒரு டம்ளர் நீர் விட்டு வேகும் வரை கொதிக்க வைத்து பின் தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
புளியை அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் கரைக்கவும். அத்துடன் தனியா தூள் சேர்த்து கரைத்து வைக்கவும்.
தக்காளியை நான்காகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும், பச்சைமிளகாயை நடுவில் கீறியும் வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடித்த சீரகம் மற்றும் வெந்தயத்தை சேர்க்கவும்
அத்துடன் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
மிளகாய் தூளின் பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து உடைக்காமல் லேசாக கிளறவும்.
ஓரளவுக்கு தக்காளியின் தோல் சுருங்கும் போது சின்ன வெங்காய விழுது சேர்த்து வதக்கவும்
பின்னர் புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்து மசாலா வாசனை போனதும் அரைத்த தேங்காய் கசகசா விழுது மற்றும் மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.
மீண்டும் கொதி வந்ததும் மீனை ஒவ்வொன்றாக வெவ்வேறு இடங்களில் போட்டு தேவைக்கு உப்பும் சேர்த்து வேக விடவும்.
மீன் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆஹா எவ்வளவு அழகா செய்து காட்டி இருக்கீங்க.பாராட்டுக்கள்.

மீன் குழம்பு நல்லா இருக்கு ஆமி. ஸ்டெஃபை ஸ்டெப்பா அழகா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.... ஆமீனா. நான் பதிவு போட காரணமே நீங்க மீனை அழகா கட் பண்ணி (நீங்க தானே!!!) சுத்தம் செய்து வச்சிருக்கீங்க... உங்க தக்காளி நிறம்..... அதை கட் பண்ணியிருகிறது......சூப்பராயிருக்கு... நானும் பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன்...... இன்னைக்கு அதை சொல்லிட்டேன்...

அருமையான மீன் குழம்பு.. பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு....அடுத்த வாட்டி எங்க வீட்ல இந்த வகை மீன் குழம்பு தான்..

"எல்லாம் நன்மைக்கே"