விட்டேனாபார்

தேதி: January 28, 2012

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

இட்லி - 15
டொமெட்டோ சாஸ் - கால் கப்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
கடுகு - கால் தேக்கரண்டி
தேங்காய் விழுது - கால் கப்
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - அரை மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்


 

முதலில் இட்லியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மிளகாய் தூள், உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கி விடவும்.
2 நிமிடம் கழித்து அதில் டொமெட்டோ சாஸ் ஊற்றி மேலும் 2 நிமிடம் கொதிக்க விடவும்.
கொதித்து வந்ததும் தேங்காய் விழுது, மஞ்சள் தூள் போட்டு கிளறி மூடி விடவும்.
15 நிமிடம் கொதித்த பிறகு நறுக்கி வைத்திருக்கும் இட்லி துண்டுகளை அதில் போட்டு நன்கு ஒன்றாக சேரும் படி கிளறி இறக்கவும்.
சுவையான விட்டேனாபார் ரெடி.
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு . சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுமதி மேடம், குறிப்புக்கு சூப்பர் பேர் வச்சிருக்கீங்க :) உண்மையாவே இது வைக்கப்பட்ட பெயரா? இல்லையென்றால் ஏற்கனவே வழக்கத்தில் இருக்கும் பெயரா? நல்ல வேலை கன்னத்தில் விட்டேனா பார்னு வைக்காம போனீங்க :D.

உண்மையாவே நல்லதொரு புதுமையான குறிப்பு. குட்டீஸ் இந்த முறையில் இட்லியை விரும்பி சாப்பிடுவாங்க. டெரரான குறிப்பு தந்த உங்களுக்கு அன்பான ஒரு வாழ்த்தையும் சொல்லிடறேன் :) தொடர்ந்து குறிப்புகளை வாரி வழங்குங்க.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

யார் மேலங்க கோபம்.. ;)கல்ப்ஸ் சொன்னது போல தலைப்பே டெர்ரரா தான் இருக்கு..

டிஷ் இம்ப்ரெஸ் பண்ணதை விட பெயர் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு. :) வீனா போனாலும் உன்னை விட்டேனா பாருன்னு இட்லிக்கு சவால் விட்டீங்க போல ;) அருமையா இருக்குங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பெயர் எங்கே இருந்து செலக்ட் பண்ணிங்க ரொம்ப டெரர் ஆனா பேரா இருக்கு என் பொண்ணுக்கு இட்லி என்றால் புடிக்காது நானும் சொலுறேன் இத பண்ணி குடுத்து என் பொண்ணை உன்னை சாப்பிடாமா என்று சொல்ல போறேன் நல்ல குறிப்பு நன்றி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

சூப்பர் விட்டேனாபார்.. நல்லா செய்து காண்பிச்சு இருக்கீங்க... சட்னி சாம்பார் இல்லாமலே சாப்பிடலாம் .. நன்றி

"எல்லாம் நன்மைக்கே"