சிக்கன் லெக் ப்ரை

தேதி: January 30, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (15 votes)

 

சிக்கன் லெக் - அரை கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - ஒரு கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
பட்டை - ஒன்று
கிராம்பு - 3
சோம்பு - சிறிதளவு
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

முதலில் சிக்கன் லெக், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், பட்டை, கிராம்பு, தயிர், உப்பு சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் தனியாக வைத்து விடவும்.
பின்னர் பிரஷர் குக்கர் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதில் பொடியாக நறுக்கின தக்காளியை சேர்த்து நன்றாக குழையும் வரை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
மசாலா கலவையுடன் ஊற வைத்து உள்ள சிக்கன் லெக் கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும். இதில் இருக்கும் தண்ணீரே போதுமானது. பின்னர் குக்கரை மூடி ஒன்று அல்லது இரண்டு விசில் விடவும்.
குக்கரில் வேக வைத்த சிக்கனை ஒரு வாய் அகன்ற தவாவில் மாற்றி நன்றாக கொதிக்கவிடவும். பின்னர் அதனுடன் கரம் மசாலா சேர்த்து கிளறவும்.
கரம் மசாலா சேர்த்தவுடன் மசாலா கலவை, சிக்கனுடன் சேர்ந்து திக்காக ஆகும். அப்போது அடுப்பை வேகப்படுத்தி நன்றாக வறுக்கவும்.
சுவையான சிக்கன் லெக் ப்ரை ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப அருமை... அப்படியே இங்க அனுப்புங்க... சிக்கன் லெக் தான் எனக்கு ரொம்ப ரொர்ம்ப ரொம்ப பிடிக்கும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹிஹிஹீ..வேற வார்த்தையே வர மாட்டேங்குதே..Slruppppp!!

பார்க்கவே அப்படியே சாப்பிடலாம் போல தோணுது. அழகான சுவையான குறிப்புக்கு வாழ்த்துக்கள். அதுவும் ரெண்டுமணிநேரம் கிரேவியில் ஊற வைத்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்ல. சூப்பர்..............

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

எனக்கு சிக்கன் லெக் வீட்டில் செய்ய வேண்டும்னு ரொம்ப ஆசை... கண்டிப்பா ஞாயிறு வீட்டில் இந்த டிஷ் தான்..... சூப்பரா இருக்கு பாக்க.........

சூப்பரோ சூப்பர்,வழக்கமான ப்ரை மாதிரி இல்லாமல் வித்தியாசமா இருக்கு.வாழ்த்துக்கள்

எனது குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு நன்றி.

Vanitha Vilvaar... - பாராட்டுக்கு நன்றி. இருங்க சிக்கெனை எழுப்பி காலால் நடந்து உங்கள் வீட்டுக்கு நடந்து வர செய்கிறேன். புடிச்சி saappittu விடுங்கள்.

thalika - உங்க expression சூப்பர்.

M.AnandapriyaArasu - பாராட்டுக்கு நன்றி, ஊற வைப்பதினால் ரொம்ப சாப்டாக இருக்கும்.

Priya Jayaram - பாராட்டுக்கு நன்றி, ஆமாம் சிக்கன் லெக் வீட்டில் செய்தால் ப்ரீயாக, நிம்மதியாக சாப்பிடலாம்.

reem - ரொம்ப நன்றி.

இதுவும் கடந்து போகும் !

அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு.அழகா செய்து காட்டி இருக்கீங்க..செய்யவும் ரொம்ப ஈசியா இருக்கு..

"எல்லாம் நன்மைக்கே"

மஹி சூப்பரான சுவையான லெக் ஃபரை பார்க்கவே சாப்பிட தூண்டுது கண்டிப்பா செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

Enaku en kanavar ,pasagalku apprama romba pitichathu chikenthan.enakum randu leg pis anupuga .hi..hi....

Be simple be sample

மகி,
சிக்கன் லெக் ஃப்ரை, சூப்பரா இருக்கு!. பார்க்கும்போதே டெம்ப்டிங்கா இருக்கு! அடுத்தமுறை லெக் பீஸஸ் வாங்கும்போது இதுப்போல செய்துப்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

ஐயோ ... பார்க்கவே சூப்பர் ஆ இருக்கு .. கண்டிப்பா இந்த டிஷ் ட்ரை பன்னுவேன் ..

அன்புடன் ,
கௌசல்யா

குழந்தைகள் உலகம் சொர்க்கம்!!

நன்றி packialakshmi, swarna vijayakumaar, Revathi.s, Susri27, Kausalyasankar.

இதுவும் கடந்து போகும் !