பீட்ரூட் புலாவ்

தேதி: January 31, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

பாசுமதி அரிசி - 2 கப்

பீட்ரூட் - 1

கேரட், பீன்ஸ், பட்டாணி -‍ 1 க‌ப்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் -‍ 2

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

மிள‌காய்த்தூள் - 1 தேக்க‌ர‌ண்டி

த‌னியாத்தூள் - 2 தேக்க‌ர‌ண்டி

தேங்காய்ப்பால் - 1 கப்

பிரியாணி இலை - 1

ப‌ட்டை, ஏல‌க்காய் -‍ 2 (அ) விருப்ப‌த்திற்கேற்ப‌

அன்னாசிப்பூ - 1

கிராம்பு - 4

எண்ணெய் - 2 தேக்க‌ர‌ண்டி

உப்பு - தேவையான‌ அள‌வு

பொதினா, கொத்தமல்லி தழை -‍ 1/4 கட்டு


 

அரிசியை த‌ண்ணீரில் போட்டு, க‌ழுவி நீரை கொட்டிவிட்டு, புதிய தண்ணீர் பிடித்து ஒரு 15 - 20 நிமிடங்கள் ஊறவிட‌வும்.

பீட்ரூட்டை தோல் சீவிவிட்டு சிறிய ச‌துர வடிவ துண்டுகளாக நறுக்கி வைக்கவும். கேர‌ட், பீன்ஸையும் பொடியாக நறுக்கி வைக்க‌வும். வெங்காய‌த்தை மெல்லிய‌ துண்டுக‌ளாகளாகவும், ப‌ச்சை மிள‌காயையை நீளவாகில் கீறியும் வைக்க‌வும்.

குக்கரில் எண்ணெய்விட்டு, அது காய்ந்த‌‌தும், ம‌சாலா பொருட்க‌ள் எல்லாவ‌ற்றையும் ஒவ்வொன்றாக‌ சேர்க்க‌வும். பிற‌கு ந‌றுக்கி வைத்த வெங்காயம், ப‌ச்சை மிள‌காய் போட்டு வ‌த‌க்க‌வும். வெங்காய‌ம் கொஞ்ச‌ம் நிற‌ம் மாறி வ‌ரும்போது, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் 5 நிமிட‌ங்க‌ள் வ‌த‌க்க‌வும். அடுத்து அரிந்து வைத்த‌ காய்க‌றிக‌ள், ப‌ட்டாணி சேர்த்து, கூட‌வே, அல‌சி எடுத்த‌ பொதினா, கொத்த‌ம‌ல்லி த‌ழையை சேர்க்க‌வும்.

சிறிது நேரம் இதை வதக்கியப்பிறகு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து சிறிது வ‌த‌க்கி, பிற‌கு 1 க‌ப் தேங்காய்ப்பாலையும், கூட‌ 3 க‌ப் த‌ண்ணீரையும் அளந்து சேர்க்க‌வும். (அரிசி:த‌ண்ணீர் அள‌வு, 1:2 என‌ இருக்க‌வேண்டும்.)

எல்லாம் சேர்ந்து தளதளவென கொதித்து வரும்போது, குக்க‌ரை மூடி, லேசாக ஆவி வ‌ரும்போது வெயிட் போட்டு, இர‌ண்டு விசில் விட்டு இற‌க்கிவிட‌வும்.

ஆவி அட‌ங்கிய‌தும், குக்க‌ரை திறந்து, சாதம் உடையாமல் மிருதுவாக‌ க‌லந்து விட‌வும். இப்போது க‌ம‌கம‌ டேஸ்டி பீட்ரூட் புலாவ் த‌யார்! வெங்காய‌ தயிர்ப் ப‌ச்ச‌டியுட‌ன் சாப்பிட‌ மிக‌ அருமையாக‌ இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

akka nenga sonna madiri 2day senjan.. very nice.. diff a irunthuchu ka.........we reallly liked this

லின்சி,
இரண்டு முறை செய்திங்களா?! உங்களுக்கு பிடித்து இருந்ததில் ரொம்ப சந்தோஷம். செய்து பார்த்ததோட இல்லாமல் மறக்காம இங்கு வந்து சொன்னதற்கும் சேர்த்து மிக்க நன்றி.

அன்புடன்
சுஸ்ரீ

பீட்ரூட் புலாவ்
ரொம்ப அருமையா, வித்தியாசமா இருந்தது. என் மகளுக்கு ரொம்ப பிடித்தது. நன்றி வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்

வெரி டேஸ்டி... என் குட்டீஸ்க்கும் எனக்கும் ரொம்பவே பிடிச்சுது :) சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி சுஸ்ரீ. மகள் நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா