
உற்சாகமாக வீட்டை விட்டு கிளம்பிய மகனும், மகளும் சோகம் கப்பிய முகத்தோடு தளர்ந்து போய் வருவதை பார்த்த சுலேகா பதறியவளாய், "அனு, என்னடா ஆச்சு? ராக்கி முகம் ஏன் கலவரமா இருக்கு? பீச்சுக்கு தானே போய்ட்டு வந்தீங்க. அங்கே ரவுடி பசங்க எதாவது வம்பு சண்டைக்கு வந்தாங்களா? இதுக்கு தான் அடிச்சுகிட்டேன். நேரங்கெட்ட நேரத்தில் வயசு பொண்ணோட அங்கெல்லாம் போக வேண்டாம்னு. கேக்கரீங்களா ரெண்டு பேரும். என்னவோ பண்ணுங்க போங்க. சரி, வாங்க சாப்பாடு போட்டுட்டு போய் படுக்கறேன்?” என கவலை தோய்ந்த முகத்தோடு பேசிய தாயிடம் நடந்த சம்பவங்களை அனு விளக்கினாள்.
அப்போது தான் சுலேகா தீவிர யோசனைக்கு சென்றாள். பெண் பார்க்க போன நாளிலிருந்து மகனிடம் ஏற்பட்ட அன்றாட மாற்றங்களை வரிசைப்படுத்தி பார்த்தாள். வெளியே சொல்ல முடியாத ஏதோ ஒரு மர்மம் மகனை சூழ்ந்துள்ளது. அதை எப்படி நிவர்த்தி செய்வது? யாரை அணுகுவது? ஸ்ரீநிவாசுக்கு அத்தனை பொறுமை கிடையாது. அப்போது தான் கிராமத்தில் தங்களின் குடும்ப ஜோதிடர் ஜானபிரகாசம் நினைவில் வந்து நின்றார். அவரிடம் செல்வது ஒன்றுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என முடிவு செய்து தூங்க சென்றாள்.
வழக்கமான தூக்கத்தை தொலைத்த ராக்கி, அன்று இரவு எப்படியும் தூங்கியே ஆகவேண்டும் என்ற முடிவோடு தூக்க மாத்திரை போட்டு படுத்தான். கொஞ்ச நேரம் தான் தூங்கியிருப்பான். எங்கிருந்தோ வந்த மல்லிகையின் மணம் அவனையுமறியாமல் அவனை வீட்டின் முன்புறமிருந்த கார்டனுக்கு இழுத்து வந்தது. நாய் ஒன்றின் அழுகை குரல் மிகவும் பலவீனமாக காற்றில் வர, உள்ளே நாய் எங்காவது நுழைந்து விட்டதா என சத்தம் வந்த பக்கம் போய் கொண்டிருந்தான். சத்தம் மிக அருகிலும், பாதை அதிகமாகவும் போய்க் கொண்டே இருந்தது. வழியில் மல்லிகையின் மணமும், எரியும் பிணத்தின் நெடியும் மாறி மாறி வந்துக் கொண்டிருந்தன. இப்போது நாயின் குரல் ஓய்ந்து ஒரு குழந்தையின் குரலும், பெண்ணின் சிரிப்பொலியும் மாறி மாறி கேட்க, நடையின் வேகத்தை கூட்டிக் கொண்டு ஏறக்குறைய சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான். அங்கே.. அங்கே… நீண்ட தலைமுடியோடு கூடிய தலையை பந்து போல உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது ஒரு குழந்தை.
ரத்த ஓட்டம் நின்று முகமெல்லாம் வெளுக்க விழியகல பார்த்துக் கொண்டிருந்தவன் முகத்திற்கு முன்னால் திடீரென நீண்ட தலைமுடி மேல்நோக்கி சிலுப்பி நிற்க, அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது அந்த பெண்ணின் தலை. ஓடப்போனவனை அந்த குழந்தை அதன் வயதிற்கு மீறிய பலத்தோடு பிடித்து தள்ள, நிலை தடுமாறி விழுந்தவன், கைகளை ஊன்றியபடியே பின்னோக்கி போய் கொண்டிருந்தான். அங்கே குப்பைகளை மக்கச் செய்யும் குழி இருப்பதை கவனிக்காமல் அதன் முனையில் போய் உட்கார்ந்திருந்தவன், திரும்பி அந்த குழியை பார்த்தான். அங்கே குழிக்குள் தலையில்லாத முண்டம் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க, அந்த குழந்தை எதிரில் அமர்ந்து, தலையை மாறி மாறி உருட்டி பந்தாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். சர்ரென திரும்பி இருவரும் அவனை பார்க்க, அதே இடத்தில் மயங்கி சரிந்தான்.
மகனின் புதுவித கவலையால், அவனுடைய ஒவ்வொரு சின்ன செய்கைகளையும் சுலேகா கண்காணிக்க தொடங்கினாள். “எசமா.. எசமா.. சின்னய்யா தோட்டத்துல பேச்சு, மூச்சில்லாம உழுந்து கெடக்கறாருங்க.. வந்து பாருங்களேன்” என்ற தோட்டக்காரர் மாரிமுத்துவின் குரல் கேட்டு ஸ்ரீநிவாசும், சுலேகாவும் ஒரே குரலில் ”அய்யோஒ…ராக்கீஈஈ” என பதறியபடியே தோட்டத்தை நோக்கி ஓடினார்கள். அங்கே ராக்கி உடல் முழுவதும் சில்லிட்டு விரைத்து போய் அசைவற்று கிடந்தான்.
ஸ்ரீநிவாஸ் அதிகம் யோசிக்காமல், உடனே காரை எடுத்து அதில் மகனை கிடத்தி கொண்டு கிளம்பினார். சிறு விசும்பலோடு சுலேகாவும் காருக்கு பின்னால் ஏறிக்கொண்டு மகனின் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டாள். கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் அனிச்சையாய் அவளையும் மீறி மகனின் கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்தது.
கார் ஒரு தனியார் மருத்துவமனையின் கேட்டை தொட்டு நிற்க, அதற்குள் வார்ட் பாய் ஒரு ஸ்ட்ரெக்சரை தள்ளிக் கொண்டு வந்து அதில் ராக்கியை கிடத்தி வேகமாக அவசர சிகிச்சை பிரிவிற்கு தள்ளிச் சென்றான். பின்னாலேயே ஸ்ரீநிவாசும், சுலேகாவும் நடையில் வேகத்தை கூட்டி ஒருவித பதற்றத்தோடு பின் தொடர்ந்தார்கள். சில நிமிட சோதனைகளுக்கு பிறகு டாக்டர் அறையை விட்டு வர, இருவரும் ஆவலோடு டாக்டரை நெருங்கினார்கள்.
“மிஸ்டர் ஸ்ரீநிவாஸ், உங்க சன்னுக்கு உடம்பில் எந்த பிரச்சனையும் இல்லை. ஏதோ ஒரு நிகழ்ச்சி அவரோட மூளையை ஆழமா பாதிச்சிருக்கு. அதன் விளைவு தான் மயங்கி விழுந்தது. இப்ப நான் ஒரு இன்ஜக்ஷன் போட்டிருக்கேன். கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிஞ்சுடும். நீங்க டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம். இன்னொரு விஷயம் ஸ்ரீநிவாஸ், உங்க சன் தொடர்ந்து இதே ஸ்டேட்டஸ்ல இருந்தார்னா, ஒரு சேஞ்சுக்காக ஹில் ஸ்டேஷன் மாதிரி இடங்களுக்கு கொண்டு போய்ட்டு வாங்க. நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும். டோண்ட் ஒர்ரி. ஹி வில் பி ஆல்ரைட்” என்றபடி கோட் பாக்கெட்டில் கையை விட்டபடி அந்த இடத்தை விட்டு அகன்றார்.
ராக்கியை ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்தது அதற்குள் அவன் நண்பர்களுக்கு தெரியவர, ஒரு பட்டாளமே நலம் விசாரிக்க அங்கு வந்து விட்டது. சொல்லி வைத்தது போல ராக்கியும் மயக்கம் தெளிந்து தலையணையில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் சுலேகா ஆரஞ்சை பிழிந்து கொண்டிருந்தாள். “ஹேய் மச்சான், என்னடா ஆச்சு உனக்கு? தாடியெல்லாம் வளர்த்து சோகமயமா இருக்கே. எங்களுக்கும் போன் பண்றதே இல்லை. நீ இல்லாம நம்ம செட் வறண்டு காய்ஞ்சு போயிருக்குடா. ரெகவர் ஆகி சீக்கிரம் வாடா. பழையபடி மஜா பண்ணுவோம்” என வார்த்தையாலே அவனுக்கு உற்சாகமூட்ட நினைத்தான் ஒரு நண்பன்.
ராக்கி வலுக்கட்டாயமாக ஒரு வறட்சியான சிரிப்பை உதடுகளுக்கு தந்து, “ஹாய் கெய்ஸ், வாங்கடா.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஐம் ஆல் ரைட். சீக்கிரமே நாம வழக்கமா மீட் பண்ற இடத்துல மீட் பண்ணுவோம்டா. நீங்க வந்தது சந்தோஷம். சரிப்பா நீங்க எல்லாரும் கிளம்புங்க. சீப் டாக்டர் பார்த்தா சத்தம் போடுவார். நான் வீட்டுக்கு வந்ததும் உங்களுக்கு கால் பண்றேன்”
சிறிது நேரம் பொதுவான பேச்சு மற்றும் அவரவர் வேலைகளை பற்றி பேசிவிட்டு அனைவரும் ராக்கியிடமும், சுலேகாவிடமும் விடைபெற்றுச் சென்றார்கள்.
ஆஸ்பிட்டல் பார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு கிளம்பினார்கள். கார் பங்களாவின் கேட்டை தொட்டு காரிடாருக்குள் நுழையும் போதே, ராக்கிக்கு, உடல் வியர்க்க தொடங்கி, சிறு பிள்ளைகள் பயப்படுவதை போல பயந்து ஒடுங்கி உட்கார்ந்துக் கொண்டான். தனக்குள்ளே “நான் இந்த வீட்டுக்கு வரமாட்டேன். இங்கே என்னவோ இருக்கு.. இங்கே என்னவோ இருக்கு” என பிதற்ற .. ஒன்றும் புரியாமல் இருவரும் விழித்து நின்றார்கள்.
“ராக்கிமா, வா வீட்டுக்குள்ளே போகலாம். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. எல்லாம் சரியாகும்”
“என்னால முடியாது.. நான் வரல.. நான் வரல்.. இந்த வீட்டுக்கு வந்தா நான் செத்துடுவேன்.. என திக்கி திக்கி சொல்லி முடித்தான்.
சுலேகாவும், ஸ்ரீநிவாசும் செய்வதறியாது நிற்க…
“என்னங்க, டிரைவரை கூப்பிட்டு வண்டியை எங்க கிராமத்துக்கு விட சொல்லுங்க. நானும், ராக்கியும் எங்க அம்மா வீட்ல ஒரு வாரம் தங்கிட்டு வர்றோம். நம்ம ராக்கிக்கும் அது ஒரு நல்ல மாற்றமா இருக்கும். நீங்க இங்கே பொண்ணை பார்த்துக்கோங்க. அவ ஸ்கூல் விட்டு வந்ததும் சொல்லிடுங்க. நான் அங்கே போனதும் போன் பண்றேன்”
“ஓகே லேகா, நீ சொல்றது சரியாதான் இருக்கு. இவனை இங்கேயே வச்சிருந்தா இன்னும் நிலைமை மோசமாத்தான் போகும். அனுவை நான் பார்த்துக்கறேன். நீ கவலைப்படாம இவனை மட்டும் பார்”. என்று அவர்களை வழியனுப்பி வைத்தார் ஸ்ரீநிவாஸ்.
கார் நெல்லியூரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. போகும் வழியிலேயே போன் செய்து ஊருக்கு வருவதை கணக்கு பிள்ளையிடம் சொல்லி விட்டாள்.
கார் கிராமத்தில் நுழையும் முன்னரே எதிர்படும் அத்தனை பேரும் அவளையும், ராக்கியையும் அன்போடு குசலம் விசாரித்து சென்றார்கள். வீடு வந்தும் சேர்ந்தார்கள். இரண்டு பெரிய திண்ணைகளோடு கூடிய முன்பக்கம் ஓடு வேயப்பட்ட அந்த வீடு உயிரோட்டத்துடன் பழமையை தாங்கி இருந்தது. காதுகளில் பம்படம் தொங்க 80 வயது நிரம்பிய முதிய பெண்மணி, சுலேகாவையும், ராக்கியையும் வாசலிலேயே ஆரத்தழுவி தன் வெற்றிலை பாக்கு வாயோடு உச்சி முகர்ந்தாள்.
இதற்குள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் நேரவாரியாக தனித்தனியாக வந்து இருவரையும் விசாரித்து சிறிது நேரம் இருந்து பேசிவிட்டு சென்றார்கள். நகர பரபரப்பில் இருந்து பழக்கப்பட்ட ராக்கிக்கு இந்த பாசமான விசாரிப்புகளும், உபசரிப்புகளும் மனதிற்கு இதத்தை அளிக்கவே செய்தன. இவர்களின் வருகை முன்பே தெரிந்திருந்ததால் சுலேகாவின் தாய்.. தன் கைப்பட மகளுக்கும், பேரனுக்கும் கோழி அடித்து குழம்பு வைத்திருந்தாள், அதன் பாகங்களை அருமையோடு பாங்காக சமைத்து வைத்திருந்தாள். கேப்பையில் செய்த வெல்ல பணியாரம், சுய்யம், சோள அடை என பார்த்து பார்த்து சமைத்திருந்தாள். சாப்பாடு உபசரிப்பு முடிந்து ஒருவழியாக அனைவரும் படுக்கைக்கு சென்றார்கள். நீண்டதூர கார் பயணம் தந்த களைப்பு ராக்கிக்கு தூக்கத்தை தந்தது. மறுநாள் காலை நல்ல தெளிவோடும், புது தெம்போடும், பாட்டி போட்டு தந்த கருப்பட்டி சுக்கு காப்பியை ரசித்து குடித்து விட்டு கணக்கு பிள்ளையோடு சேர்ந்து வயல்வெளிகளை பார்க்க கிளம்பினான்.
இப்படியே தன் வீட்டையும் மறந்து, பிசினசையும் மறந்து பத்து நாட்கள் இருந்தான். மகனின் மாற்றத்தை கண்ட சுலேகாவுக்கு இப்போது தான் மூச்சே வந்தது. அதனாலேயே தான் பார்க்க திட்டமிட்ட ஜோதிடரை பார்க்கும் எண்ணத்தையும் கைவிட்டாள்.
ஒருநாள் இரவு உணவை முடித்து வீட்டுக்கு வெளியே இருந்த கயிற்றுக் கட்டிலில் படுத்து நிலவின் அழகை ரசித்தபடி உடலை வருடிய தென்றல் காற்றின் மென்மையில் தன்னை மறந்து கண் அசந்தான்.
“ராக்கி, உள்ளே வந்து படு. நடு நைட் பனி பொழியும். உனக்கு ஒத்துக்காது” என சுலேகா குரல் கொடுக்க..
“அம்மா, இன்னும் கொஞ்ச நேரம் மா ..ப்ளீஸ்.. இந்த க்ளைமேட் ரொம்ப நல்லார்க்கு. நீங்க போய் படுங்க.. நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்” என்று சொல்லிவிட்டு பழையபடி இமைகளை மூடினான்.
அப்போது இருளின் அமைதியை கிழித்தபடி… ஊசி விழுந்தாலும் சத்தம் எழுப்பும் அந்த மயான அமைதியில்… "ராக்கி..ராக்கீஈஈஈஈ” என்ற பெண்ணின் அழைப்பை ஏற்று.. குரல் வந்த திசையில் நடக்க தொடங்கினான். அந்த பயணம் அடர்ந்த சோளக்காடு வரை தொடர்ந்தது… ஜல்…ஜல்…ஜல்… என்னும் கொலுசு சத்தம்.. அவனை வழிநடத்தி சென்றது. இதன் நடுவே ஆந்தையின் அலறலும், நாயின் ஊளையிடும் சத்தமும் ஒரு அமானுஷ்ய உணர்வை தந்தன. அவை இவனின் நடை பயணத்திற்கு தடையாக இருக்கவில்லை.
கொலுசு சத்தம் ஒரு இடத்தில் நிற்க, அப்போது தான் மிக நீண்ட தூரம் தான் வந்து விட்டதை உணர்ந்தான். கொலுசு சத்தம் முடிந்து, இப்போது அவன் காதருகே..மிகவும் அருகில்…ஹூம்…ம்ஹூம்….ஹூம்ம்…ம்ஹூம்ம்ம்… என ரெட்டை குரலில் மூச்சு விடும் சத்தம் கேட்டு மயிர்கூச்செரிய அவன் முதுகெலும்புக்குள் மின்சாரம் பாய்ந்தது போல ஆகின.
“ஹா…ஹா……ஹா…..ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்….ஹா…..” இப்போது சிரிப்பினூடே பல்லை நறநறக்கும் சத்தத்துடன் தான் வீட்டில் பார்த்த அந்த பெண் கையில் அந்த குழந்தையோடு அந்தரத்தில் மிதப்பதை கண்டான்…
”டேய்ய்ய்ய்ய்ய்….ராக்கி…. என்னை தெரியுதாடா? கோவையூரையும், அங்கே எஸ்.கே.டீ லேடீஸ் ஹாஸ்டலையும் நீ அவ்ளோ சீக்கிரம் மறந்திருக்க மாட்டே.. ஞாபகம் இல்லைனா அப்படியே ஒரு 5 வருஷத்துக்கு முன்னாடி போய் பாரு.. செத்து செத்து பிழைச்சுட்டு இருக்கேல. ஞாபக சக்தி வீக்கா தான் இருக்கும். நான் தான் நீ காதலிச்சு ஏமாத்தின காவியாடா… இப்ப ஞாபகம் வந்திருக்கனுமே. ஆண்கள் சவகாசமே வேணாம்னு ஒதுங்கி,. ஒதுங்கி போன என்கிட்ட பரிதாபத்தை சம்பாதிச்சு, 3 வருஷமா ஓடி ஓடி காதலிச்சு, கல்யாணம் பண்ணிப்பேன்னு வாக்குறுதி தந்து என்னை ஏமாத்தி, என் வயித்துல உன் குழந்தையையும் தந்து, கல்யாணத்துக்கு வற்புறுத்தின காரணத்துக்காக என்கிட்ட பொய் சொல்லி ஊர் சுத்த கூட்டிட்டு போய் அங்கே வச்சு, 5 மாச கர்ப்பிணிங்கற கருணை கூட இல்லாம மலை உச்சிலருந்து நான் கெஞ்ச, கெஞ்ச பிடிச்சு தள்ளினியே. அதே காவியா தாண்டா நான். என் ஆன்மாவும், என் குழந்தையோட ஆன்மாவும் உன்னை சும்மா விடாது. அவ்ளோ சீக்கிரம் உன்னை சாக விடமாட்டோம். உன் மேல இருந்த பழியிலருந்து தப்பிக்க நான் யாரோடவோ ஓடிப்போய்ட்டேன்னு வாய்க்கூசாம லெட்டர் எழுதி என் அப்பா, அம்மாவுக்கு அனுப்பி வச்சியே. இன்னைக்கு வரைக்கும் உண்மை தெரியாம, அந்த அவமானத்துல நடைபிணமாவே ஆய்ட்டாங்க டா.. அந்த நிலைமை உன் அப்பா – அம்மாவுக்கும் வரனும்.. அவங்க தினமும் கண்ணீர் வடிக்கனும்.. துடிக்கனும்.. அதுக்கு தாண்டா உன்னை உயிரோட வச்சிருக்கேன்.” என்று சொல்லி வெற்றி பெருமிதத்தோடு விகாரமாக சிரிக்க சில நிமிடங்கள் பூமியே ஆடி அடங்கியது.
அவள் சிரித்த சிரிப்பில் பக்கத்தில் இருந்த மரத்தின் ஒரு பெரிய மரக்கிளை அவன் தலையில் விழ.. அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா… என ரத்தம் வழிய சரிந்தான். சிறிது நேரத்திற்குள் பொழுது புலர.. அவனை பார்த்த சிலர் வீட்டிற்கு தகவல் தந்து அவனை ஆஸ்பிட்டலில் சேர்த்து 6 மாதங்கள் கடந்து விட்ட நிலையில்.
வீல் சேரில் தலை மொட்டை அடிக்கப்பட்டு… ஒரு பணிப்பெண் உதவியோடு வெளியே உலா வந்தான் எவ்வித உணர்ச்சிகளும் இல்லாமல்.. அவர்களுடன் சேர்ந்து .. யார் கண்ணுக்கும் படாமல் அவனை இரண்டு உருவங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன…
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
என்ன கல்ப்ஸ் எங்கள பயமுறுத்த வேண்டாம் சொல்லிட்டு அதுக்குள்ள முடிச்சுட்டீங்களே. 8 -ம் நம்பர் வீடு (பேய் படம்) கதையோட நீங்க எழுதிய இந்த கதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.
கல்பனா
அப்பாடி நல்லவேளை சீக்கிரமே பார்ட் 2 போட்டுட்டிங்க, இல்லைன்னா காங்கோவுலயே வந்து கதைய கேட்டுருப்பேன். எனக்கு என்னமோ நீங்க சீக்கிறம் கதைய முடிச்சது மாதிரி ஒரு பீலிங்.
//ஹி வில் பி ஆல்ரைட்” என்றபடி கோட் பாக்கெட்டில் கையை விட்டபடி அந்த இடத்தை விட்டு அகன்றார்.//
ஒவ்வோறு சின்ன விசயத்தயும் நல்லா நுனுக்கமா அழகா எழுதி இருக்கீங்க, பார்ட் 1 மாதிரியே பார்ட் 2வும் நல்லா இன்ட்ரஷ்ட்டிங்காவும் த்ரில்லிங்காகவும் எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள். நீங்க இன்னும் நிரைய திகில் கதைகள் எழுதுவிங்கன்னு ஆவளோடு காத்துக் கொண்டிருக்கும் தோழி.
கதையை வெளியிட்ட அட்மின் அண்ணா & கோ..விற்கு மனம் நிறைந்த நன்றிகள் !!!
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
வினோ,முதல் ஆளாக வந்து விமர்சித்ததற்கு தேங்க்ஸ் மா.
//என்ன கல்ப்ஸ் எங்கள பயமுறுத்த வேண்டாம் சொல்லிட்டு அதுக்குள்ள முடிச்சுட்டீங்களே//நீ பயப்படும்னா கதையே தேவையே இல்லயே. எப்ப திகில் வேணும்னு சொன்னீங்கன்னா, நானே வந்து உன் வீட்டு கதவை தட்டுறேன் ;)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
சங்கீதா,
//எனக்கு என்னமோ நீங்க சீக்கிறம் கதைய முடிச்சது மாதிரி ஒரு பீலிங்//நான் முன்னால் சொன்னது போல இந்த திகில் கதை ஒரு வெள்ளோட்டம் தான்.திகில் கதைன்னு சொல்லிட்டு காமெடி கதையாய்ட கூடாதேன்னு பயம். உங்க எல்லாரோட ரியாக்ஷன்,ரிப்ளை எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு இந்த சாம்பிள் கதை. பின் வரும் நாட்களில் நீண்ட திகில் கதையை தர பார்க்கிறேன். இன்னும் ஒரு வாரம் கழித்தே 2ம் பாகத்தை போட்டிருக்கலாம். நீங்க காங்கோவுக்கே வந்திருப்பீங்கல ;)
உங்கள் வரவிற்கும்,பதிவிற்கும் மிக்க நன்றி தோழியே :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
பாட்னர் நீங்க பாகம் -1 பாகம் -2 க்கு நடுவில் வேறு கதை வந்தாலும் காவியா அடுத்த பாகம் என்ன வரும் என்ற நினைப்பு தான் வந்து கொண்டே இருந்தது பாகம் -2 படிக்க ஆரம்பிக்கும் போது இன்னும் இரண்டு பாகம் வரும் என்று நினைத்து தான் படித்தேன் ஆனால் அது முடிந்து விட்டது
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
கல்ப்ஸ் அதுக்குள்ள முடிஞ்சிடுச்சேன்னு வருத்தமா இருக்கு ஆனாலும் கதை நல்ல விறுவிறுப்பா இருந்தது வாழ்த்துக்கள்.
ராக்கி காதலித்து கைவிட்டதால தற்கொலை செய்து கொண்ட பெண்தான் காவியாவா இருப்பான்னு நினைச்சேன் ஆனால் கொலை பன்னியிருப்பான்னு நான் யோசிக்கல :(
வாழ்த்துக்கள் கல்ப்ஸ் . மேலும் மேலும் திகில் கதையை எங்களுக்கு தரவேண்டும்.......
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
தனா, திகில் கதையே படிச்சுட்டு இருப்பீங்களா? நிஜ வாழ்க்கைல எத்தனை திகில் கேரக்டர்ங்களை பார்க்கிறோம். அவங்களை படிப்போம் கொஞ்ச நாளைக்கு. பேய்க்கு லீவு தந்து அனுப்பிட்டேன். சரியா ஒருமாசம் லீவு. அதுவரைக்கும் பிராக்டிக்கல் ஸ்டோரீஸ் வரும். அதுல கொஞ்சம் மிகையாவும் இருக்கும் கண்டுக்காதீங்க. இதையெல்லாம் கதைல தானே சொல்ல முடியும்.
உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி பார்ட்னர் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
Hi kalpana unga kathai super.nega novel elutha tri panuga.eppadi eppadiyalam yoshichu eluthuriga.room potu yosipigola
சுவா, இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா? இன்னும் எத்தனை திகில் வரப்போகுது பாருங்க. ஆனா அதுவரை கொஞ்சம் வெயிட்டீஸ்.
//ராக்கி காதலித்து கைவிட்டதால தற்கொலை செய்து கொண்ட பெண்தான் காவியாவா இருப்பான்னு நினைச்சேன் ஆனால் கொலை பன்னியிருப்பான்னு நான் யோசிக்கல :(// பாருங்க ஒரே மாதிரி யோசிச்சிருந்தா உங்களுக்கே கதை உப்பு சப்பில்லாம் போயிருக்கும். வித்தியாசமா யோசிச்சுட்டோம்ல நாங்க ;)
உங்கள் வருகைக்கும்,பதிவிற்கும் தேங்க்ஸ் பா சுவா :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
ரேவதி, உங்களோட பதிவை தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன். கரெக்டா நீங்களும் போட்டுட்டீங்க.
//nega novel elutha tri panuga.eppadi eppadiyalam yoshichu eluthuriga.room potu yosipigola// ஏங்க, உங்களுக்கு இந்த விபரீத ஆசை.. நானே இப்பதான் தட்டு தடுமாறி ஒருமாதிரி கதை எழுத முயற்சி பண்றேன். அதுக்குள்ள பெரிய கடல்ல புடிச்சி தள்ள பார்க்கறீங்களே, இது தகுமா? நியாயமா? அடுக்குமா? நடக்குமா? ;) 1000த்துல ஒரு வார்த்தை சரியா சொன்னீங்க. நான் ரூமுக்குள்ள இருந்து தாங்க யோசிச்சேன். நைட் 12 மணிக்கு பேய்ங்களை துணைக்கு வச்சுட்டு , அதனால தான் இப்படியெல்லாம் எழுதவே முடிஞ்சது :D
உங்கள் தொடர்ச்சியான ஊக்குவிப்புக்கும், விமர்சனத்திற்கும் என் அன்பான நன்றிகள் ரேவதி :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
Ungalku payagarmana friendpa.pailam thuniku vachikiriga.
Ungalku payagarmana friendpa.pailam thuniku vachikiriga.
Ungalku payagarmana friendpa.pailam thuniku vachikiriga.
கல்ப்ஸ் அப்பாடா ஒரு வழியா பேய் பயம் விட்டுச்சு.என் ஹஸ் கூட என்ன அழகா கதைய கொண்டுட்டு போறாங்கனு சொன்னாங்க. படிக்க இன்ட்ரஸ்டா இருந்தது. ஓரளவு நான் கெஸ் பண்ணேன். இப்படி இருக்கும்னு .ஆனா கதையை கொன்டு சென்ற விதம் அருமை. இப்படியா பயமுறுத்துறது இந்த சின்ன பிள்ளைய. வாழ்த்துக்கள் கல்ப்ஸ். மேலும் பல கதைகள் தொடர்ந்து கொடுக்க வாழ்த்துக்கள்.
கலக்கல் கல்ப்ஸ்............ சீக்கிரம் முடிச்சுட்டீங்களே பா. பரவாயில்லை. எங்க பாப்பாவை துணைக்கு வச்சுகிட்டு கதவை திறந்துவச்சுகிட்டு தைரியமா படிச்சிட்டேன். கண்டிப்பா உங்க பதில்களைப் பார்த்தாஆஆஆஆ
///உங்க எல்லாரோட ரியாக்ஷன்,ரிப்ளை எப்படி இருக்குன்னு பார்க்கலாம்னு இந்த சாம்பிள் கதை. பின் வரும் நாட்களில் நீண்ட திகில் கதையை தர பார்க்கிறேன்.
இன்னும் எத்தனை திகில் வரப்போகுது பாருங்க. ஆனா அதுவரை கொஞ்சம் வெயிட்டீஸ்.////
தெணர தெணர திகிலடித்து திகில் ஸீசன் 2 ஆரம்பிச்சுட்டீங்களே............... பரவாயில்லை. நாங்களும் ரொம்ப ஆவலோட இருக்கோம்.
வாழ்த்துக்கள்.....வாழ்த்துக்கள்............ கலக்கல் கல்ப்ஸ்.........
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
ரேவதி, நானே பயங்கரமான ஆள் தானே. என் ப்ரெண்டுசும் அப்படிதானே இருப்பாங்க. நீங்க என் ப்ரெண்ட் ஆய்ட்டீங்கல? ;))
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
Appa naan payagramana listla irukana.naan en photo anupava illaya.
ஏய்...கல்பனா...இந்த மாதிரி ஒரு சிம்பிளான கதையைச் சொல்லி என்னை ஏமாத்திட்டியே? உன்னை சும்மா விட மாட்டேன்...காங்கோல எனக்கு நிறைய்ய பேய் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க...நாளையிலிருந்து அவங்கள்ளாம் உன் வீட்டில உன் கூடத்தான் தூங்கப் போறாங்க...நீயும் அவங்ககிட்ட கேட்டு புதுசு புதுசா எங்களைப் பற்றி கதை எழுது...
இப்படிக்கு
தலையில்லாத முண்டம்!
காலில்லாத மோகினி!!
ரத்தக் காட்டேரி!!!!
கொள்ளிவாய்ப் பிசாசு!!!!
முனி 1- 10!!!!!
இது எப்பூடீ???? அடுத்த பேய்க் கதைக்கு நிறய்ய கேரக்டர் கொடுத்திருக்கேன் பார்!!!
நசீம், ஒரே வழில கதையை முடிச்சுட்டேன். உங்கள் பாராட்டிற்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி. உங்கள் கணவருக்கும் என் நன்றியை மறக்காம சொல்லிடுங்க.
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
ப்ரியா, //எங்க பாப்பாவை துணைக்கு வச்சுகிட்டு கதவை திறந்துவச்சுகிட்டு தைரியமா படிச்சிட்டேன்.//உங்க குட்டி பாப்பாவை துணைக்கு வச்சுட்டு படிக்கிற அளவுக்கு சின்னபிள்ளைதனமா எழுதிட்டேன்னு சொல்ல வர்றீங்க..அப்படிதானே ;)
//தெணர தெணர திகிலடித்து திகில் ஸீசன் 2 ஆரம்பிச்சுட்டீங்களே............... பரவாயில்லை. நாங்களும் ரொம்ப ஆவலோட இருக்கோம்.//ப்ரியா, பேய்களுக்கு லீவு விட்டு அனுப்பிட்டேன். கொஞ்சம் கேப் விட்டு பார்ப்போம். :)
உங்கள் வருகைக்கும்,பதிவிற்கும் மிக்க நன்றி பா :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
ராதாம்மா,
//இந்த மாதிரி ஒரு சிம்பிளான கதையைச் சொல்லி என்னை ஏமாத்திட்டியே?// ஏய் பேயே, ராதாம்மா என்னை விட சூப்பரா பேய் கதை சொல்லுவாங்க. நீ என்கிட்ட வர்றதை விட அவங்ககிட்ட போறது ரொம்பவே பிரயோஜனமா இருக்கும் :)
ராதாம்மா, பேய்க்கு கேரக்டர் தந்ததோட இல்லாம, நீங்களே ஒரு பேய் கதை எழுதனும். அதுவே என் ஆசையும் கூட.
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
இப்போதான் வேலை முடிச்சு வந்தேன் உடனே இத தான் படிச்சேன்...இப்போதான் நிம்மதியா இருக்கு...நல்லாவே முடிச்சுருக்கிங்க....வாழ்த்துகள்....இன்னும் நிறையா பேய் கதை எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள்....
அனிதா, உங்களுக்கு கதை படிச்ச நிம்மதி தந்த சந்தோஷத்தில் நானும் இன்னைக்கு நைட் நிம்மதியா தூங்குவேன். உங்கள் வருகைக்கும்,பதிவிற்கும் நன்றிகள் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
கல்ப்ஸ் நானும் ஸ்வர் மாதிரி தான் யோசிச்சேன் ராக்கி காவியா ஏமாத்தி இருப்பான் அதுனால் அவ இறந்திருப்பான்னு ஆனா இப்படி இருக்கும்னு யோசிக்கல, ஒவ்வொரு வார்த்தையிலும் திகிலா தான் இருந்துச்சு அதுவும் அந்த நைட் அவன் கயத்து கட்டிலில் படுத்து இருப்பான்ல அப்போ என்ன நடக்க போது அடுத்ததுன்னு படிக்க படிக்க செம இண்ட்ரஸ்டிங்கா இருந்துச்சுப்பா. என்னை பொருத்தவரை நீங்க முதல் கதையை சூப்பர் டூப்பர் ஹிட் பண்ணிட்டீங்கன்னுதான் சொல்வேன். கடைசி வரியை படிச்சா கதை முடிந்த மாதிரி தெரியலையே அடுத்த (கா......வியா? part 2 ) எழுதுற மாதிரி ஏதாவது ஐடியா இருக்கா கல்ப்ஸ்.
u ve done extremely well........but shouldn't ve ended too shortly...while reading last para we thought it will continue for next chapter.Really disappointed.....
but nice narration,till the end you continued with full suspense.congrats.....
யாழி,
//கடைசி வரியை படிச்சா கதை முடிந்த மாதிரி தெரியலையே அடுத்த (கா......வியா? part 2 ) எழுதுற மாதிரி ஏதாவது ஐடியா இருக்கா கல்ப்ஸ்.// ஏற்கனவே ராக்கி இறந்ததுக்கு சமம். முதல் பாகத்துல பயத்துலயே செத்து செத்து பிழைச்சான். 2 பாகத்துல மரக்கிளை தலைல விழுந்து முழு பைத்தியமாவே ஆய்டான். அவன் பிணம் இல்லன்னு சொல்றதுக்கு, அவன் உடம்புடல ஒட்டிட்டு இருக்க கொஞ்ச நஞ்ச உயிர்தான் சாட்சி. இதுல அவனை இன்னும் பயமுறுத்தி என்ன ஆக போகுது? ஆள் பயப்படனும்னா கொஞ்சமாச்சும் உடம்புல தெம்பு வேணும்ல. இவன் யாருன்னே இவனுக்கு தெரியாம இன்னொருத்தர் உதவில காலத்தை தள்ள வேண்டிய கட்டாயத்துல இருக்கான். இவன் பழையபடி குணமாகி வர்றானா? மறுபடி டார்ச்சர் பண்ணுவோமான்னு தான் அந்த ரெண்டு ஆவிங்க இவனை சுத்தி வர்ற மாதிரி வச்சேன். இவன் நிலையை பார்த்தா, இவனுக்கு ஸ்ட்ரெய்ட்டா கைலாசம் தான். எப்ப இவன் குணமாகி, மறுபடி பயந்து...அதுக்குள்ள பேய்க்கே வயசாகி போய், குட்டி பேய்க்கும் வயசாய்டும் ;) இன்னொரு திகில் கதைல பார்ப்போம் யாழி. அதை கொஞ்சம் பெருசா தர்ற பார்க்கறேன். ஆனா எனக்கு டைம் வேணும். உங்களை இன்னும் அலற வைக்கனுமே. இது ஒண்ணுமே இல்ல.
யாழி, உன் பாராட்டுக்கும்,வாழ்த்துகளுக்கும் தேங்க்ஸ் மா.
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
//but shouldn't ve ended too shortly...//தோழி இலக்கியா, இது ஏற்கனவே சொன்ன பதில் தான். இந்த திகில் கதை என் முதல் முயற்சி என்பதால் சிறுகதை போல தான் முடிக்க நினைத்தேன். அது முடியாமல் போகவே இரண்டு பாகத்திற்கு கொண்டு வரும்படி ஆகி விட்டது. நீங்கள் அனைவரும் இத்தனை ஆதரவு தருவீர்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக உள்ளது. அடுத்த திகில் கதையை அதிக பாகங்கள் இருக்கும்படி பார்த்து தருகிறேன்.
//while reading last para we thought it will continue for next chapter.Really disappointed//யாழிக்கு சொன்ன பதிலை படித்து பாருங்கள்.
உங்கள் வருகைக்கும்,மேலான பதிவிற்கும் மிக்க நன்றி தோழியே. உங்கள் பெயர் அழகாக உள்ளது.
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
கல்பனா, உங்க எழுத்துநடை மிக மிக அருமை, ஒரு படம் பார்த்த ஃபீலிங்ஸ்...., வாழ்த்துக்கள்.
காபிலையும் குக்கர் லையும் வர ஆவி கூட காணாபோயிடும் .. ஆனா இந்த காவியாவோட ஆவி போவேனாங்குதே...
வொய் திஸ் கொலைவெறி ராக்கி செல்லம்??
வொய் திஸ் பழிவெறிடி காவ்யா பொண்ணே???
அப்படின்னு பாட்டு பாடி சூடான இந்த கதையை படிச்சு கூல் பண்ணிக்கணும் கல்பு..
ஆனா ஒண்ணு நன்னடத்தை நெறிகளை ஒழுங்கா படிக்காத பசங்க , இப்படி வாலாட்டுனா பெண் பாவம் பொல்லாது..ன்னு ஒரு பழமொழி யை வெச்சு இந்த காலத்துக்கு ஏத்த கதையை கொடுத்த எங்க கல்பு
நீ வாழ்க..
இந்த மாதிரி மேலும் எழுதி திகிலடி
ப்யுச்சார்ல சீரியல் எடுக்கலாம் நீ
ஏன்னா சீன் ஸ்க்ரிப்ட் மாதிரி இருக்கு உன் வர்ணனைகளும், இடத்தை பற்றிய தகவல்களும்!!
சரி உனக்கு ஒரு ப்யூச்சர் அசைன்மென்ட்
ராயல்டிய இங்க தள்ளிடு என்ன..
உத்து (உத்து பார்கனும்ல) ப்ரொடக்ஷன் ல சைன் பண்றியா
நீ இல்லாவிட்டாலும் உன்னை பற்றிய நல்ல நினைவுகளை விட்டுச் செல்.