பப்பாளி அல்வா

வழங்கியவர் : Vanitha Vilvaar...

தேதி : வியாழன், 02/02/2012 - 14:53

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

4.5
6 votes
Your rating: None
 

 

  • பப்பாளி - ஒன்று (பெரியது)
  • சர்க்கரை - அரை கப் (தேவைக்கு)
  • நெய் - 2 மேசைக்கரண்டி
  • அரிசி மாவு - 2 தேக்கரண்டி
  • ஏலக்காய் - 2
  • முந்திரி - தேவைக்கு

 

 

பப்பாளியை மிக்சியில் விழுதாக அரைக்கவும். ஏலக்காய் பொடி செய்து வைக்கவும்.

முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும். அதிலேயே அரிசி மாவையும் லேசாக வறுத்து சிறிது நீர் கலந்து வைக்கவும்.

பப்பாளி விழுதை அடுப்பில் வைத்து கிளறவும். சற்று பச்சை வாசம் குறையும் போது சர்க்கரை, கரைத்த மாவு கலவை சேர்த்து கலக்கவும்.

மீண்டும் நீர்த்து கெட்டியாக துவங்கும். அப்போது ஏலக்காய், நெய் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து எடுக்கவும். சுவையான பப்பாளி அல்வா தயார்.

 

அரிசி மாவு சேர்க்காமலும் செய்யலாம். ஆனால் கெட்டி பதம் வராது. சர்க்கரை பழத்தின் இனிப்பு தன்மைக்கு ஏற்ப சேர்க்கவும். இதில் அரை கப் கூட சேர்க்கவில்லை, அத்தனை இனிப்பானது மாலத்தீவு பப்பாளி பழம். விரும்பினால் பாலும் சேர்க்கலாம். காய வைத்து ஆற வைத்த அரை கப் பால் சர்க்கரை சேர்த்து சற்று கெட்டியாக ஆரம்பிக்கும் போது ஊற்றி மீண்டும் 10 நிமிடம் வைத்து கிளற வேண்டும்.







வனீ...
பாஸ்போர்ட் இல்லைனா கூட பரவாயில்லை திருட்டுத் தனமா கடல் மார்க்கமாகவாவது மாலத்தீவு வந்திடலாமானு யோசிக்கிறேன்.. ;) முடியல போங்க... :)ஆமா பப்பாளிக்கு எப்படி இந்த கலர் வந்தது!!!

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அது இந்த ஊர் பப்பாளி ஸ்பெஷல்... இனிப்போ இனிப்பு... கலரும் அட்டகாசமா இருக்கும். இது அதோட உண்மையான கலர் தான்... நான் ஒன்னும் சேர்க்கல. முதல் படத்தில் அரைத்த விழுது பார்த்தாலே தெரியுமே. மிக்க நன்றி... பதிவுக்கும், இங்க வரேன்னு சொன்னதுக்கும் :) எப்போ வரீங்க?? சீக்கிரம் டேட் சொலுங்க. தனியா போரடிக்குது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாம்பே, ஜவ்வரிசி, பப்பாளி அல்வான்னு அசத்துறீங்களே. கலரே அருமையா இருக்கு. என் அட்ரஸ் சொல்றேன் பப்பாளியை மட்டும் அனுப்பி வைச்சுடுங்க நான் செய்துப்பார்த்துடுறேன்..வாழ்த்துக்கள்

வனி இதப்பார்த்தா அப்படியே எங்க ஊறு பீம புஷ்ட்டி, அல்வா மாதிரியே இருக்கு. பப்பாளி இங்க கூட இதே கலர்லதான் இருக்கும். நான் கண்டிப்பா செஞ்சுட்டு சொல்ரேன் எப்படி இருந்தது என்று வாழ்த்துக்கள்.

அன்பு வனிதா,

அல்வா பாக்கறதுக்கே அட்ராக்டிவ் ஆக இருக்கு. டேஸ்டும் அப்படித்தானே.

அசத்தல் அல்வா! பாராட்டுக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

பப்பாளி அல்வா ரொம்ப நல்லா கலரா இருக்கு வனி உபயோகிக்கற பொருளும் ரொம்ப கம்மி நல்ல அல்வா நன்றி வனி உங்க குறிப்பு பான் போகியா இன்னைக்கும் பண்ணேன் அத சாப்பிட்டு கிட்டே அல்வாவை விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன் அடுத்த முறை பப்பாளி அல்வா தான் எங்க வீட்டுலே ஸ்வீட்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

//பாம்பே, ஜவ்வரிசி, பப்பாளி// - ஜவ்வரிசி, பப்பாளி சேர்த்து அல்வா பண்ணலாம்... பாம்பே சேர்க்க முடியாதே... ;) ஹிஹிஹீ.

அட்ரஸ் ப்ளீஸ்.... 1 அட்டை பெட்டி நிறைய பப்பாளி அனுப்பிடுறேன் :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. “பீம புஷ்ட்டி” பேரு நல்லா இருக்கு... ஆனா அது என்ன??? செய்து காட்டலாமில்ல எங்களுக்கு... நீங்க மட்டும் செய்து சாப்பிடுறதா??

அவசியம் செய்து பார்த்து எப்படி இருந்துதுன்னு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா... ஆபீஸ் நேரத்தில் இங்க என்ன பண்றீங்க ;) ஓபியா??? பேட் கெர்ல். இருந்தாலும் சீதாலஷ்மி பதிவு பார்த்தா அது ஒரு தனி சந்தோஷம் தான்... :) நன்றி நன்றி நன்றி மை ஃப்ரெண்ட்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. சுலபமான அல்வா... ஆனா செய்ய கொஞ்சம் நேரம் எடுக்கும், முதல்ல அது வாசம் போகவே ரொம்ப நேரம் இருக்கனும். மற்றபடி செய்வது மிக சுலபம். அவசியம் செய்து பாருங்க. பான் போகிப செய்து சாப்பிடுறீங்களா??? எப்படி இருக்குன்னு சொல்லாம சாப்பிடுவது சரியா??? யூ டூ பேட் கெர்ல்... சொல்லிட்டு சாப்பிடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Varathula 5 recipes kudukanum mudivoda irukinga pola. Eppadinga ippadi ungalala mattum variety varietya seiya mudiyuthu. Unga family members kuduthu vachavanga. Halwa parkavae romba yummy and delicious iruku

//“பீம புஷ்ட்டி” பேரு நல்லா இருக்கு... ஆனா அது என்ன???//
ஹி, ஹி, ஹி, வனி, அது எங்க ஊரிள் உள்ள அல்வா கடையோட போறு.

//Unga family members kuduthu vachavanga// - ஆமாம் ஆமாம்... அடிக்கடி என்கிட்ட அல்வா வாங்குறாங்கல்ல... ஹிஹிஹீ. மிக்க நன்றி கௌதமி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த அலவா கடைக்குலாம் பேரு யாரு கண்டு பிடிக்கறாங்களோ... இருட்டு கட, பீம் புஷ்ட்டின்னு... நல்லா தான் இருக்கு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அடடா கலர் அடிக்குதே சூப்பர் வனி,பப்பாளியில அல்வா இப்பதான் கேள்வி படுறேன் பார்க்கவே அருமையா இருக்கு வாழ்த்துக்கள்.

அங்க (மாலே) வந்து உங்களை சிரமபடுத்த விரும்பல அதனால வினோ சொன்ன மாதிரி எனக்கும் பப்பாளியை பார்சல் பன்னிடுங்க நானே செய்துக்கறேன் :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பள பளக்கிற பப்பாளி
தித்திக்கிற அல்வா நீ
ஜொலி ஜொலிக்கிற முந்திரி
எனக்கே எனக்கா இனி!! :)

வனி, சூப்பரான அல்வா! கலர் சும்மா அள்ளுது போங்க!! எனக்கு பப்பாளி எல்லாம் வேண்டாம். ஸ்ட்ரெயிட்டா அல்வாவே அனுப்பிடுங்க! :) அது என்னமோ தெரியலை வனி, இன்னைக்கு நீங்க உங்க செர்விங் டிஷ்ஷை மாத்தினாக்கூட முகப்பு படம் பார்த்ததுமே நீங்கதான்னு கண்டுபிடிச்சிட்டேன். :) வாழ்த்துக்கள் வனி!

// அப்புறம் ரோல்ஸ் குறிப்பில் உங்க கமென்ட்ஸ் பர்த்தேன்... :) மிக்க நன்றி வனி! அங்க‌ ப‌தில் போட்டு இருக்கேன். அப்புறமா பாருங்க...
என்ன பண்ணட்டும், உங்க படங்களை பார்த்தா பாட்டெல்லாம் தானா வருது... :) :) //

அன்புடன்
சுஸ்ரீ

வனி, பப்பாளி அல்வா கலரே தூக்கி சாப்டுடும் போல இருக்கே. சரியான கலர்.... எளிமையான,இனிமையான,சுவையான,கலரான,அழகான குறிப்பு தந்த உங்களுக்கு என் இனிப்பான வாழ்த்துக்கள்.

இங்கே பப்பாளி ஏகபோகமா விளைஞ்சு கிடக்கும். சாப்பிட ஆள் இருக்காது. ஆனா நம்ம தலைங்கள பார்த்துட்டா போதும். எங்கேருந்து ரேட்டை பிக்ஸ் பண்ணுவாங்கன்னு தெரியாது. அவ்ளோ ரேட்டை போடுவானுங்க. அதனால அந்த பக்கமே போறதில்ல. ஊருக்கு வந்து செய்து பார்த்து பார்சல் அனுப்பி வைக்கறேன் :)

நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)

நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது

வனி அக்கா உங்க ரோல்ஸ் நேத்து தான் பண்ணினேன்., அதுக்கு பதிவு போட வந்தால் அடுத்த டிஷ் ரெடியா இருக்கு., பப்பாளி இருக்கு., ஈவ்னிங் செய்துடுறென்., கலர் அள்ளுது க்கா., கலக்குங்க

மிக்க நன்றி. பப்பாளி மாலத்தீவில் இருந்து நிறைய பேருக்கு அனுப்பனும் போலிருக்கே ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. வழக்கம் போல பாட்டு சூப்பரோ சூப்பர். உங்க பதிவை அங்கையும் பதிச்சேன். ஆபீஸ்னா வேலை இருக்க தான் செய்யும், ஆனாலும் நம்ம வராம இருக்கலாமா??? ;) ஹிஹிஹீ.

முகப்பு படம் பார்த்ததும் கண்டு பிடிச்சது “இந்த மாதிரி அல்வாலாம் வனி தான் தருவாங்க”னு நல்ல அபிப்ராயத்துலையா??? ;) ஹஹஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹஹஹா... உங்களை பார்த்தா பெரிய ஆளா தெரிஞ்சிருக்கும், அதான் ஏகமா விலை சொல்லிருப்பாங்க ;) மிக்க நன்றி கல்பனா... மெதுவா செஞ்சுட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரோல்ஸ் செய்துட்டீங்களா??? குட் குட்... எப்படி இருந்ததுன்னு சொல்லவே இல்லையே... :(

சரி இன்னைக்கு மாலை இதையும் செய்துட்டு வந்து இரண்டும் எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லிப்போடனும். சரியா? மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பப்பாளி அல்வா சூப்பர்.. நல்ல கலர்.. நான் மஞ்சள் பப்பாளியில் செய்றேன்.. மாலத்தீவு அல்வா எனக்கும் அனுப்பி வச்சிடுங்க!

"எல்லாம் நன்மைக்கே"

நான் இந்த அல்வாவை பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டேன் பா ;P

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

இது மாலத்தீவு அல்வா இல்லை ;) மாலத்தீவில் செய்த பப்பாளி அல்வா.

எந்த பப்பாளி வேணாலும் வாங்கி செய்யுங்க... ஆனா செய்துட்டு பிடிச்சுதான்னு மட்டும் மறக்காம சொல்லுங்க. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

லாவி கண்ணா... நமக்கும் அல்வாக்கும் பாம் வைக்க பலரும் சதி பண்றாங்க... ஃப்ரீ அட்வைஸ்... வேணாம்... வேணவே வேணாம். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப நல்ல இருக்கு அக்கா ந சொல்ல வந்தத எல்லோருமே சொல்லிடாங்க ந என்னத்த சொல்ல நல்ல்லா இருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் by Elaya.G

என்ன சொல்ல என்ன சொல்லன்னே நிறைய சொல்லிட்டீங்களே.... நன்றி நன்றி நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி,எப்படி இருக்கீங்க?குழந்தைகள் எப்படி இருக்காங்க?தொடர்ந்து அசத்தலான குறிப்புகள் கொடுத்திட்டிருக்கீங்க போல,வாழ்த்துக்கள் வனி.

பப்பாளி அல்வா சூப்பராயிருக்கு வனி.கலர் கொள்ளை அழகாயிருக்கு!!
சுவையும் அள்ளும்,போட்டோஸ் கலக்கல்.வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் வனி.

எல்லாப் பகுதிகளிலும் அசத்தறீங்க வனி,பிரம்மிப்பாயிருக்கு,மனமார்ந்த வாழ்த்துக்கள்.எவ்வளவு குறிப்புகள் கொடுத்திருக்கீங்க??!!!விரைவில் ஐந்நூறு குறிப்புகள் கொடுத்து,மேலும் ஜொலித்திட வாழ்த்துக்கள் வனி.தாமதமாக வந்து வாழ்த்துவதற்கு மன்னிக்கவும் வனி.

புன்னகை பிரச்சனைகளைத் தீர்க்கும்;மௌனம் பிரச்சனைகளைத் தவிர்க்கும்!

அன்புடன்
நித்திலா