kids social movements

hai friends,
this is my first time to type a forum.forgive if i did anymistakes.
i have a cute little boy (my son,2 1/2 age).

paiyan romba clever.but avana focus panni eadhu pannalum avanukku pidikka matendhu,for example,oru photo eadutha kooda ,he used to hide. urine, toilet kooda eanta solla matenguraan.bcoz naan avana andha visayangala regulara panna solradhunaala nu nenaikiren.romba alaga arivaa pesura paiyan,neighbours name ketta kooda solla matenran.naanga ouy of tamilnadu irukkuranaala avanukku schoola language pbm irukku.friendsta avlova mingle aaga matenran.eanakku avana bold nd positive attitude paiyana valarkanumnu aasai.

please help me friends,with ur kind replies.

//romba alaga arivaa pesura paiyan,neighbours name ketta kooda solla matenran.naanga hyderabadla irukkuranaala avanukku schoola language pbm irukku.friendsta avlova mingle aaga matenran.eanakku avana bold nd positive attitude paiyana valarkanumnu aasai.//

எனக்குதான் கண்ணுல பிரச்சனையா என்னன்னு தெரியலை.. பையனுக்கு ரெண்டரை வயசுன்னுதானே சொல்லி இருக்கீங்க?!

அண்ணா... இருந்தாலும்... :)

அனிதா... குழந்தைக்கு வெறும் 21/2 வயது தானே??? என் மகனுக்கும் 2 1/2 வயது தான்... இன்னும் பேச்சு கூட தெளிவா இல்லை. நிலாவை நியாவ், காதுன்னா காவு, மழைக்கு மயய், போட் பார்த்தா அண்ணி காரு, தண்ணிக்கு அண்ணி.... சைனாகாரனாட்டும் பேசுறான். ரசிக்கறேன்... குழந்தைங்கன்னா அப்படி தான் இருப்பாங்க... அதுக்கு பேரு தான் குழந்தை. நீங்க இப்பவே பெரிய மனுஷங்ககிட்ட எதிர் பார்க்குறதெல்லாம் எதிர் பார்த்தா முடியுமா??

நான் இன்னும் 10 பேரை சேர்ந்தாப்பல பார்த்தா என் புருஷன் கையை பிடிச்சுகிட்டு முதுகு பின்னாடி ஒளிஞ்சுடுவேன். ஏதோ எனக்கு போல்டா எல்லாரிடம் பேச வரலன்னு புலம்பினாலும் பரவாயில்லை. :)

இது போன்ற ப்ரெஷரை குழந்தைகள் மேல தினிக்காதீங்க... அது உங்க குழந்தையை அறிவா மாற்றாது, ஸைக்கலாஜிகலா பாதிக்கும். குழந்தைகளை குழந்தைகளா இருக்க விடுங்க. உங்க எதிர் பார்ப்பை போட்டு தினிக்காதீங்க ப்ளீஸ். ஸ்கூல் போக ஆரம்பிச்ச பிள்ளைகள் தானா மாறிடுவாங்க. இப்போதைக்கு குழப்பம் வேண்டாம். அவங்க போக்கில் விடுங்க.

நான் சொல்றது கொஞ்சம் தப்பா தோணலாம் உங்களுக்கு... ஆனா உங்க குழந்தையின் நலன் கறுதி உங்களோட அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பை மாற்றிக்க சொல்றேன். அவனா வளர வளர எல்லாம் செய்வான். சரியா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குழந்தைகள் இந்த வயதில் வெளி ஆட்களை பார்த்தாலே மிரளும். அவர்களை நாம் காட்சி பொருளாக மற்றவர்களுக்கு காட்டவே கூடாது. நமக்கிருக்கும் கேட்ட பழக்கம் யாராவது வீட்டுக்கு வந்தால் உடனே குழந்தையை கூப்பிட்டு பாட்டு பாடு டான்ஸ் ஆடு அப்படி சொல்லுவோம். நமக்கு எப்படி சங்கோஜமாக இருக்குமோ அதே போல் தான் அவர்களுக்கும். இந்த வயதில் குழந்தைகள் எதிர்மறையாக தான் எதையும் செய்வார்கள். சில குழந்தைகள் டீன் ஏஜ் ஆனா பிறகும் கூட பெட்டில் ஈரம் செய்கிறார்கள். அவர்களை என்ன சொல்ல. குழந்தைக்கு எந்த மொழியாக இருந்தாலும் கண்டிப்பாக புரிந்துக் கொள்ள கூடிய திறன் இருக்கு. அதனால் அவர்களுக்கு புரியவில்லைஎன்றேல்லாம் நினைக்கவே வேண்டாம். அவர்களை குழந்தைகளாகவே பாருங்கள். உங்களுக்கு முதல் குழந்தை என்று நினைக்கிறேன். அதான் அதீத எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. தவறில்லை. நீங்கள் வேற குழந்தை மிகவும் அறிவுள்ள குழந்தை என்று சொல்லியுள்ளீர்கள். அதனால் தான் உங்களின் எதிர்ப்பார்ப்பும் ஜாஸ்தியாகவே இருக்கு என்று நான் நினைக்கிறேன். இது தவறாக கூட இருக்கலாம். ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன்.

//என்னய்யா நடக்குது இங்கே.....எதுக்காக எல்லோரும் இப்படி.....வனி இருந்தாலும் நீங்க சந்தடி சாக்குல உங்க வயசை சொல்லியிருக்கவே கூடாது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆனர்.//

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

தூக்கிட்டோம்ல ;) சமத்து பிள்ளை... குட் கெர்ல். இப்படி தான் இருக்கனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனிதா, தவறாக நினைக்க வேண்டாம். அடுத்தவர் வீட்டு பெயரை வேண்டாம். நம் வீட்டில் இருப்பவர்கள் பெயரை முதலில் சொல்ல வையுங்கள். இரண்டரை வயது தானே ஆகிறது. சாதாரணமாக ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகளைவிட பேச நாட்கள் ஆகும். என் குழந்தைகளுக்கு இப்போது மூன்றரை வயது ஆகிறது. தொடர்ச்சியான ஒரு வாக்கியத்தை தெளிவாக பேசியதில்லை. டாக்டர்களை கேட்டால், அவர்கள் இரட்டை குழந்தைகள். அதனால் பேச சிறிது நாளாகும் என்று சொல்கிறார். சரி, எப்போது பேச வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்போதே பேசட்டும் என்று விட்டு விட்டேன். ஏனென்றால், அரைகுறையாக பெரிய மய்..அதுல குய்ய்ய்ய்னு மனோரமா மாதிரி பேசும் இப்போதே அவங்க கேள்விக்கு பதில் சொல்ல முடியல. இன்னும் முழுசா பேசும்போது என்னென்ன கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்குமோ என்ற பயம் தான் :(

எந்த குழந்தையும், சாப்பாடு ஊட்ட வேண்டி இருந்தால், அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டி விடு என்று, ஒரு இடத்தில் அசையாமல் சாப்பிட மாட்டார்கள். ஒரு இடத்தில் நின்று ட்ரெஸ் பண்ணிக் கொள்ள மாட்டார்கள். நம்மை ஒரு ஆட்டம் காட்டி தான் பிறகு வழிக்கு வருவார்கள். அதனால் தான் அவர்களை குழந்தைகள் என்கிறோம். கொஞ்சம் வளர்ந்த பசங்க என்றால் அப்படி பண்ணும்போது சும்மா இருப்போமா? ஒன்று திட்டி விடுவோம். இல்லையென்றால் நாலு மொத்து மொத்தி எடுத்து விடுவோம் ;)

நாம அவங்க கிட்ட என்ன எதிர்பார்க்கறோம்ங்கறதை அவங்களுக்கு தெரியாம செயல்படுத்தனும். அந்த செயலில் நமக்கு உள்ள அதீத அக்கறையை அவர்களிடம் காட்ட கூடாது. உ.ம்.. போட்டோ எடுக்க நினைக்கும்போது அவன் மறுத்தால் அந்த நிமிஷம் விட்டு விடுங்கள். பிறகு தானே முன்வந்து கேமராவோடு போட்டோ எடுக்க சொல்வான். எந்த செயலையும் நாம் வலுக்கட்டாயமாக திணிக்கும் போது அது குழந்தைகளும் ஏற்க முன்வருவதில்லை.

அந்த சமயத்தில் நீங்கள் அடித்து பணிய வைக்க நினைக்கும் போது அவனுக்கு அந்த செயலின் மீது வெறுப்பு வந்து விடும். பிறகு என்றாவது ஒரு நாள் நீங்க போட்டோ எடுக்க அழைத்தாலும், அன்று ஒருநாள் அடித்தது ஞாபகம் வந்து பழி வாங்கிவிடுவார் ;)

ஒரு விஷயத்தை நீங்க தெரிஞ்சிக்கனும் தோழியே. பசங்க தனக்கு தெரிஞ்ச விஷயங்களை மொத்தமாக நம்மிடம் கொட்ட மாட்டார்கள். சந்தர்ப்பம் வரும்போது அந்தந்த தருணங்களில் சொல்வார்கள். நம் கட்டாயத்திற்காக, விருந்தாளிகள் யாராவது வந்திருக்கும்போது அதை கேட்டால் கண்டிப்பாக சொல்ல மாட்டார்கள். அந்த சமயத்தில் அடித்தெல்லாம் சொல்ல வைக்க கூடாது. இதெல்லாம் என் குட்டிகளிடம் நான் கண்ட அனுபவங்கள் :)

ஒர் தாயாக குழந்தையின் வளர்ச்சியில் உள்ள அக்கறை எனக்கு புரிகிறது. அப்படியும் உங்கள் குழந்தை அறிவில் மிளிர வேண்டும் என்று விரும்பினால், அவனுக்கு பிடித்த விளையாட்டுகளில் ஈடுபடுத்தி அது போன்ற ஜாலி நேரங்களில் அவனுக்கு மேற்படி விஷயங்களை சொல்லி தந்து, சொல்ல செய்யுங்கள். எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.முக்கியமான விஷயம், அடுத்த குழந்தையோடு ஒருபோதும் உங்கள் குழந்தையை ஒப்பிட வேண்டாம். உங்கள் குழந்தையிடம் உள்ள திறமையை தெரிந்து கொண்டு அதை வெளிக்கொணர பாருங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

உங்கள் குழந்தைக்கு இப்போதான் 2 1/2 வயசுதான் .ஆகிறது. ஏதோ 20 வயசு ஆகிட்ட மாதிரி நினைக்கிறீங்க. குழந்தைகளின் மழலையையும், விளயாட்டையும், குறும்புகள், விஷமங்களையும் சந்தோஷமாக ரசியுங்கள்.

அடுத்தவரிடம் பெயர் சொல்வதும், யூரின் டாய்லெட்லதான் போகணும்கிறதும்தான் புத்திசாலித்தனம்னு நினைக்காதீங்க. பிறகு அவனுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம்?

குழந்தைகளை அவர்களாகவே இருக்க விடுங்கள்..நீங்கள் சொல்வது போல அவனை இது இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லும்போது, இந்த வயதில் இருந்தே அவனுக்கு உங்களை மதிக்காமல் அவன் இஷ்டப்படி செய்யும் எண்ணம்தான் அதிகமாகும். அதனால்தான் அவன் உங்களைக் கண்டு பயப்படுகிறான். அம்மா என்றால் அன்பு என்பது போக பயம் என்பது அவன் மனதில் பதிய நீங்களே காரணமாகாதீர்கள்.

குழந்தைகளுக்கு அறிவு சார்ந்த கதைகளைச் சொல்லி அவர்களுக்கு நல்ல விஷயங்களைச் செய்ய, பேச சொல்லிக் கொடுங்கள். எதிலும் கண்டிப்பு அளவாக இருக்கட்டும்.

நம்ம குழந்தைதான் பெஸ்டுனு முதலில் உங்க மனசில எண்ணத்தை வளர்த்துக்கோங்க. இந்த வயதில் குழந்தைகளுக்கு மொழி ஒரு பிரச்னையாக இருக்காது. நீங்கள் பயப்பட வேண்டாம். இன்னும் சில நாட்களில் அவனே உங்களுக்கு சொல்லிக் கொடுப்பான்.

குழந்தைகளை எதற்கும் குறை சொல்லாமல் பாராட்டி, அவன் சொல்வதையும், செய்வதையும் கேட்டு சந்தோஷப்பட்டு தேவையான சமயத்தில் அறிவுறையாக இல்லாமல், அழகாக எதையும் எடுத்துச் சொன்னால் எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்!!

முதல் குழந்தைங்களா..அதான் இப்படி பயப்படுறீங்க கவலை படாதீங்க இப்போதைக்கு இந்த சேட்டையை ரசிங்க எப்படி வளர்ராங்கண்ணு ஒரு ஐடியாவே கெடைக்க மாட்டேங்குதுங்க..திடீர்னு பெரிசாகிடறாங்க ப்படியே அந்த மழலை மாறிடுது அப்றம் அவங்க பழைய ஃபோட்டோவும் வீடியோவும் மட்டுமே பாத்து ஏங்கலாம்..
இதெல்லாம் சின்ன மேட்டர் ஸ்கூள் போக தொடங்கினா நீங்க எதிர்பாக்காத மாதிரி மாறிடுவார் பாருங்க.ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு குணம் இன்னும் சொல்ல போனால் இப்படி இருக்கும் குழந்தைகள் இன்னும் புத்திசாலி என்றே சொல்லலாம் அவங்களுக்கு நெருக்கமானவங்க நம்ப அம்மா அப்பாமட்டுமேன்னு க்லியரா தெரியுது அதான் வெக்கம். ஒரு வகைல அது நல்லதுன்னு நெனச்சுக்குங்க..யார் கிட்டயும் போய் பேசி யார்கிட்டயும் போய் விளையாடுற குழந்தைகளை வெளிய இருந்து பாக்கறவங்களுக்கு ரசிக்கலாம் ஆனா அம்மா அப்பா படும் பாடு இருக்கே..எதுக்கும் ஒரு லிமிட் தெரியாது யார் கூப்பிட்டாலும் அப்படியே போயிடுவாங்க யார் தூக்கினாலும் பேசாம ஏறி உக்காந்துக்குவாங்க நானும் போறேன் கூடன்னு ஆட்டம் போடுவான்க...இது ரொம்ப ரொம்ப கஷ்டம்
நிறைய பிள்ளைகளோடு விளையாட விடுங்க..என் பைய்யன் நேத்து அவன் கேக்குறது புரியாம படுத்துன பாடு எனக்கு தான் தெரியும்..பாப்பீஸ் தா பாப்பீஸ் தான்னு ஒரே ரகளை உருளல் அழுகை பிறகு கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சேன் கார்ன்ஃப்லேக்ஸை கேக்குறான்.எல்லா குழந்தைகளும் இப்படி தான்

romba thanks unga eallaroda advicekum.unga advice eallamey acceptable.eanakku ipo oru rough idea kedachurukku.kandipppa naan follow panren. naan pala visayathapottu thevai illama kolappikiten. I LOVE MY SON,HE TOO LOVES ME a LOT.

thanks friends

unga kannula pbm illai.this is a little mothers little confusion.

இது சூப்பர்... :) உங்க லவ் அவனை பெரிய லெவல்ல கொண்டு வரும்... அவனுக்கு நல்ல கான்ஃபிடன்ஸ் கொடுக்கும், பயம் போகும்... அது போதும். எல்லா தானா நடக்கும் அனிதா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்