
வைரங்களை அள்ளி தெறித்தது போல அந்த ஹால் ஜொலித்துக் கொண்டிருந்தது. பல நிறங்களை கலக்காமல் ஒரே நிறத்தில் விளக்குகள் ஒளிர்ந்தது அந்த ஹாலுக்கே தனி அழகை கூட்டியது. ஆங்காங்கே சுவர்களில் கலர் பேப்பர்களின் அலங்காரங்களுக்கு பதிலாக பட்டை போன்ற புடவையில் கொசுவம் வைத்து தொங்க வைத்தது கொள்ளை அழகு. அந்த ஹாலை ஒட்டிய புல்வெளியில் சிறுசிறு இடைவெளிவிட்டு மேசை சேர்கள் போடப்பட்டிருந்தன. வழக்கமான சினிமா பாடல்களை தவிர்த்து மெல்லிய மேற்கத்திய இசை அந்த மாலைப் பொழுதை ரம்யமாக்கின. ஐம்பதை கடந்த பெண்மணிகள் தங்கள் வயதை மறைக்க பிரம்மபிரயத்தன மேக்கப்பில் இருந்தார்கள். வெளியே பார்க்கும் போது பேசிக் கொள்ளாவிட்டாலும், இங்கே வீடியோவிற்கு போஸ் கொடுக்கும் பொருட்டு, வேண்டாதவர்களிடம் கூட அநாவசிய பேச்சும், அநாவசிய சிரிப்பும் அரங்கேறிக் கொண்டிருந்தது. பஃபே முறையில் 21 வித உணவுகள் ஆவி பறக்க ஸ்டீல் பாத்திரங்களில் மிதமான அடுப்பின் சூட்டின் மேல் இருந்தன. அதற்கு பக்கத்தில் சீருடை அணிந்த பணியாளர்கள் நின்று உணவு குறித்து விளக்கி கொண்டிருந்தார்கள்.
பழங்கால பஞ்சாங்கம் போல இல்லாமல், மணமக்களை ஸ்டேஜ் போட்டு நிற்க வைத்து போகபொருளை போல வைக்காமல் சாதாரணமாகவே வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கைகளில் உட்கார வைத்தது எளிமையான அழகை தந்தது. தேசிகா அன்றைய நாளின் கதாநாயகி. மணம் முடித்த புது பெண். சந்தன நிறத்தில் சிறிதே ரோஜா வண்ணம் கலந்த நிறம். பட்டுப்புடவைகளை தவிர்த்து வேலைப்பாடுகள் செய்யப்பட்ட வெங்காய நிற சேலையும், அதற்கு தோதான நிறத்தில் ப்ளவுசும் அணிந்திருந்தாள். புடவைக்கேற்ப நிறத்தில் வைரத்தில் முத்து வேலைப்பாடு செய்யப்பட்ட குந்தன் ஜுவல்ஸ் அழகோ அழகு. முகத்தில் அநாவசிய மேக்கப்பை தவிர்த்து மிதமாக இருந்த மேக்கப் அவளை மேலும் பாந்தமாக காட்டியது. ரிசப்ஷன் என்றாலே கொண்டைதான் என்ற விதியிலிருந்து விலகி தோள் வரை இருந்த முடியை சுருளாக்கி ப்ரீ ஹேராக விட்டிருந்தாள். இடப்பக்கத்தில் மட்டும் தூக்கி வாரி கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஹேர் க்ளிப்பை மாட்டி விட்டிருந்தாள். மறுபக்க முடியை ஸ்டைலாக விட்டிருந்தது மிகவும் நன்றாக இருந்தது. கதா நாயகன் ஆதித்யா. நடிகர்களுடன் ஒப்பிடமுடியாத தனித்துவ இயற்கை அழகோடு ஆணழகனாக இருந்தான். முதல் பார்வையிலேயே வீழ்த்தி விடும் வசீகர கூர்மையான விழிகள். பிஸ்கெட் கலர் ஷெர்வானியும், கழுத்தில் ரூபி, முத்துக்கள் சேர்ந்த மாலை அவன் அழகுக்கு குறைச்சல் என்றாலும் அந்த உடைக்கு பொருத்தமாக இருந்தன. ஒருவருக்கொருவர் படைக்கப்பட்டது போல, வந்திருந்த அனைவரும் அவர்கள் அழகை எண்ணி வியந்து தான் போனார்கள்.
ஹாலின் நுழைவாயிலில் இருவரது பெற்றோரும் விருந்தினர்களை வரவேற்க நின்றிருந்தார்கள். கொண்ட்டாட்டமும், குதுகலமுமாக அன்றைய விழா இனிதே முடிந்தது. பரிசுப்பொருட்களை வாங்கி வாங்கி இருவர் கைகளும், சிரித்து, சிரித்து இருவர் வாய்களும் சோர்ந்து தான் போயின.
அன்று இரவு முதலிரவு அறை சினிமாவில் அலங்காரம் செய்திருப்பது போன்று அமர்க்களமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனால், சினிமாவில் காட்டப்படுவது போல தோழிகள் படை சூழ தேசிகா வரவில்லை. உடல்முழுக்க நகை போட்டுக் கொண்டு, தலை முழுக்க மல்லிகை பூ, கையில் பால் செம்பு இப்படி எந்த நாடகத்தனமும் இல்லாமல், வீட்டில் சாதாரணமாக எப்படி இருப்பாளோ அப்படியே சென்றாள். ஆதித்யாவும் அறையில் அவ்வாறே இருந்தான். அவள் வந்ததும் ப்ரெண்ட்லியான ஒரு புன்னகையோடு கட்டிலில் தன் பக்கத்தில் அமர இடம் தந்து உட்கார சொன்னான். “தேசிகா, இப்படி உட்காருங்க.. நாம வாழ்க்கைல ஒருத்தருக்கொருத்தர் நல்ல ப்ரெண்ட்சா அறிமுகம் ஆவோம். அதுக்கு பிறகு கணவன் – மனைவியா வாழ்க்கைல அடியெடுத்து வைக்கலாம். உங்களுக்கு என் ப்ரெண்ட் ஆகறதுல எந்த ஆட்சேபணையும் இல்லைல” என்று சிரித்தவாறே, கேட்க
தேசிகாவும் சிரித்துக் கொண்டே, "நான் சொல்ல நினைச்சதையே நீங்களும் சொல்லிட்டீங்க. நம்மளோட வேவ் லெங்த் ஒரே மாதிரி இருக்கறதால தான் எனக்கு உங்களை முதல் பார்வைலயே பிடிச்சு போய் ஓகே பண்ணேன். உங்களை ஆதின்னு பேர் சொல்லி கூப்பிடலாமா?”
“தேசி, என்ன இப்படி கேட்டுட்டீங்க. ப்ரெண்ட்சை அப்படிதானே கூப்பிடுவோம். அதிகமா மரியாதை தந்தா நல்லார்க்காதே” என்று குறும்பு சிரிப்போடு சொல்ல,
அவளும் அவன் சிரிப்பில் இணைந்து “அப்ப நீங்க மட்டும் என்னை இங்க, அங்கன்னு மரியாதை போட்டு பேசுறீங்களே, உங்க ப்ரெண்ட்சை அப்படிதான் கூப்புடுவீங்களா?. இதுக்கு பேர் நட்புக்கு மரியாதையா?” என்று கேலி செய்ய இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். இப்படியே அவர்களின் முதல் நாள் திருமண இரவு இனிமையான புரிதலுக்கு அஸ்திவாரம் போட்டு தொடங்கப்பட்டது.
மறுநாள் காலை சமையலறையில் கலைச்செல்வி காபி தயாரிப்பில் ஈடுபட்டிருக்க, குளித்து முடித்து, அங்கு வந்த தேசிகா இளமஞ்சள் நிற ஷிபான் சாரியில், அன்று பறித்த ரோஜா போல படுபிரெஷ்ஷாக இருந்தாள். “அம்மா, குட் மார்னிங்.. என்ன பண்றீங்க?”
“வாம்மா, தேசிகா அதுக்குள்ள எழுந்திட்டியா? நீ எழறதுக்குள்ளே, உனக்கும், ஆதிக்கும் காபி போட்டுடலாம்னு வந்தேன். இந்த வேலைக்கார லஷ்மி இன்னைக்குன்னு பார்த்து லேட்டா வர்றாளாம். இப்பதான் போன் பண்ணி சொன்னா. சரி, நீ சாமிக்கு பூ போட்டு விளக்கேத்திட்டு வா. அதுக்குள்ள நான் காபி போட்டு வைக்கறேன்”
“அம்மா, அதெல்லாம் முடிச்சுட்டு தான் இங்கே நுழைஞ்சேன். இந்த எக்ஸ்கியூஸ் எல்லாம் என்கிட்ட வேண்டாம். எனக்கும் காபி போட தெரியும். நீங்க சமர்த்து பிள்ளையா போய் அப்பாவுக்கு பேப்பர் படிக்கிறதுல கம்பெனி குடுங்க. நான் டபுள் ஸ்ட்ராங்க் காபியோட வர்றேன்”
“அப்படி இல்லமா தேசிகா, நீ நேத்து தான் கல்யாணம் ஆன புது பொண்ணு. உடனே வேலை வாங்க கூடாது. நல்லா ஒருவாரம் ரெஸ்ட் எடு. இந்த வீட்டு சமையலை, எங்க பழக்க வழக்கங்களை கத்துக்கோ. அப்புறம் உன்னை யார் விட்டா.? நீதானே செய்யப் போறே”
“அம்மா, உங்க பழைய கால பழக்க வழக்கங்களை விடுங்க. நாம 20ம் நூற்றாண்டுல இருக்கோம். இந்த காலத்துக்கு தகுந்த மாதிரி மாறுவோம். உங்க கிட்ட இப்படியே பேசிட்டு இருந்தா வேலை ஆகாது. நீங்க முதல்ல கிளம்புங்க. இன்னைலருந்து சமையல் அறை இன்சார்ஜை நான் ஏத்துகிட்டேன். உங்களுக்கும், அப்பாவுக்கும் சாப்பிடறது ஒண்ணுதான் வேலை. கிளம்புங்க.. கிளம்புங்க” என்று கலைச்செல்வியின் தோளை பிடித்து தள்ளிக் கொண்டு வெளியே விட்டாள். கலைச்செல்வியும் ஒரு சந்தோஷ அலுப்போடு அங்கிருந்து அகன்றாள்.
ஆதியும், குளித்து முடித்து டைனிங் டேபிளுக்கு வந்தான். கலைச்செல்வியும், திருநாவுக்கரசும் ஏற்கனவே அங்கு அமர்ந்திருந்தார்கள்.
தேசிகா, முதல்நாள் சமைப்பதால் இனிப்போடு டிபனை தொடங்கினாள். மணக்க மணக்க நெய் சொட்டும் அசோகா, மெதுவடை, சாம்பார், கேரட் சட்னி, வெங்காய சட்னி, பூவை விடவும் மென்மையான இட்லி, நெய் வார்த்து சுட்ட முறுகல் தோசை என டைனிங் டேபிளில் அழகாக அடுக்கி வைத்தாள்.
“தேசிகா, புடிச்சாலும், புடிச்சோம் புளியங்கொம்பா தான் உன்னை பிடிச்சிருக்கோம். எள்ளுன்னா எண்ணெயா நிக்குறே. இப்படித்தான்மா இருக்கனும். டிபன் பாக்ஸை எடுக்க கூட சமையல் ரூம் பக்கம் போகாத பெண்கள் இருக்கும் இந்த காலத்திலும் இத்தனை வேகமா, இத்தனை விதமா சமைக்க கத்து வச்சிருக்கே. உன் அம்மாவுக்கு தான் நன்றி சொல்லனும். இந்த மாதிரி பொண்ணை பெத்ததுக்கு” என்று புகழாலே ஆரம் சூட்டினாள் கலை.
ஒரு மென் சிரிப்போடு, அவர்களுக்கு அசோகாவை பரிமாறியபடியே, "அப்படியெல்லாம் இல்லைமா.. சாதாரணமா பெண்கள் செய்ய வேண்டியவை தானே இதெல்லாம். நான் எதுவும் புதுமையா பண்ணலயே” என்று அடக்கத்தோடு சொல்லிவிட்டு பரிமாறுவதை தொடர்ந்தாள். தேசிகாவை பற்றின முதல் பதிவு நல்ல விதமாக அப்பா – அம்மா மனதில் அழுத்தமாக பதிந்தது ஆதித்யாவிற்கு சந்தோஷத்தை அளித்தது.
”ஏம்பா, ஆதி கல்யாணம் முடிஞ்ச மறுநாளே ஆபிசுக்கு கிளம்பறியே. ஒருவாரம் லீவு போட்டுட்டு தேசிகாவை வெளியே அழைச்சுட்டு போகலாம்ல” என்று திருநாவுக்கரசு தொடங்க..
“அப்பா, எனக்கும் ஆசை தான்பா. ஆனா என்ன பண்ண, ஒரு முக்கியமான அசைன்மெண்ட் வந்துருச்சி. அதை தட்டிகழிக்க முடியாதேப்பா. தேசிகா எங்கே போய்ட போறா? எப்ப வேணாலும் அழைச்சுட்டு போகலாமே. சரிபா. மார்னிங் 10 ஓ கிளாக் ஒரு மீட்டிங் இருக்கு. நான் கிளம்பறேன். லஞ்சுக்கு வீட்டுக்கு வருவேன். அம்மா பை. தேசி பை”. என்று அவளுக்கு மட்டும் புரியும் அன்பு மொழியில் பார்வையாலே சொல்லிவிட்டு சென்றான்.
அதன்பிறகு வந்த நாட்களில் மறுவீடு செல்லும் வைபவம். புதுபெண்ணுக்கு செய்யவேண்டிய தாலிபிரித்து கோர்த்தல் எல்லாம் முடிந்து, ஆதியும் ஆபிசில் பிசி வேலை ஓய்ந்து பிறகு ஒருவார லீவில் ஊட்டிக்கு ஹனிமூன் சென்றார்கள். 7 நாட்கள் ஊட்டியின் அழகை பருகி திளைத்து வீடு திரும்பினார்கள்.
“அம்மா, நான் உங்களுக்கும், அப்பாவும் என்ன வாங்கி வந்திருக்கேன்னு பாருங்க” என்று சொல்லியபடி அழகாக வேலைப்பாடுகள் செய்யப்பட்ட இரு ஸ்வெட்டர்களையும், சால்வைகளையும் அவர்களிடம் தந்தாள்.
“எங்களுக்கென்னமா கிடக்கு. நீ எதாவது வாங்கிக்க வேண்டியது தானே. ஊட்டியெல்லாம் நல்லா சுத்தி பார்த்தீங்களா? பிடிச்சிருந்ததா ?
”அம்மா, ஊட்டி சூப்பரா இருந்தது. வரவே மனசில்ல. இருந்தாலும் உங்களை விட்டுட்டு போனதும் மனசு கேக்கல. அதான் சீக்கிரமே திரும்பிட்டோம்”
“சரிம்மா, நீங்க ரெண்டுபேரும் குளிச்சுட்டு வாங்க. நான் அதுக்குள்ள டிபன் எடுத்து வைக்கறேன். சாப்ட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என்று அவள் வாங்கி வந்த பொருட்களோடு எழுந்தாள்.
அறைக்கு வந்ததும் ஆதியிடம், "என்ன ஆதி? இன்னும் கோவம் போகலயா? சாரி.. சாரி.. சாரி.. நான் தெரியாம கேட்டுட்டேன். நான் உங்களோட எல்லா விருப்பு வெறுப்புகளை பத்தியும் தெரிஞ்சுக்க விரும்பி அப்படி கேட்டேன். குழந்தை பத்தின பேச்சு வரும்போது, தத்தெடுக்கும் சூழ்நிலை வந்தா என்ன பண்ணுவீங்கன்னு. அதுக்கு ஏன்பா இத்தனை டென்ஷன்.? இனி அப்படி கேக்க மாட்டேன். எங்கே நல்ல பிள்ளையா சிரிங்க பார்க்கலாம்.” என்று சொல்லி அவன் இரு கன்னங்களை பிடித்து செல்லமாக இழுத்து விட்டாள்.
“பின்ன என்ன தேசி. நமக்கு கல்யாணம் முடிஞ்சு இன்னும் முழுசா ஒருமாசம் கூட முடியல. அதுக்குள்ள நீ குழந்தை தத்தெடுப்பு வரைக்கும் போய்ட்டே. இப்ப அதுக்கென்ன அவசியம் வந்தது. நாம ரெண்டு பேருமே பிசிக்கலி பிட்டட் தானே. நான் பல விஷயங்கள்ல முற்போக்குவாதியா இருந்தாலும், குழந்தைன்னு வரும்போது அது கண்டிப்பா நம்மோட ரத்தமா இருக்கனும்னு பிடிவாதமா இருக்கேன். எத்தனை வருஷம் கழிச்சு பிறந்தாலும் சரி. நான் காத்திருக்கேன். ஆனா அது நம்மோட ரத்ததுல இருந்து வந்ததா இருக்கனும். இனிமே இப்படியெல்லாம் முட்டாள் மாதிரி கேக்காதே தேசி.” என்று புருவம் சுருக்கி தாழ்ந்த குரலில் சிறிதே கண்டிப்பு கலந்து சொல்லிவிட்டு விடுவிடுவென வெளியே போய்விட்டான்.
தேசிகாவும், ஆதியும் குளித்துவிட்டு டைனிங் டேபிளுக்கு வந்தார்கள். அதற்குள் கலைச்செல்வி சுட சுட பந்து போல உப்பி இருந்த பூரியையும், உருளைக்கிழங்கு, பட்டாணி மசாலாவையும் கொண்டு வந்து மகனுக்கும், மருமகளுக்கும் பரிமாறினாள். திருநாவுக்கரசு நண்பருடன் ஒரு வேலையாக வெளியே கிளம்பி விட்டிருந்தார். ஆதி டிபன் முடித்து, ஆபிசுக்கு கிளம்ப ரெடியாக நின்றான்.
“என்னப்பா ஆதி, இன்னைக்கு காலைல தானே வந்து இறங்கினீங்க. டயர்டா இருப்பீங்க. இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு போக கூடாதா?”
”இல்லைமா, பெண்டிங் ஒர்க்ஸ் அதிகமா இருக்கும். இப்பவே பார்க்க தொடங்கினா நல்லது. மொத்தமா சேர்ந்துட்ட கஷ்டமாய்டும். நான் ஈவ்னிவ் சீக்கிரம் வந்துடுவேன். லஞ்சை ஆபிசுக்கு தந்து விட்ருங்க. நான் வர்றேன் மா. தேசி பை” என்று சொல்லிவிட்டு கிளம்பியே விட்டான்.
மதிய சாப்பாட்டை தேசிகாவே ஆசையாக சமைத்து கொண்டு சென்றாள். ஆபிசிற்குள் நுழைந்ததும் ஜி.எம்மின் புதுமனைவி என்பதால் வேலை செய்பவர்கள் மரியாதையோடு வணக்கம் சொல்லிவிட்டு, விசாரித்து சென்றார்கள். ரிசப்ஷனில் தான் வந்திருப்பதை ஆதிக்கு தெரியப்படுத்த சொல்லி காத்திருந்தாள். அழைப்பு வரவே ஆதியின் ரூமை நோக்கி சென்று, கதவை திறந்து உள்ளே போனாள். அங்கே ஆதிக்கு வெகு நெருக்கமாக அவனின் பெர்சனல் செக்ரட்டரி ஷைலி உடலை இறுக்கும் டாப்சுடன், தொடை பிதுங்கி வருவது போன்ற ஜீன்சுடன் மிக நெருக்கமாக நின்று அவன் சொல்வதை எழுதிக் கொண்டிருந்தாள்.
“தேசி, கமான். 5 மினிட்ஸ் வைட் பண்ணு. ஒரு முக்கியமான லெட்டர் டிக்டேட் பண்ணிட்டு வர்றேன். உக்கார்” என்று ஒரு இருக்கையை கைகாட்டினான். அவளும் ஒரு சிறுதயக்கத்தோடு அந்த இருக்கையில் அமர்ந்தவாறே அந்த பி.ஏ ஷைலியை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டிருந்தாள். லெட்டர் வேலை முடிந்து போகும் போது தேசிகாவை ஒரு கர்வப்பார்வையோடு பார்த்துவிட்டு சென்றாள் ஷைலி.
அவனுக்கு உணவு பரிமாறி விட்டு வீடு வந்து சேர்ந்த பிறகும் அந்த பி.ஏ. மனக்கண்ணில் வந்து போனாள்.
அன்று மாலை ஆதி ஆபிஸ் முடிந்து வந்ததும், தேசிகாவின் முகம் வாட்டத்துடன் இருப்பதை அறிந்து, "என்ன தேசி, ஒருமாதிரி இருக்கே? என்னாச்சு? உடம்புக்கு சரியில்லயா?”
”அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆதி, உங்க பிஏவை பத்தி யோசிச்சுட்டு இருந்தேன். அவள் நடை, உடை, பாவனை எதுவும் சரியில்ல. எதுக்கும் அவகிட்ட கொஞ்சம் கேர்புல்லா இருங்க” என்று சுரத்து குறைந்த குரலில் சொல்ல,
புன்னகை புரிந்தபடியே அவளை ஒரு கையால் அணைத்துக் கொண்டு “தேசி, நீ படிச்சவ. உலகத்தை பத்தி நாலு விஷயம் தெரிஞ்சவ. இருந்தாலும், இந்த மாதிரி விஷயங்கள்ல நீயும் சராசரி பெண்ணா யோசிக்கறே. பார்த்தியா?”
“ஆதி, நான் சராசரி பெண்கள் மாதிரி தொட்டதுக்கெல்லாம் சந்தேகப்பட மாட்டேன் . இப்பவும் உங்க மேல நம்பிக்கை இருக்கு. இந்த மாதிரி பெண்கள் என்ன பண்ணவும் தயங்க மாட்டாங்க. நீங்க ஒரு அடி தள்ளியே அவளை வைங்கன்னு சொன்னேன்”
“சரிம்மா, நம்ம பொன்மாலைப்பொழுதை ஏன் கண்டவளை நினைச்சு கெடுத்துக்கனும். நான் உனக்கு 10 நிமிஷம் டைம் தர்றேன். சிட்டு மாதிரி கிளம்பி ரெடியா வா பார்ப்போம். நாம சினிமாவுக்கு போய்ட்டு அப்படியே நைட் டின்னர் வெளியே முடிச்சுட்டு வந்துருவோம்”
அவ்வாறே இருவரும் கிளம்பி சென்றார்கள். இருவரும் சினிமா பார்த்து விட்டு வரும் வழியில் இருந்த பிரபலமான அந்த ரெஸ்டாரெண்டில் நுழைந்தார்கள். வெளிச்சம் குறைந்த யாரின் தொந்தரவும் இல்லாத இடமாக தேர்ந்தெடுத்து அமர்ந்தார்கள். அப்போது, "ஹாய் ஆதி, நானும் உங்களோட டின்னர் சாப்பிடலாமா? ”என்றபடி அங்கே வந்து அமர்ந்தாள் ஷைலி.
தேசிகாவும், ஆதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். தேசிகா வெறுப்பின் உச்சிக்கே சென்று விட்டாள். அவளை உட்கார் என்று கூட சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“தேசிகா, நீங்க கொடுத்து வச்சவங்க தான். இல்லைனா இப்படி ஒரு ஹேண்ட்சம் பாய் உங்களுக்கு கிடைச்சிருப்பாரா? நான் தான் கொத்திட்டு போகனும்னு நினைச்சேன். பட்சி தப்பிருச்சி” என்று இங்கிதமில்லாமல் சொல்லிவிட்டு ஆதியை ஓரக்கண்ணால் பார்த்து ஒருமார்க்கமாக சிரித்தாள்.
அதற்கு மேலும் பொறுக்க முடியாதவளாக தேசிகா “ஆதி, எனக்கு பீவரிஷ்ஷா இருக்கு. நாம் வீட்டுக்கு கிளம்பலாமா? நீங்க பில் பே பண்ணிட்டு வாங்க. நான் கார்ல வெயிட் பண்றேன்” என்று சொல்லிவிட்டு அவர்களை திரும்பி கூட பார்க்காமல் விடுவிடுவென போய்விட்டாள்.
ஆதியும் பின்னாலே போய் காரை எடுத்தான். ”என்ன பொண்ணு அவ ஆதி? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம? நமக்கு இப்பதான் கல்யாணம் ஆகியிருக்குன்னு தெரியும். தனிமைல பேச எவ்வளோ விஷயம் இருக்கும். அப்படியே இல்லைனாலும் 2 பேர் போயிருக்கும் போது இப்படியா அழையா விருந்தாளி மாதிரி வருவா. சே..சே.. இவளை மாதிரி ஒரு கேரக்டரை இப்பதான் பார்க்கறேன். நீங்க அத்தனை இடம் கொடுத்து வச்சிருக்கீங்க. உங்களுக்கு அவளை விட்டா பெர்சனல் செகரட்டரி வேற யாருமே கிடைக்க மாட்டாங்களா?” என்று முகம் சிவக்க சொல்லிவிட்டு கார் செல்லும் பாதையை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“தேசி, என்னமா பண்ண சொல்றே. உன் கோபம் நியாயமானது தான். ஆபிஸ்லயே யாருக்கும் அவ ஆக்டிவிட்டீஸ் பிடிக்காது. ஆனா, வேலைன்னு வந்தா அட்சர சுத்தமா, சின்சியரா செய்வா. எந்த வேலை தந்தாலும் முடியாதுன்னு வந்து நின்னதே கிடையாது. அத்தனை திறமை உள்ளவளை இழந்தா ஆபிசுக்கு தான் நஷ்டம். அதனால தான் அவளோட இது மாதிரி சின்ன சின்ன அல்பத்தனமான செய்கைகளை பொறுத்துட்டு போறேன். நீ என்னை நம்பு.”
தேசிகா, அதற்கு மேல் எதுவும் பேசாமல் இருந்தாள். நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகி ஓடிக்கொண்டே இருந்தன. அன்று காலை ஷைலி கண்ணீரும், கம்பலையுமாக, சிறிதே மேடிட்ட வயிற்றோடு வீட்டுக்குள் வந்து சத்தமாக ஆதியை பேர் சொல்லி அழைத்தாள். வீட்டிற்குள்ளே வந்து பேர் சொல்லி அழைக்க அவளுக்கு என்ன தைரியம் என்று கோவத்தோடு தன் அறையிலிருந்து ஆதியோடு வெளியே வந்த தேசிகா நேரே அவளிடம் சென்றாள். இதற்குள் கலைச்செல்வியும், திருநாவுக்கரவும், அங்கே வந்துவிட்டார்கள்.
“என்ன ஷைலி, காலங்கார்த்தால இங்கே வந்திருக்கே. என்ன விஷயம்?” என ஆதி கேட்க,
“பண்றதெல்லாம் பண்ணிட்டு, என்ன விஷயம்னு ஒண்ணுமே தெரியாத மாதிரி கேட்டா, நடந்தது இல்லைன்னு ஆய்டுமா? என்னை கல்யாணம் பண்ணிப்பேன்னு பிராமிஸ் பண்ணி, உங்களை நம்பி என்னையே தந்ததுக்கு என்ன பரிசு தந்தீங்க நீங்க? இப்ப நான் 3 மாசம் முழுகாம இருக்கேன். உங்க குழந்தை என் வயித்துல வளருது. மியூச்சுவலா போனீங்கன்னா உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. அப்படி இல்லை பிரச்சனை தான் தீர்வுன்னா நான் எந்த லெவலுக்கு இறங்க தயங்க மாட்டேன்”
ஆதி முகத்தில் அதிர்ச்சியை அப்பிக் கொண்டு, ஒன்றும் விளங்காமல் அப்படியே நின்றான். ஒருபக்கம் பெற்றோரும், மனைவியும் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்ற பயம், மறுபுறம் எப்படி இவள் ஒரு அபாண்டமான பழியை சுமத்தினாள் என்ற ஒரு ஆச்சர்யம்.
தேசிகா, அவள் முன்னால் வந்து, "அவர் குழந்தை உன் வயித்துல வளருதா? சபாஷ்.. கங்கராட்ஸ். அப்புறம் எங்கெல்லாம் சுத்தினீங்க? எங்கே டெலிவரி பார்க்க போறே? என்ன பேர் வைக்க போறே? குழந்தை பிறந்தா என்னையும் கூப்பிடுவேல?. இவர்தான் இந்த குழந்தைக்கு அப்பாங்கறது என்ன சாட்சி வச்சிருக்கே” என்று கிண்டல் தொனிக்க கேட்டவளை, ஆங்காரமாக பார்த்து ஷைலி, ”நானும், அவரும் எங்கெங்கே சுத்தினோம்னு, ஆபிஸ்ல இருக்கவங்களே சாட்சி. என் வீட்டுக்கு வந்ததுக்கு வீட்டுபக்கம் இருக்கவங்களே சாட்சி”
”தேசி, இவளை நம்பாதே, ஆபிஸ் சம்மந்தப்பட்ட மீட்டிங்குக்கு இவளை அழைச்சுட்டு போயிருக்கேன். இவங்க வீட்ல அம்மா சீரியசா இருக்காங்கன்னு சொன்னதால ஒருமுறை பார்க்க போனேன். ரெண்டு இன்சிடெண்டையும் இணைச்சு என்னமா பொய் சொல்றா? அம்மா, அப்பா இவளை நம்பாதீங்க. உங்க புள்ளை மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல”
தேசிகா, ”ஆதி, நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க? தப்பு யார்மேலன்னு எனக்கு நல்லா தெரியும். நானே இதை டீல் பண்ணிக்கறேன். நீங்க தள்ளியிருந்து வேடிக்கை பார்த்தா போதும்” என்று சொல்லி விட்டு ஷைலியிடம் சென்று,
“சரி, இவர் தான் உன் குழந்தைக்கு அப்பா, நான் ஒத்துக்கறேன். அதுக்கு முன்னாடி ஆஸ்பிட்டலுக்கு போய் ஒரு சின்ன செக்கப் முடிச்சுக்கலாம். அதில தெரியும் யார் குழந்தை, என்ன குழந்தை, அதுக்கு எதிர்காலம் எப்படியிருக்கும்னு ஜாதகம் பார்த்து சொல்வாங்க. கிளம்பு.. கிளம்பு. நல்ல நேரம் போய்ட போகுது” என்று சொன்னவளை
திருட்டு முழியோடு.. "அது வந்து.. அது வந்து.. அதெல்லாம் நான் பார்த்துட்டேன்.. என்னை ஏமாத்தலாம்னு பார்க்கறீங்களா? உங்களை என்ன செய்றேன் பார். தலை நிமிர்ந்து நடக்காத மாதிரி பண்றேன் பார்” என்று ஒரு ஜம்பத்துக்காக சவுண்டு விட்டுவிட்டு போய்விட்டாள்.
ஆதி, தேசிகாவை நெருங்கி இருகைகளை பிடித்து, "தேசி, ரொம்ப தேங்க்ஸ்பா. புருஷனுக்கு எப்ப பக்கபலமா நின்னு சப்போர்ட் பண்ணனுமோ, அந்த சமயத்துல பதற்றமில்லாம நின்னு பொறுமையா பிரச்சனைக்கு தீர்வு கண்டே பாரு. உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்குமா. ரோட்ல நடந்து போகும்போது பக்கத்துல போற பெண்ணோட புடவை பறந்து கணவன் மேல விழுந்தாலும், அதுக்கு கண்ணு மூக்கு காது வச்சு பேசுற பொண்ணுங்க இருக்க இந்த காலத்துல இப்படி ஒரு மனைவி அமைய நான் கொடுத்து கேட்டு வந்திருக்கனும்”
“ஆதி, எனக்கு தெரியும் பா. அதனால தான் இந்த பொண்ணு மேல எனக்கு ஒரு கண்ணு இருந்துட்டே இருந்தது. இந்த பொண்ணோட நீங்க பேசக்கூடாதுன்னு சொன்னதால உங்கமேல இருக்க நம்பிக்கை குறைஞ்சுடுச்சின்னு நினைக்க வேண்டாம். துஷ்டனை கண்டா தூர விலகி இருங்கன்னு தான் சொன்னேன். பாருங்க. எங்கே கொண்டு வந்து விட்டிருக்கு. என் இடத்தில் இன்னொரு பொண்ணு இருந்திருந்தா என்னாகியிருக்கும்? யோசிச்சு பார்த்தீங்களா?.. ஒண்ணும் ஆகியிருக்காது.. உங்ககிட்ட இருந்து நான் தப்பிச்சிருப்பேன்” என்று அவனை கிண்டல் செய்ய, அவன் பொய் கோபத்தோடு அடிக்க ஓட, இந்த காட்சியை கலையும், திருநாவுக்கரசும் கண்களில் நீர்வழிய பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மறுநாள் ஆபிசில் இருந்து வந்தவனிடம், ”உங்க ஆபிஸ் பொண்டாட்டி ஷைலி என்ன சொல்றாங்க? ஒழுங்கா செக்கப் போறாங்களா? வேலைக்கு சாப்பிடுறாங்களா?” என கிண்டல் தொனிக்க கேட்டவளை பொய்யாக அடிக்க வருவதை போல கிட்டே வந்து செல்லமாக அவள் தலையில் ஒரு குட்டு வைத்து,
“அந்த பொண்டாட்டி, ரொம்ப மோசம் தேசி.. என்கிட்ட சொல்லாம கொள்ளாம ரெசிக்னேஷன் லெட்டர் தந்துட்டு ஓடிட்டா. அப்படியே அவ குழந்தைக்கு இளிச்சவாயன் எவனாவது இனிஷியல் தருவானான்னு பார்க்க” என்று சொல்லி விட்டு இருவரும் சிரித்தார்கள்.
ஒருநாள் விடுமுறை அன்று 4 பேரும் காபி கப்போடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, திடீரென வாயை பொத்துக் கொண்டு வாஷ்பேஷின் நோக்கி ஓடினாள் தேசிகா. என்னாயிற்றோ என ஆதியும் பின்னால் வர “தேசி, என்னம்மா ஆச்சு? உடம்பு சரியில்லையா? வா டாக்டர்கிட்ட போகலாம்”
“அதெல்லாம், எதுவுமில்ல ஆதி. சாதாரண வாந்திதான். ஒரு சுக்கு கஷாயம் போட்டு குடிச்சா சரியாகும்” என்றவளின் பேச்சை கேட்காமல் அம்மா - அப்பாவிடம் சொல்லிவிட்டு அவளை அழைத்துக் கொண்டு குடும்ப டாக்டர் யசோதாவிடம் சென்றான்.
அவள் சிறிய நலன் விசாரிப்புகளை முடித்து இவளை பரிசோதித்து, ”கங்கிராட்ஸ் ஆதி, நீங்க அப்பாவாக போறீங்க. உங்க ஒய்ப் கன்சீவா இருக்காங்க”
அந்த சந்தோஷ செய்தியை கேட்டு தலைக்கால் புரியாமல் டாக்டரின் இரு கைகளை பிடித்து நன்றியை சொல்லிவிட்டு, தேசிகாவை அழைத்துக் கொண்டு கிளம்ப முற்பட்ட போது, ”ஆதி, தேசிகா, யூட்ரஸ் ரொம்ப வீக்கா இருக்கு. அதனால ரொம்ம்பவே கேர்புல்லா அவங்களை பார்த்துக்கனும். நான் எழுதி தந்த டேபிளட்ஸை கரெக்டா சாப்பிட சொல்லுங்க. நான் நேரம் கிடைக்கும்போது வந்து பார்க்கறேன்”
“ஓகே டாக்டர், நானே லீவு போட்டுட்டு பக்கத்துல இருந்து பார்த்துக்கறேன். இதைவிட முக்கியமான வேலை உலகத்தில் வேறெதுவும் இல்லை” என்று அவளிடம் விடைபெற்று கிளம்பி வீடு வந்து சேர்ந்தார்கள்.
அதற்குள் கலைச்செல்வி பாதாம் அல்வாவை செய்து வைத்திருந்தாள். வீட்டிற்குள் வந்து இருவரும் நுழைந்ததும் அவர்களுக்கு தன் கையாலேயே ஊட்டி விட்டாள். அதன் பிறகு வந்த நாட்கள் ஆதி தரையிலேயே இல்லை. ஆகாயத்தில் பறந்தான். 3வது மாதம், திடீரென அவளுக்கு வயிற்று வலி ஏற்பட்டு ஆஸ்பிட்டலில் சேர்த்தார்கள். ஆதி ஆபிசிற்கு போகாமல் ஆஸ்பிட்டலிலேயே பழியாய் கிடந்தான்.
கலைச்செல்வியும், திருநாவுக்கரசும் ஜீவனற்று போய் வெளியே இருந்த சேரில் அமர்ந்திருந்தார்கள். டாக்டரின் அழைப்பின் பேரில் உள்ளே சென்றவன்.
“ஆதி, நான் சுத்தி வளைக்காம நேரடியா விஷயத்துக்கே வர்றேன். என்னைக்கு இருந்தாலும் உங்களுக்கு இந்த உண்மை தெரிஞ்சு தானே ஆகனும். அதனால சொல்றேன். தேசிகாவுக்கு கருப்பை போதிய வளர்ச்சியில்லாததாலயும், வீக்கா இருந்ததாலயும் இந்த கரு கலைஞ்சு போச்சு. இனியும் அவங்க கர்ப்பம் தரிச்சா அவங்க உயிருக்கே ஆபத்தாய்டும். இப்போதைக்கு இது குறித்து மேற்கொண்டு விவாதிச்சா அது அவங்க மனசை ரொம்பவே சங்கடப்படுத்தும். கொஞ்ச நாள் போகட்டும்னு விட்டு, குழந்தைக்கு என்ன பண்ணலாம்னு ரெண்டு பேருமே சேர்ந்து முடிவு பண்ணுங்க. வேற ஒரு டெலிவரி கேஸை பார்க்கனும். நான் வர்றேன் ஆதி” என்று அவள் கிளம்பிய பிறகு தேசிகாவின் அருகில் வந்து அவள் தலையை மென்மையாக கோதி விட்டான்.
அந்த செய்தி அவனுக்கு ஆழ்ந்த மனவருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்தாலும், தேசிகாவை வைத்து பார்க்கும் போது பெரிதாக தெரியவில்லை. அவள் மயக்கம் தெளிந்த பிறகு வரலாம் என வெளியே இருந்த தாயிடமும், தந்தையிடமும் சொல்லிவிட்டு கிளம்பி சென்றான்.
வெளியே சென்று அரைமணி நேர இடைவெளியில் உள்ளே நுழைய வந்தவன், நால்வரின் குரல் கேட்டு வெளியே நின்று விட்டான். அம்மாவும், அப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்” டாக்டர், உங்களோட இந்த பெரிய உதவிக்கு என்ன கைம்மாறு செய்ய போறோம்னு தெரியல. ஆதியோட சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு விபத்தால் அவன் அப்பா ஆகும் தகுதியை இழந்துட்டான்னு நீங்க சொன்னதும் வாழ்க்கையே இருண்டு போய் இருந்தோம். எங்களை ஆறுதல்படுத்தி, இன்னைக்கு தைரியமூட்டி வச்சிருக்கறது நீங்க தான். தந்தையாகும் தகுதி இல்லாதவனுக்கு யார் பெண் கொடுப்பா? நாங்க உண்மை நிலையை சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம இருந்தோம். அந்த சமயத்துல தான் எங்க தேசிகா கடவுள் மாதிரி வந்தா. அவளை முதல் முறை பெண் பார்க்க போனப்பவே அவகிட்ட பேசினதுல எங்களுக்கு குணம் ரொம்ப பிடிச்சு போய்ருச்சி. அவகிட்ட உண்மையை சொல்லி கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணோம். அவங்க அம்மா - அப்பாவுக்கு தெரிஞ்சா சம்மதிக்க மாட்டாங்கன்னு அவதான் எங்களை உண்மை சொல்லவிடாம தடுத்துட்டா. குழந்தை தத்தெடுக்கறதை பத்தி சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஆதிகிட்ட பேசியிருக்கா. அவன் அந்த விஷயத்துல ரொம்பவே பிடிவாதமா இருந்ததால, எங்களுக்கு இது மாதிரி நாடகம் நடத்துறதை தவிர வேற வழியில்லாம போச்சு. இந்த உண்மை தெரிஞ்சா ரொம்பவே மனசளவில் உடைஞ்சு போய்டுவான். அதுதான் அவன்கிட்ட சொல்லாம, உண்மை தெரியாம காப்பாத்திட்டு வரோம். எல்லாமே விதிப்படி நடக்குற மாதிரி அவன் நினைக்கனும்னு. இப்ப அவனும் நம்பிட்டான். இனி குழந்தை தத்தெடுக்க எந்த மறுப்பையும் சொல்ல மாட்டான்னு நம்புறோம். இந்த காரணத்தால தான் அவங்க ஆபிஸ்ல ஒரு பொண்ணு இவன்மேல வீண் பழி போட நினைச்சப்ப அவ பணத்துக்காக அபாண்டமா இவன் மேல அவதூறு பேசியிருக்கான்னு தெரிஞ்சுகிட்டோம்”
அவர்கள் பேசுவதை கேட்க கேட்க ஆதிக்கு உலகமே இருண்டு வருவதை போல இருந்தது. அதை சுதாரித்தவனாய் தனக்கு இந்த விஷயம் தெரியுமென்பதை அவர்களிடம் காட்டிக் கொள்ளக்கூடாது தெரிந்தால் இன்னும் வருத்தப்படுவார்கள் என அங்கிருந்து மெதுவாக நகர்ந்தான்.
சிறிது நேரத்திற்கு பிறகு டாக்டர் எழுதி தந்த மருந்து மாத்திரைகளுடன் பழங்களையும் வாங்கிக் கொண்டு ஒன்றுமே தெரியாதது போல அந்த அறைக்குள் நுழைந்தான். இப்போது, தேசிகா, கட்டிலில் எழுந்து உட்கார்ந்து, கலைச்செல்வி தந்த ஜூசை குடித்துக் கொண்டிருந்தாள்.
”அம்மா, நான் தேசி கிட்ட கொஞ்சம் தனியா பேசனும். நீங்க தப்பா நினைக்கலன்னா” என்று சொல்லி முடிக்கும் முன்பே கலை அந்த இடத்தை விட்டு சென்றிருந்தாள்.
“தேசி, இந்த குழந்தை போயிருச்சேன்னு கவலைப்படாதேமா. இன்னும் இந்த உலகத்துக்கே வராத குழந்தையை விட நீதான் எனக்கு முக்கியம். நாம் பெத்துட்டா ஒரு குழந்தைக்கு தான் தாய் - தகப்பனா இருக்க முடியும். ஆனா தத்தெடுத்தா ஒராயிரம் குழந்தைகளுக்கு பெற்றோராகலாம். நீ என்ன சொல்றே? நான் ஒரு குழந்தையை மட்டும் வளர்க்க போறதில்ல. ஒரு அனாதை இல்லத்தையே தத்தெடுக்க போறேன். உனக்கு சந்தோஷம் தானே. நீ என் வாழ்க்கைல வந்த குறிஞ்சி மலர் தேசி. உன்னை பொக்கிஷம் மாதிரி வச்சு பார்த்துக்க ஆசைப்படுறேன். என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தந்தவ நீ” என்று கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க அவளை இறுகி தழுவி கொண்டான்.
தேசிகா, ஒன்றும் புரியாதவளாய், எது எப்படியோ உண்மை நிலை தெரியாமலே, அவன் முடிவின் மாற்றம் அளித்த சந்தோஷத்தில் இருந்தாள். ஆனால் அவனுக்கு தானே தெரியும். அவன் வார்த்தைகளுக்கு அர்த்தம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
கல்ப்ஸ் அருமையான கதை அழகான முடிவு வாழ்த்துக்கள்.அப்பப்பா கதையில் எத்தனை ட்விஸ்ட் வச்சிருக்கீங்க :)) ஆபிஸ் செகரட்டரி,சின்ன வயசுல ஏற்ப்பட்ட விபத்து அட அட கலக்குங்க கல்ப்ஸ்...............
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
தொடர்ந்த என் கதை டார்ச்சர்களை பொறுத்துக் கொண்டு, அந்த கதை எப்படி இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் வெளியிட்டுக் கொண்டே இருக்கும் அட்மின் அண்ணா மற்றும் டீமின் தளராத மன உறுதிக்கு ஒரு ராயல் சல்யூட் :) நன்றிகள்.
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
நல்ல கற்பனை....உன் பெற்றோர் உனக்கு சரியாதான் பேர் வெச்சிருக்காங்க கல்பனா.....சீரான, அழகான நடை...வாழ்த்துக்கள்!
கல்பனா குறிஞ்சி மலர் எப்பவாவதுதான் பூக்கும், ஆனா உங்க கதைங்கிர குறிஞ்சி மலர் எப்பவுமே பூக்குதே , அதுகும் அழகழகா பூக்குது.
வர்ணணை ரொம்ப அழகா இருக்குப்பா! கதை அழகோ அழகு! ஒவ்வொறு கேரக்ட்டரும் கண் முன்னாடி நிக்கிது... கதாநாயகியோட கேரக்ட்டர் மாதிரியே பேறும் நல்லா இருக்கு... மேலும் பல கதைகள் தந்து ஒரு சிறந்த கதாசிரியையா வர வேண்டும் என்று வாழ்த்துகிரேன்...
கல்ப்ஸ் கதை அசத்தலா இருக்கு. கதை ஆரம்பிச்சதுல இருந்து என்னடா இவ்வளவு ஸ்மூத்தா போகுதேனு யோசிச்சுட்டே படிச்சேன் ஆஹா சூப்பரா ட்விஸ்ட் வச்சீங்க எதுவுமே எதிர்பார்க்காத நேரத்தில் செம கல்ப்ஸ். செக்கரட்டரில ஒரு டர்னிங் பாயிண்ட் சரி முடிஞ்சுட்டு போலன்னு நினைக்கும் போது ஆதிக்கு ஒரு ப்ளேஷ் பேக் ஆஹா வார்த்தைகளே இல்ல கல்ப்ஸ் விவரிக்க அப்படி டிவிஸ்ட் அண்ட் டர்ன்ஸ்பா படிக்கவே ரொம்ப ஸ்வாரஸ்யமா இருந்துச்சு வழக்கம்போல உங்களோட அந்த வர்ணனைகள் அபாரம் போங்க.
என்ன கல்ப்ஸ் சோறு தண்ணி இல்லாம கதையா எழுதி அனுப்பிட்டே இருக்கீங்களா இன்னும் கைவசம் எத்தனை இருக்கு.
சங்கீதா உங்க பர்மிஷ்னோட நீங்க கொடுத்த பட்டத்த நானும் யூஸ் பண்ணிக்கிறேன்.
குறிஞ்சு பூ பூக்குற சீசன் போல கல்ப்ஸோட கதை சீசனு சொல்லுனும். கதை ஆரம்பித்திலேர்ந்து அடுத்த அடுத்த பேராவ யூகி முடியாம கடைசியல சூப்பரா முடிஞ்சுட்டீங்க. கதை ரொம்ப நல்லா இருந்தது. வாழ்த்துக்கள் கல்ப்ஸ்
அருமையான கதை.. ட்விஸ்ட் கு மேல ட்விஸ்ட் கலக்குறீங்க போங்க...End நல்லா இருக்கு.. my Best wishes...
Vennila Balasubramani,
If u start judging ppl, u ll b having no time to love them.
//சங்கீதா உங்க பர்மிஷ்னோட நீங்க கொடுத்த பட்டத்த நானும் யூஸ் பண்ணிக்கிறேன்.//ஹி, ஹி, ஹீ யாழினி பர்மிஷன் கிரன்ட்டட்...
சுவா,
//அப்பப்பா கதையில் எத்தனை ட்விஸ்ட் வச்சிருக்கீங்க :)) ஆபிஸ் செகரட்டரி// நான் இந்த கதையை ஓரளவு சிம்பிளா தான் முடிக்க நினைச்சேன். ஆனா, தேசிகா, ஆதி மேல வச்சிருக்கும் அசைக்க முடியாத அன்பு அவனுக்கு தெரியவைக்க ஷைலியை கதைக்கு நடுவே கோர்த்து விட்டேன்.
நான் இத்தனை கலக்க உறுதுணையாக நிற்கும் உங்களை போன்ற தோழிகளுக்கு தான் என் கதைகளின் பெருமையும்,பாராட்டும் போய் சேரும். தேங்க்ஸ் பா :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
ராதாம்மா, உங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்கும் மிக்க நன்றி :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
சங்கீதா,
//கதாநாயகியோட கேரக்ட்டர் மாதிரியே பேறும் நல்லா இருக்கு//கதைக்கான கருவை உருவாக்க கூட நான் அத்தனை கஷ்டப்படுவதில்லை. கேரக்டருக்கு பேர் வைக்க தான் நான் ரொம்பவே கஷ்டப்படுவேன். ஒவ்வொரு கதைகளில் வைக்கப்படும் பெயரும் ஏற்கனவே வந்த பெயராக இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருப்பதால், புது புது பெயரை கண்டு பிடிப்பதில் சிரமம் எடுத்து தான் வைக்கிறேன் ;(
சங்கீதா, உங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
யாழி
//கதை ஆரம்பிச்சதுல இருந்து என்னடா இவ்வளவு ஸ்மூத்தா போகுதேனு யோசிச்சுட்டே படிச்சேன் ஆஹா சூப்பரா ட்விஸ்ட் வச்சீங்க எதுவுமே எதிர்பார்க்காத நேரத்தில் செம கல்ப்ஸ். செக்கரட்டரில ஒரு டர்னிங் பாயிண்ட்//, கதைக்குள்ளே நுழையும் போதே எங்கேடா ரைட் எடுக்கலாம், எங்கே லெஃப்ட் எடுக்கலாம், ஏடாகூடமா எடுத்தா சுவத்துல முட்டிக்க வேண்டியது தான். கன்டினியூவேஷனும் கட் ஆகாம பார்க்கனும். இப்படியெல்லாம் முழி பிதுங்கி தான் ட்விஸ்ட் வந்துச்சி. இன்னமும் பெருசா தான் போச்சு. நான் தான் உங்க நலன் கருதி கொஞ்சம் குறைச்சு அனுப்பிட்டேன்.
யாழி, உன் தொடர்ந்த அன்பான வாழ்த்துகளுக்கும், விமர்சனங்களுக்கும் ரொம்ம்ம்ம்ப தேங்க்ஸ் மா :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
வினோ,
//குறிஞ்சு பூ பூக்குற சீசன் போல கல்ப்ஸோட கதை சீசனு சொல்லுனும்.// நான் கூட யோசிச்சேன் என்னடா தொடர்ந்து கதை தந்து நம்ம அன்பு கோழிகளை கொடுமைபடுத்தறோமேன்னு, என்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் வச்சா குடுமி..இல்லைனா மொட்டை.. கதை தந்தா தொடர்ந்து அதே வேகத்துல கதையை யோசிச்சு தந்துட்டே இருப்பேன். இல்லைனா போன வருஷம் மாதிரி மொத்தமா தூங்கிட்டு இருப்பேன். இப்ப முழிச்சிருக்க காலம் அதான் தொடர்ந்து வந்துட்டே இருக்கு.
வினோ, உன் அடுத்தடுத்த விமர்சனங்களுக்கும், பாராட்டு,வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றி பா :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
வெண்ணிலா, உங்கள் வருகைக்கும்,பதிவிற்கும் மிக்க நன்றி.மகிழ்ச்சி பா :)
சங்கீதா & யாழி, சண்டை போட்டுக்காம,கிழியாம பட்டத்தை பிரிச்சுக்குங்க ;)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
கல்பனா...கதை நல்லாருக்கு....ஒரே ஒரு வருத்தம்...தப்பா எடுத்துகாதீங்க ....ஆண்கள் எழுதற கதைல தான் ஆபீஸ் செகரடேரி ,பாஸ் ஓட PA எல்லாம் மோசமானவங்களா சித்தரிப்பாங்க ...அந்த போஸ்ட் ல கண்ணியமா நடந்துக்கற பெண்கள் எவ்ளோ பேர் இருப்பாங்கல்ல கல்பனா... நம்ம கதை எழுதும் போதாவது அதை மாத்தலாம் ன்னு ஒரு சின்ன யோசனை...எப்போ இந்த மாதிரி படிச்சாலும் இத பத்தி நினைப்பேன்...உங்க கிட்ட சொல்ல முடிஞ்சதால சொல்றேன்... தப்பா எடுக்க வேண்டாம் ப்ளீஸ்...
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
கோமதி, உங்கள் சுட்டி காட்டலுக்கு நன்றி பா. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. மகிழ்ச்சி தான்.என் கதைகள் அத்தனையும் படிச்சு பாருங்க. முதல் பாதில பெண்களை மோசமாக காட்டியிருந்தாலும் பின்னால் திருந்தியோ/அல்லது அவர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையோ உணர்த்தும்படி போட்டிருக்கிறேன்.
அதே போல, இங்கும் ஒரு பெண்ணின் மேலான குணத்திற்கு உதாரணம் காட்டும் பொருட்டு தான் அப்படி இணைக்க நேர்ந்தது. இந்த இடத்தில் இவனுக்கு ஏற்கனவே குறை இருந்துள்ளது.அவள் பொய்யான பழியை அவன் மேல் போட்ட பிறகு, அந்த பிஏவின் மோடிவ் என்ன என்பதை சுட்டி காட்டவே இப்படி இணைக்க நேர்ந்தது. எப்படி இருந்தாலும், அந்த இடத்தில் ஒரு பெண்ணை சேர்த்தே ஆக வேண்டியிருக்கும். நான் வேறு மாதிரி யோசித்தேன். அது அத்தனை சரி வராது என்பதால் இப்படி போட்டேன்.
ரெண்டாவது விஷயம், நான் எழுதும் பல கதைகள் ஆபிசை சுற்றியோ, அல்லது பிஏக்களை சுற்றியோ வந்து அவர்களை எல்லா கதைகளிலும் மோசமாக சித்தரித்திருந்தால் நீங்கள் சொல்வது போல சரியாக இருந்திருக்கும் தோழியே :) இந்த ஒரு கதையோடு இந்த கான்செப்ட் முடிந்தது. இனி மற்றொரு புது கதைக்கு வேறு மாதிரி தான் யோசிப்பேன்.
//அந்த போஸ்ட் ல கண்ணியமா நடந்துக்கற பெண்கள் எவ்ளோ பேர் இருப்பாங்கல்ல கல்பனா... //வெள்ளைத்தாளின் தூய, சுத்தமான வெண்மை நிறத்தை நான் தீண்டவில்லை. நடுவே உள்ள கரும்புள்ளியை மட்டும் தான் தீண்டியுள்ளேன்.
உங்கள் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி கோமதி :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
நீங்க ஏதும் hurt ஆகிடதீங்க...நான் இப்போதான் உங்க கதைய first படிச்சேன்...எப்பவும் தோன்ற விசயம்தான்....ஆனா கதை yelutharavangaloda பேசுற vaiyppu இங்க தான இருக்கு...அதான் சொன்னேன்...படங்கள் ல கூட கம்பெனி செகரட்டரி ன்னா மோசமா தான காமிக்கறாங்க...உங்கல மட்டும் நான் சொல்லலப்பா...ஒரு கருத்த தான் நம்ம friend கிட்ட ngrathala சொன்னேன்...No hard feelings ...
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
கோமதி...கோமதி....கோமதி... :)
நான் ஹர்ட் ஆகல பா. நீங்க சொல்ல வர்றது புரியுது பா. உங்கள போலவே மற்ற தோழிகளுக்கும் இப்படி தோன்றும் அல்லவா?. இது அவர்களுக்கும் சேர்த்து சொல்லப்பட்டது. நீங்க ஹர்ட் ஆகாதீங்க கோமதி. என் கசின் சிஸ்டர் பேரும் கோமதி தான். ஆக, நான் தங்கை சொன்னா அன்பா,ஆசையா ஏத்துக்கறேன். சரியா பா? :) நீங்க சொன்ன கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. இந்த கதையில் வேறு வழியில்லாமல் அப்படி போட வேண்டியதாகிவிட்டது.
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
okpa ... நானெல்லாம் hurt ஆனதா சரித்தரமே கிடையாது...நீங்க என்னை தங்கச்சின்னு ஆசையா சொல்லிட்டாலும் என்னால அக்கான்னு ஆசையா கூப்பிட முடியலையே...நேத்து நாங்க போட்ட rule அப்படி...;-)மத்த கதையும் படிக்கறேன்...இன்னும் நிறைய எழுதுங்க...
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
கோமதி, இப்படித்தான் இருக்கனும். அதான் குட் கேர்ள்க்கு அழகு. (மறுபடி டப்பிங்கா?;)) நேத்து அரட்டைல நீங்க போட்ட ரூல்ஸை நாங்களும் பார்த்தோமுல்ல ;) அதனால தானே தெகிரியமா இப்படி சொன்னோம் ;)) நீங்க அக்கான்னு கூப்பிட மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை தான்.
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
Poga kalpana naan sollanum ninithathu ellam nama friends sollitaga.naan onu matum kakaran unga name kalpanava illai karpanava.kalakitiga.
ரேவதி, நான் கற்பனை அதிகம் உள்ள க(ற்)ல்பனாவே தான். ;)
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி ரேவதி. எனக்கு ஏற்கனவே 2 ரேவதிஸ் ப்ரெண்ட்டா இருக்காங்க. இப்ப உங்களோட சேர்த்து 3 ரேவதீஸ் :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
கலக்கல் கல்பனா................ உண்மையா உள்ளம் பூரித்து சொல்றேன் சூப்பர். அட்டகாசம்.
பல வருடங்களாக எழுத்துலகில் தனிமுத்திரை பதித்திருக்கும் ஸ்டார் எழுத்தாளர்களோடு ஒப்பிடும் அளவிற்கு வார்த்தைகளும் கதை செல்லும் பாங்கும் அருமை.
கதை நீளம் தான். ஆனால் ஆரம்பம் முதல் முடிவு வரை படித்ததில் துளிகூட சலிப்பே தட்டவில்லை.
வர்ணனைகளும், கதைகளமும் இனிமையாகவே இருக்கு.
கல்பனா............... கண்டிபா உங்களுடைய ஒவ்வொரு கதையிலும் உங்களின் திறமை மெருகேறிக்கொண்டே இருப்பது கண்கூடாக தெரிகிறது.
வாழ்த்துக்கள் கலக்கல் கல்பனா................
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.
ப்ரியா,
//பல வருடங்களாக எழுத்துலகில் தனிமுத்திரை பதித்திருக்கும் ஸ்டார் எழுத்தாளர்களோடு ஒப்பிடும் அளவிற்கு வார்த்தைகளும் கதை செல்லும் பாங்கும் அருமை. //ப்ரியா, நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறெதுவும் இல்லை ;) நான் ஒவ்வொரு கதையை எழுதி முடிக்கும் போதும் ஒரு அவநம்பிக்கையோடு தான் இருப்பேன். என்னடா கதை இவ்ளோ பெருசா போய்ருச்சே..படிக்க கதையில் மேட்டர் இருக்குமா? இல்லையென்றால் படிக்கிறவங்களை தூங்க வச்சிடுமா? டயலாக் இத்தனை பெருசா இருக்கே. எப்படி எடுத்துப்பாங்க. என்றெல்லாம் யோசித்து மனம் குழம்பி போய் தான் கதை அனுப்புவேன். ஆனால், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் போல, வந்தாரின் திறமைகளை போற்றி போற்றி அவர்களின் அந்த திறமைகள் முழுவதும் வெளிக்கொணர்ந்து சுடர்விடச்செய்யும் அறுசுவை தோழிகள் உங்களை போன்றவர்கள் இது போன்ற கதைகளை சிறப்பித்து தந்து விடுகிறீர்கள். நீங்கள் ஸ்டார் எழுத்தாளர்களோடு ஒப்பிட்டது உலகின் பெரிய அவார்டே கிடைத்தது போல இருக்கிறது. அதற்குரிய தகுதிக்கு நான் இன்னும் வளரவில்லை என்பது தெரிந்த போதிலும், உங்களின் இந்த வார்த்தை ஒரு பெரும்மகிழ்ச்சி ஏற்படுத்தியது.
//கதை நீளம் தான். ஆனால் ஆரம்பம் முதல் முடிவு வரை படித்ததில் துளிகூட சலிப்பே தட்டவில்லை.//முடியல ப்ரியா..என்னால சிறுகதை எழுத முடியல. எழுத உக்காரும்போது 3 பக்கத்துக்கு மிகாம 5 பக்கத்தை தாண்டாம எழுதனும்னு முடிவு செய்து தான் உக்காருவேன். முடிச்சு எழுந்து பக்கத்தை பார்த்தால் 11 பக்கங்களை தொட்டு 12ம் பக்கத்தின் வாசலை தொட்டுக் கொண்டு நின்றிருக்கும். வேறு வழியில்லாமல் உங்களின் நிலையை எண்ணி வருந்தியபடியே, கதையின் அளவை குறைக்கவும் முடியாமல் போட்டு விடுவேன் ;(
//கண்டிபா உங்களுடைய ஒவ்வொரு கதையிலும் உங்களின் திறமை மெருகேறிக்கொண்டே இருப்பது கண்கூடாக தெரிகிறது.//மெருகேற்றி தோழிகள் உங்கள் அனைவரின் கையில் உள்ளது. அதனால் தான் இத்தனை மெருகேற்ற முடிந்தது. தோழிகளே உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்!!!
ப்ரியா, உங்களுக்கும், உங்களை போன்ற பெருந்தன்மையான, மனதுக்கு நிறைவான பாராட்டு, வாழ்த்துக்களை சோர்ந்து போகாமல் தொடர்ந்து தந்த வண்ணம் உள்ள மற்ற அனைத்து தோழிகளுக்கும் நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக்க்க்க்க் மகிழ்ச்சி பா :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
கல்பனா ரொம்ப அருமையா இருந்துச்சு உங்க கதையபத்தி சொல்ல வார்த்தையே வரலை..ஆரம்பத்தில்ல இருந்து முடிவு வரைக்கும் ரொம்ப அருமையா போர் அடிக்காம கொண்டு போனீங்க நீங்க சொல்லியிருக்கும் பாணியே தனிதான் போங்க சான்ஸே இல்ல...வாழ்த்துக்கள் கல்பனா உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
கவிதா,
// உங்க கதையபத்தி சொல்ல வார்த்தையே வரலை..//கவிதா, இப்படி சொல்லி எஸ்கேப் ஆகலாம்னு மட்டும் நினைக்காதீங்க. வாய்க்கு வந்த ரெண்டு வார்த்தையாச்சும் சொல்லிட்டு தான் போகனும் ;))
கதையை படித்து, மறவாமல் பாராட்டி, வாழ்த்திய உங்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள் கவி :)
நட்புடன்,
கல்பனா சரவணக்குமார் :)
நீ வெளிச்சத்தில் சென்றால் உலகமே உன்னைப் பின்தொடரும். ஆனால் நீ இருட்டினில் சென்றால் உன் நிழல் கூட உன்னைப் பின்தொடராது
கற்பனைக்கரசியே கல்பனா..........குறிஞ்சிமலர் அருமையோ அருமை அழகிய வசனநடை ரம்மியமான வ்ர்ணனை, இத்மான உறவுகள். கொஞ்சம் கண்ணீர் சோகம் மறைக்கும் சம்பவம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.. ஆமா நீங்க ரூம் போட்டு யோசிப்பீங்களோ......... கீப் இட் அப் எழுத்துலகில் நிலையாக இருக்க வாழ்த்துக்கள்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
கதையை இப்போதான் படித்தேன்,வர்ணனைகள் அருமை,சொல்லியிருக்கும் உணவு வகை எல்லாம் உங்க ஃபேவரைட்டா// .டிஎன் ஏ டெஸ்ட் பற்றி வேலை பார்க்கும் பெண்ணுக்கு தெரியாதா,???செக்ரெட்டரி பழி போடுவது கொஞ்சம் ஒவர். மற்றபடி கதை நல்லா இருந்தது.
எல்லா கேரக்டரும் நல்லவங்களாகவே வரும் (அந்த பி.ஏ வைத் தவிர)ஒரு ஐடியலிஸ்டிக் கதை.. :) இது போல் மனிதர்கள், வாழ்க்கை அமைவது எல்லாம் ரொம்ப அபூர்வம்...கதையில் மட்டுமே சாத்தியம் என் நினைக்கிறேன்.. அதனால் தான் குறிஞ்சி மலரேனு பெயர் வைத்து விட்டீர்களா?
ரொம்ப அருமை... உண்மையில் ஒவ்வொரு கதையிலும் உங்கள் எழுத்து அழகாயிட்டே தான் போகுது. வித்தியாசமா யோசிக்கறீங்க.... அதுக்கே பெரிய வாழ்த்துக்களை சொல்லனும். சூப்பர்... ஆதி, தேசி மனதில் நின்னாங்க. வேறு என்ன சொல்ல... :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா