help me plz


என்னேட பாப்பாக்கு 1\1 வயது ஆகுது அவ ல தூங்க ஆரம்பித்து ஒரு 1 hour la திடிர்ன்னு அழற கொஞ்ச நேரம் சமதானம் பண்ணினதுக்கு அப்பரம் தூங்கிறற இப்ப ரெகுலர இப்படி பண்ணர டாக்டர்டிய்ம் காட்டியச்சு.உங்க குழந்தை இப்படி பண்ணிருக்க எதாவது சொல்லுங்க plz

 


ஏற்கனவே நீங்க இழையில் பதில் சொல்லி இருந்தாங்க... நீங்க பார்க்கலன்னு நினைக்கிறேன். குழந்தைக்கு உணவு பத்தாம இருக்கலாம்... அதனால் தூங்காம அழும். ஒரு தோழி சொல்லி இருந்தாங்க பாருங்க... குளிர், சூடுனால கூட தூங்காம இருக்கலாம். வெயில் அதிகமா இருந்தா கொஞ்சம் காத்தோட படுக்க வைங்க. குளிருன்னா நல்லா கவர் பண்ணி படுக்க வைங்க. வயிறு நிறைய உணவு குடுங்க. 1 வயசு தானே சொல்லி இருக்கீங்க?? அப்படின்னா இரவு நல்ல உணவும், ஒரு கப் வெது வெதுப்பான பாலும் குடிக்க வெச்சு தூங்க வைங்க. வெய்ய காலம் தான்னா இரவில் தூங்கும் முன் ஒரு முறை சூடான நீரில் குளிக்க வைக்கலாம். நல்ல தூக்கம் கிடைக்கும். பகலில் ரொம்ப தூங்க விடாதீங்க. நல்லா டயர்ட் ஆகும் அளவுக்கு விளையாட விடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பகலில் நாம் பிள்ளைகளை ரொம்ப திட்டினா, மிரட்டினா, அடிச்சா கூட இரவில் தூக்கத்தில் அந்த பயத்தில் எழுந்து கண்ணே திறக்காம கூட அழுவாங்க. அதனால் இரவு தூங்கும் முன் குழந்தையை நல்லா கொஞ்சி மகிழ்ச்சியா தூங்க வைங்க. எக்காரணத்தை கொண்டும் கோவத்தை காட்டாதீங்க. பகலில் கூட. குழந்தைங்க பயந்துடுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா