வெங்காய கொஸ்த்து

தேதி: July 24, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பெரிய வெங்காயம் - 3
பெரிய தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
புளி கரைசல் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
மிளகு சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்
கடுகு - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - 6 ஸ்பூன்
உப்பு - அரை ஸ்பூன்


 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
லேசாக வதங்கியவுடன் புளிக்கரைசலை ஊற்றி மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கிவிடவும்.
இது தோசை, ஆப்பம், சப்பாத்திக்கு ஒரு நல்ல சைட்- டிஷ்.


இதிலுள்ள அளவுகளின்படி செய்யும்போது புளிப்பு சுவை போதுமானதாக இருக்கும். புளிப்பு கூடுதலாக தேவைப்பட்டால் தக்காளியை இன்னும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம். அல்லது புளி கரைசலோ, எலுமிச்சைச்சாறோ சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்