பேளா ஹூளி

தேதி: February 7, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (4 votes)

 

அரிசி - ஒரு கப்
பீன்ஸ், காரட், உருளைக்கிழங்கு, கத்தரி, முருங்கை - 2 கப்(நறுக்கிய துண்டுகள்)
உரித்த பச்சைப் பட்டாணி - கால் கப்
புளி - எலுமிச்சை அளவு
துவரம்பருப்பு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி
நெய் - 1/8 கப்
எண்ணெய் - கால் கப்
வறுத்து அரைக்க:
பெருங்காயம் - ஒரு சிறுத் துண்டு
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
தனியா - 3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 10 - 12
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - கால் கப்
பொடிசெய்ய:
ஏலக்காய் - 2
ஜாதிக்காய் - சிறு துண்டு
கிராம்பு - 2
பட்டை - சிறுத் துண்டு
தாளிக்க:
கடுகு - 4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கொத்தமல்லி
கறிவேப்பிலை


 

அரிசியை தண்ணீர் கொஞ்சம் அதிகமாக வைத்து குழைய வேக விடவும். துவரம் பருப்பையும் வேக விட்டுக் கொள்ளவும். காய்கறிகளை சிறு துண்டுகளாக்கி சிறிது உப்பும், மஞ்சள்பொடியும் சேர்த்து நசுங்கும் பதமாக வேக விட்டுக் கொள்ளவும்.
வறுக்கக் கொடுத்துள்ள சாமான்களுடன் பாதியளவு தேங்காய்த் துருவலை 3 தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடி செய்யவும். மீதமுள்ள தேங்காய்த் துருவலை சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பொடி செய்யக் கொடுத்துள்ள மசாலா சாமான்களை எண்ணெயில்லாமல் லேசாக வறுத்துப் பொடிக்கவும்.
புளியை 3 கப் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வெந்த சாதத்தை குக்கரில் போட்டு நன்கு கிளறவும். அதில் கரைத்த புளியை விட்டு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
சிறிது நேரம் கொதித்து புளி வாசனை போனதும், வெந்த காய்கறிகளைச் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்து கெட்டியானதும், வறுத்து அரைத்த பொடியை சேர்க்கவும்.
அதன் பிறகு வெந்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்க விடவும். மேலே வறுத்த தேங்காய், மசாலாப் பொடி சேர்த்து நன்கு கிளறி விடவும்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, பச்சைமிளகாய் தாளித்துக் கொட்டவும். நெய்யை காய வைத்து முந்திரி, திராட்சை வறுத்துப் போடவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையைக் கிள்ளிப் போடவும்.
மணமான பேளாஹூளி அன்னம் பொரித்த அப்பளம், அவியல், உருளை ரோஸ்ட்டுடன் அருமையாக இருக்கும்.

இதில் விருப்பப்பட்டால் வெங்காயம் பொடியாக நறுக்கி வதக்கி சேர்க்கலாம். பூண்டு வதக்கி சாமான்களுடன் அரைத்து சேர்க்கலாம். கர்நாடகத்தின் மிக பிரபலமான சிறப்பான உணவு இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இரண்டே படம் தானா குறிப்பு??? இல்ல... மிஸ் ஆயிடுச்சா???? நிஜமவே தெரியாம தான் கேட்கிறேன், ஓட்டுறேன்னு தப்ப நினைச்சுடாதீங்க ப்ளீஸ். ஏன்னா இப்போலாம் எல்லாரும் ஓட்டியே பதிவு போடுறாங்க, அதனால் ஒரு நியாயமான கேள்வி தப்பா புரிஞ்சுட கூடாதிலை, அதான் உஷாரா சொல்றேன்.

----

சாரி... இப்போ ஃபுல்லா வந்துருச்சு. :) நல்ல குறிப்பு, நான் செய்து பார்த்து சொல்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பேளா ஹூளி நல்லா இருக்கு குறிப்பு. பிஸிபேளாபாத் மாதிரியே இருக்கு..

_ பேளா ஹூளி ராதாம்மா பெயரே வித்தியாசமா இருக்கே,யாரு பெயரு சூட்டினா.......பெரக்கேட்டவுடன சும்மா அதிருதில்ல........கிச்சனுக்குள்ள இருக்கிற அத்தனை சாமான்களையும் போடனும் போல இன்னும் மிச்சம் மீதி இருந்துச்சுனா அதையும் போட்டுருங்க ம்மா அப்பரம் அது ஒரு குறையா அகிரப்போகுது.. இந்த ரெசிபிய செய்ரது கொஞ்சம் கஸ்டம் தான் போல நான் கன்டிப்பா செய்து பார்த்துட்டு சொல்றேன் அம்மா
நேத்து உங்க கேரட் ஹல்வா செய்தேன் சூப்பரா வந்துச்சு வாழ்த்துக்கள் அம்மா இன்னும் நிறைய நிறைய குறிப்புகள் உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கிறோம் அம்மா

வாழ்க வளமுடன்....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ராதாம்மா, 'பேளா ஹூளி' நம்ம போளி தான் பல்லுல சிக்கி இப்படி ஆகி போச்சோன்னு வந்து உள்ளே எட்டி பார்த்தேன். குறிப்பு வித்தியாசமா, அதே சமயம் பெரிய்ய லிஸ்ட் மளிகை சாமானை வச்சு செய்ற மாதிரி இருக்குது. டேஸ்ட் வேணும்னா.. சேர்த்து தானே ஆகனும்னு உங்க மைண்ட் வாய்ஸ் சொல்றது கேக்குது ;) முருங்கை எல்லாம் இங்கே அதிசயம். அதனால் ஊருக்கு வந்து நிச்சயம் செய்து பார்த்துட்டு, உங்க வீட்டுக்கே வந்து உங்களுக்கும் கொஞ்சம் தந்துட்டு என் கருத்தையும் சொல்லிட்டு போய்டறேன். வாழ்த்துக்கள்ங்கம்மா :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவைக் குழுவினருக்கு நன்றி.
வனிதா...நான் இன்று வெளியே போய்விட்டதால் அறுசுவைக்கு காலையில் வந்ததோடு சரி. இப்போதான் பார்க்கிறேன்.நீங்கள் எழுதியிருந்த பதிவு பார்த்தேன். படம் முதலில் சரியாக வரவில்லை போலிருக்கு.அதான் என்னை ஓட்டியிருக்கிறீர்கள் போல!!
//இப்போலாம் எல்லாரும் ஓட்டியே பதிவு போடுறாங்க,//
இது சென்னை பாஷையா? என்ன அர்த்தம் என்று விளக்கவும்!!
உங்கள் பாராட்டுக்கு நன்றி....செய்து பார்த்து சொல்லுங்கள்.

வினோஜா...இது பிஸிபேளாபாத்தேதான்...ஆனால் கர்நாடகா முறை. கன்னடத்தில் இதற்கு 'பேளாஹூளி அன்னமு' என்று பெயர்.

கவிதா....இது நான் வைத்த பேர் இல்ல....கன்னடப் பெயர். எந்த சமையலாக இருந்தாலும் சாமான்களை தாராளமாக சேர்த்தால்தான் சுவை நன்றாக இருக்கும். இது சிம்பிள் சாம்பார் சாதம். ஆனால் கொஞ்சம் வித்யாசமான முறை. அவ்வளவுதான்....சாம்பாருக்கு அரைத்துவிடும் சாமான்களைத்தான் எழுதியிருக்கிறேன். உனக்கு படிக்க சோம்பல்னு நினைக்கிறேன். சரியா?!!படிச்சு பார்த்து செய்து பார்த்து சொல்லு.

காரட் ஹல்வா செய்து பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி கவிதா...
(அட இந்த பதிவுல ரயில் கதையும், வில்லத்தனமும் மிஸ்ஸிங்!)

சரி கல்பனா....நான் கவிதாக்கு எழுதிக்கிட்டு இருந்ததை என் பின்னாடி நின்னு படிச்சுட்டியா? நீ சொல்ற மாதிரி தேவையான சாமானும் சேர்க்கணும்; சமைக்கவும் சோம்பல் படக்கூடாது! இதில் எல்லா காயும் சேர்க்க அவசியமில்ல....கிடைக்கும் காய்கறியை வெச்சே செய்யலாம்...நன்றாக இருக்கும்.
ஹ்ம்ம்ம்.....நீ இந்தியா வந்து இன்னும் எவ்வளவு சமையல் செய்யப் போறியோ? நிறய்ய லிஸ்ட்ல இருக்கும் போலருக்கு.....பாவம்தான் போ!!!
அட தேவுடா....உன் கருத்தை தெரிஞ்சுக்க இன்னும் எத்தனை மாதம் நான் காத்திருக்கணுமோ??!!

//நான் கவிதாக்கு எழுதிக்கிட்டு இருந்ததை என் பின்னாடி நின்னு படிச்சுட்டியா?//தனியா இங்கே போரடிச்சுட்டு இருந்தேன். சரி ராதாம்மா என்ன பண்றாங்கன்னு ஒரு எட்டு எட்டி பார்த்தேன் :).

//நீ இந்தியா வந்து இன்னும் எவ்வளவு சமையல் செய்யப் போறியோ? நிறய்ய லிஸ்ட்ல இருக்கும் போலருக்கு.....பாவம்தான் போ!!!//ராதாம்மா, லிஸ்ட் போட்ட குறிப்பை எல்லாம் அம்மாட்ட நீட்டிடுவேன். அம்மா.. ப்ளீஸ் உங்க கைல சாப்ட்டு எத்தன வருஷமாச்சு.. இந்த லிஸ்ட்ல இருக்கறத செய்து தந்துருங்கன்னா போதும். அடுத்த நிமிஷம் வந்துட்டு போக போகுது... இன்னும் ஒரு 20 வருஷம் கழிச்சு என் பொண்ணு இப்படியே ஐஸ் வைப்பா.. நானும் உருகிடுவேன். என் அம்மா மாதிரி.. ;)

// அட தேவுடா....உன் கருத்தை தெரிஞ்சுக்க இன்னும் எத்தனை மாதம் நான் காத்திருக்கணுமோ??!!//அடுத்த மாசம் எண்டிங்க்ல.. இந்தியா லேண்டிங்க்... அதனால நீங்க ரொம்ப காலம் காத்திருக்க வேண்டாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இங்க கேட்டிருந்தீங்களா... சாரி நான் பார்க்கல. சத்தியமா நான் ஓட்டலங்க, நிஜமா குறிப்பு புதுசா இருந்ததால் எனக்கு புரியல. 2 படத்தோட குறிப்பு முடிஞ்சுதோன்னு குழம்பிட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அய்யோ...நான் உங்களை தப்பால்லாம் நினைக்கல வனிதா....என்ன இது ரொம்ப ஃபீல் பண்ணிட்டு...ஃப்ரண்ட்ஸுக்குள்ள இதெல்லாம் அவசியமில்ல....எனக்கு புரியாததாலதான் கேட்டேன்...ஆப்பம் செய்து சாப்பிட்டாச்சா?

'பேளா ஹூளி' பேர்மட்டும் கேள்விபட்டு இருக்கேன். இப்பதான் செய்முறை தெரிஞ்சுக்கிட்டேன். நல்லா செய்து காட்டியிருக்கிங்க. வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு சுஸ்ரீ பாராட்டுக்கு நன்றி...முயற்சி செய்து பாருங்க...

பேரும்,குறிப்பும் வித்தியாசமா இருக்கு.நிறைய பொருட்களை வைத்து சமைத்திருக்கிங்க. வித்தியாசமான குறிப்பு.வாழ்த்துக்கள் :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ராதா,

அருமையா செய்து இருக்கீங்க..வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

ரம்யா...எப்படி இருக்கீங்க? வாழ்த்துக்கு நன்றி.

கவிதா... நலமா? பாராட்டுக்கு நன்றி.