courier post சந்தேகம்

எனக்கு இந்தியா ல இருந்த்து கொரியர் அனுப்புனாங்க, ஆனால் அனுப்பி 10 நாட்கள் ஆய்டுச்சு, இன்னும் வரல.... இப்ப பார்த்தா (online status), நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது நு வருது (united states-customs retained reasons-other) , அத வாங்க ஏதாவது வழி இருக்கா, யாராக்காவது இப்படி நடந்து parcel வாங்கி இருகீங்கலா?

அபிராமி,

எனக்கும் எக்ஸ்ட்டா இதேப்போல ஆச்சு! எனக்கு தெரிஞ்சி ஒண்ணும் செய்யமுடியலை, செய்யவும் இல்லை. நானும் இந்தமாதிரி, on line status பார்த்ததும், எங்க ஏரியா போஸ்ட் ஆபிஸ் போய் விசாரித்தேன். அவங்க எங்களால ஒண்ணும் பண்ண‌முடியாது. கஸ்டம்ஸ் க்ளியர் ஆனதும் அவங்களே அனுப்பிடுவாங்க என்பதுப்போலத்தான் பதில் கிடைத்தது. சரி, அவ்வளவுதான், நடப்பது நடக்கட்டும் என்று இருந்தேன்.

அப்புறம் ஒரு வாரம் கழித்து வந்தது. சில சமயம், நிறைய பார்சல்க‌ள் வரும்போது US customs எல்லாவற்றையும் செக் செய்து, தேவைப்பட்டால் (அவங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தால்) பிரித்து பார்த்து க்ளியரன்ஸ் கொடுக்க இதுப்போல நேரம் எடுக்கும் என்று தெரிந்துகொண்டேன். என்னோட பேக்கேஜ் அப்படியேதான் வந்தது, அதாவது பிரித்து பார்த்தமாதிரி ஏதும் தெரியவில்லை. சோ, பொறுமையா வெயிட் பண்ணுங்க‌, இன்னும் சில நாட்களில் வர வாய்ப்பிருக்கிறது.

அன்புடன்
சுஸ்ரீ

எனக்கு 3 வருடம் முன்னாடி துபாய்ல இருந்து என் கணவர் ஒரு கூரியர் அனுப்பினர் ஆனால் அவர்கள் சொன்ன டைம் க்கு வரலை அங்கே போன் பண்ணி கேட்டோம் அவர்கள் straight நடக்குது அதுனாலே அது clear ஆனதும் வரும் என்று சொன்னார்கள் அப்புறம் ஒரு வாரம் கழித்து வந்தது பார்சல் எதாவுது problem இருக்கும் வந்துரும் கவலை படாதிங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அப்படியா 1 வாரத்துக்கு அப்பறம் parcel வந்துருச்சா, எனக்கு இது வரைக்கும் இப்படி ஆனதே இல்ல, இதான் முதல் தடவை parcel வர லேட் ஆகுறது, அந்த பார்சல் ல கருவாடு இருக்கு அதுனால கூட நிறுத்தி வச்சுருப்பாங்களோ!!! சரி பாப்போம் வருத என்னனு...

அன்புடன் அபி

மேலும் சில பதிவுகள்