தெலுலி பான்புகியோ (Theluli Banbukeyo)

தேதி: February 8, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

1. பான்புகியோ (Bread Fruit) - 1
2. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

ப்ரெட் ஃப்ரூட்டை தோல் மற்றும் தண்டு பகுதி நீக்கி மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இவற்றை போட்டு சிறுந்தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான ப்ரெட் ஃப்ரூட் சிப்ஸ் தயார்.


நன்றாக பழுத்த ப்ரெட் ஃப்ரூட் என்றால் சிப்ஸ் சற்று இனிப்பு சுவையும் சேர்ந்து இருக்கும். திவேகியில் Theluli என்றால் Fried என்று அர்த்தம். Banbukeyo என்பது Bread Fruit.

மேலும் சில குறிப்புகள்


Comments

வனி நானும் பேரைப் பார்த்து என்னவா இருக்கும்னு வந்தேன். எனக்கு ரொம்ப பிடிச்ச சிப்ஸ் இது. ஆனா இங்கே பான்புகியோ கிடைப்பதுதான் கஷ்டம் :(.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பேரு தான் வாயில் நுழைய மாட்டங்குது... சிப்ஸ் நல்லா போச்சு வாயில். :) எனக்கும் பிடிச்சுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஊரில் தோட்டத்தில் இந்த மரம் இருக்குது. அதனால் எப்போதும் வீட்டில் அம்மா செய்வாங்க. இந்த காய் வச்சு மாசாலா கறி செய்யலாம். இட்லி இடியாப்பம் தோசை ஆப்பம எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்.

பான்புகியோ வாயில் நுழையலேன்னா எங்க ஊரில் சொல்ற பேர் நுழையுதா பாருங்க. "சீமைச் சக்கா"

தெலுலி பான்புகியோ- சீமைச்சக்கா வத்தல் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அதுவும் நல்லா தான் இருக்கு பேரு :) எங்க தான் இப்படிலாம் பேரு வைக்காங்களோ!!! நான் இங்க வந்து தான் முதல்ல எதை சமைக்கறேன். இங்கையும் மசாலா செய்வாங்க, அனுப்பி இருக்கேன் குறிப்பு, இன்னும் வரல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,
பார்த்து கண்ணாலே சாப்பிடவேண்டிய சிப்ஸ்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹிஹீ.எங்க ஊர்ல கடச் சக்கா.நாங்க கடுகு,கறிவேப்பிலை தட்டிய சின்ன வெங்காயம் வரமிளகாய் சேர்த்து தாளிச்சு பொரியல் செய்வோம்..எனக்கு ரொம்ப பிடிச்ச பொரியல் அனேகமா கவி க்கும்;-)

வனி, எல்லாரும் ஒரு க்ரூப்பா தான் திரியறீங்க போல.. ஒருத்தவங்க என்னடான்னா கினோவா, இனோவான்னு வர்றாங்க. நீங்க என்னடான்னா பான்பூகியா, பான்பூரின்னு என்ன கலாட்டா இதெல்லாம்?... நான் தெரியாம தான் கேக்குறேன்.. எங்களை கெளப்பி விடுறதுக்கு இதுமாதிரியெல்லாம் கிடைக்காத அயிட்டங்கள்ல குறிப்புகள் தரனும்னே முடிவெடுத்துட்டு வந்திருக்கீங்களா? ;)இப்படியே தொடர்ந்து அயிட்டங்கள் தந்தா அதை உச்சரிக்கிற நாக்கு தான் பாவம் ;(

நான் இதை செய்துட்டு சொல்றேன்னு சொல்ல போறதில்லை.. ஏன்னா இதை தேடுறதுக்குள்ள, என் பசங்களுக்கே வயசாய்டும். அதனால நீங்க செய்யும் போது எனக்கு ஒரு பார்சல் அனுப்புங்க டேஸ்ட் பண்ணிட்டு சொல்றோம். பார்க்க சிம்பிளா நல்லாவே இருக்கு. பார்த்தா மட்டும் போதுமா? சாப்பிட வேணாமா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அப்பா... இவ்வளவு பெரிய பதிவை போட்டு திட்டி வெச்சுட்டு போயிருக்கீங்க ;) சந்தோஷம்... அனுப்பிடலாம் பார்சல். சென்னைக்கே வந்துடுங்க, ப்ரெட் ஃப்ரூட் கொண்டு வந்து தரேன். நன்றி கல்பனா. வாயில் நுழையாத பெயர்... என்ன செய்ய இப்படிலாம் பேரு வெச்சா தானே உள்ள வந்து என்னன்னாது பார்க்கறீங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி உப்பு தேவையில்லையா

உப்பு, காரம் ஒன்னும் வேண்டாம்... அப்படியே டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். நல்லா மெல்லிசா கட் பண்ணா க்ரிஸ்பியா வரும். அதே சமயம் பழமா, இல்ல பிஞ்சா என்பது பாருங்க. பழம் இதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிசிவா ஊரில் ஒரு பேரு... உங்க ஊரில் வேறு பேரா?? சரி இருக்கட்டும்... இங்க இது ரொம்ப பிரபலம்... இதில் நிறைய செய்வாங்க. அதான் அனுப்பினேன். நீங்க சொன்ன முறையும் ட்ரை பண்றேன். :) நன்றி தளிகா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா