கறிவேப்பிலை குழம்பு

தேதி: February 9, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (16 votes)

 

கறிவேப்பிலை - அரை கப்
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 10 பல்
தக்காளி - ஒன்று
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
உப்பு, மஞ்சள் தூள்
எண்ணெய் - தேவைக்கு
வறுத்து பொடிக்க:
துவரம்பருப்பு - அரை மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை மேசைக்கரண்டி
உளுந்து - அரை மேசைக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
தனியா - அரை தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை மேசைக்கரண்டி
தாளிக்க:
கடுகு, வெந்தயம், எண்ணெய்


 

வறுத்து பொடிக்க வேண்டிய உளுந்து, துவரம் பருப்பு, கடலைப்பருப்பை தனியாக வெறும் கடாயில் வறுக்கவும்.
மிளகாய் வற்றல், மிளகு, தனியா, சீரகம் இவற்றை தனியாக வறுக்கவும்.
மிக குறைவான தீயில் கறிவேப்பிலை, தேங்காய் துருவலையும் வறுத்து எடுக்கவும்.
இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பொடித்து எடுக்கவும்.
வெங்காயம், பூண்டு பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து நறுக்கியவற்றை சேர்த்து வதக்கவும்.
இவை வதங்கியதும் தக்காளியை மிக்ஸியில் சுற்றி எடுத்து ஊற்றி வதக்கவும்.
தக்காளி நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது பொடியை கலந்து புளி கரைசல் சேர்த்து தேவையான நீர் விட்டு மஞ்சள் தூள், உப்பும் கலந்து நன்றாக கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து வர கொதிக்க விட்டு எடுத்தால் சுவையான கறிவேப்பிலை குழம்பு தயார். ஆரோக்கியமான கறிவேப்பிலை குழம்பு, குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆரோக்கியமான குறிப்புதான் முடிவளர்ச்சிக்கு ரொம்ப நல்லாதாச்சே. ஏற்கனவே கறிவேப்பிலை குழம்பு ஒன்று செய்து காட்டி இருக்கீங்க. இன்னொருவகையா நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

வாவ் .... என்னுடைய மிக பிடித்த குழம்பு இது. ரொம்ப ருசியா இருக்கும் . வழக்கம் போல குறிப்பும் ,படமும் அருமை ,அருமை ...... . தொடரட்டும் உங்கள் அறுசுவை விருந்து .வாழ்த்துக்கள்.

சிவகாமி

நான் கறிவேப்பிலை குழம்பு செய்ததில்லை இப்போதான் எப்படி செய்யனும்னு தெரிந்தது, நல்லா இருக்கு வனி செய்து பார்க்கிறேன்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. 1 விளக்கபடமா அனுப்பி இருப்பேன், அது இல்லாம 2 குறிப்பு இருக்குன்னு நினைக்கிறேன். இது 4வது வகை ;) செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. எனக்கும் பிடிக்கும். அவசியம் செய்து பாருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. செய்து பாருங்க, நிச்சயம் பிடிக்கும். இவருக்கு எதை செய்தாலும் அவர் அம்மா சமையல் தான் பிடிக்கும், இதை அவங்க செய்வதை விட நல்லா இருக்குன்னுட்டார்!!! நானே அசந்து போயிட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, குறிப்பில் கொடுத்திருக்கும் பொருட்களை வைத்தே குழம்பின் மணத்தையும் யூகிக்க முடிகிறது. டேஸ்டும் நிச்சயம் நன்றாகவே இருக்கும். கறிவேப்பிலை கிடைக்கும் போது இந்த குறிப்பை செய்து பார்க்கிறேன். கறிவேப்பிலை இல்லாதபோது கறிவேப்பிலை குழம்பு வைக்க நினைப்பேன். இருக்கும் போது கண்டுக்க மாட்டேன் ;) வாழ்த்துக்கள் வனி. தொடரட்டும் மணமான, சுவையான பணி.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//குறிப்பில் கொடுத்திருக்கும் பொருட்களை வைத்தே குழம்பின் மணத்தையும் யூகிக்க முடிகிறது// - இதில் உள் குத்து வெளி குத்து ஏதும் இல்லையே.... ;) நீங்க இப்படி சொன்னதுமே எனக்கு வயிற்றை கலக்குது.

நிஜமாவே நல்லா இருக்குங்க, தைரியமா செய்து பாருங்க. ஹிஹிஹீ. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//இதில் உள் குத்து வெளி குத்து ஏதும் இல்லையே.... ;) நீங்க இப்படி சொன்னதுமே எனக்கு வயிற்றை கலக்குது.//வனி, எனக்கு உள்,வெளி குத்தை பத்தியெல்லாம் தெரியாது பா ;) நான் சொன்னதெல்லாம் உண்மை. நம்புங்க..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அக்கா சூப்பர் குறிப்பு நிச்சயம் செய்து பார்த்துட்டு திரும்பி பதில் போடுறேன்., கலக்குங்க.,

நம்பிட்டேன் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. கண்டிப்பா செய்துட்டு சொல்வீங்கன்னு நான் காத்திருப்பேன்.. மறந்துடாதீங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கருவேப்பிலை குழம்பு எனக்கு புடிக்கும் அதோட வாசம் ரொம்ப நல்லா இருக்கும் விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மிக்க நன்றி. நேரம் கிடைக்கும்போது செய்துட்டு சொல்லுங்க... பிடிச்ச மாதிரி வந்ததான்னு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கருவேப்பில்லை குழம்பு கலக்கலா இருக்கு. இன்னிக்கே செய்றேன். அருமையான குறிப்பு. வாழ்த்துக்கள்.

ஆனாலும் இப்படியெல்லாம் பிரெஷ் கருவேப்பில்லை கொத்தோடு காமிச்சி வேறுப்பேத்தக்கூடாது :(

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

வனி,

கறிவேப்பிலை குழம்பு சூப்பரா இருக்கு! படங்களும் ஒவ்வொன்னும் சும்மா அசத்தலா இருக்கு. கூடிய விரைவில் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

கறிவேப்பிலை குழம்பு வித்யாசமான செய்முறை....நான் தக்காளி, தேங்காய், வெங்காயம் சேர்க்காமல் செய்வேன்.இதை செய்து பார்க்கிறேன். பாராட்டுக்கள் வனிதா..

இன்னைக்கே செய்றீங்களா... நாளைக்கு மட்டும் பின்னூடம் வரல... அவ்வளவு தான் சொல்லிட்டேன் ;) பிரெஷ் கறிவேப்பிலை... இங்க ஃப்ரெஷா கிடைக்குறதே 4 தான்... ஒன்னு மீன், இளநீர், வாழை, இன்னொன்னு கறீவேப்பிலை. இது கூட தாங்கலயா??? :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. பாட்டு மிஸ்ஸிங் !!! :(

அவசியம் செய்துட்டு மகளுக்கு பிடிச்சுதான்னு மறக்காம சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. நானே இங்க இதுக்கு முன்னாடி 3 வகை கொடுத்திருக்கேன், இது ஒரு வகை... அவ்வளவு தான். என் மாமியார் வீட்டில் இன்னுமே பச்சை நிறமா இருக்கும்னு இவர் சொல்வார். அவசியம் செய்து பார்த்து பிடிச்சுதான்னு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி அருமையான ஆரோக்கியமான குறிப்பு கண்டிப்பா செய்துபார்ப்பேன் இங்க கருவேப்பிலைக்கு பஞ்சமே இல்லையே :) வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

கறிவேப்பிலை குழம்பு பார்க்க ரொம்ப அழகா இருக்கு.. நான் இது வரை இந்த குழம்பு செய்ததே இல்லை.. சாப்பாட்டில் கறிவேப்பிலை இருந்தால் அதை ஒதுக்கி வைக்கும் ரகம் நான்.. இது போல் அரைத்து செய்தால் சத்தும் கிடைக்கும், தனியே எடுக்கவும் முடியாது.. விருப்ப பட்டியலில் சேர்த்துட்டேன்.. இனி எங்க வீட்டில் அடிக்கடி கறிவேப்பிலை குழம்பு இடம் பெரும்.
வாழ்த்துக்கள்.. வனிதா.. சத்துள்ள குறிப்பு...

"எல்லாம் நன்மைக்கே"

மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி. இது போல் செய்யும்போது கறிவேப்பிலை பிடிக்காதவங்களுக்கும் பிடிக்கும். அவைசியம் செய்து பார்த்து பிடிச்சுதான்னு சொல்லுங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி இன்னைக்கு இந்த கறிவேப்பிலை குழம்பு பண்ணினேன் சுவை நன்றாக இருந்தது நான் இது வரை தக்காளி ,தேங்காய் சேர்த்தது இல்லை இந்த முறை நன்றாக இருக்கிறது நன்றி வனி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அட... செய்துட்டீங்களா... அப்பா... யாராவது குறிப்பை செய்து சொன்னா வனியை கைலயே பிடிக்க முடியாது தெரியுமா??? ;) அத்தனை குஷி. மிக்க நன்றி தனா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கறிவேப்பிலை குழம்பு செய்து பார்த்தா தான் சுவை தெரியும்.ஆனா கடைசி படத்தை பார்த்தால் சமைக்காமலே, சுவைக்காமலேயே நாக்கில் எச்சில் வருது. சூப்பர் சவுத் இந்தியன் குழம்பு.வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மிக்க நன்றி. ஊருக்கு வரீங்க தானே... எல்லாம் செய்து சாப்பிட்டு ஒரு சுத்து குட்டிடலாம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா,
எனக்கு ரொம்ப பிடித்த குழம்பு..
பிரெஷ் கருவேப்பிலை கிடைச்சா செய்துவிட்டு வரேன்..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

என்ன... அங்க கறிவேப்பிலைக்கு பஞ்சமா??? ம்ம்... எல்லாம் கிடைக்கும் ஊர் நம்ம சென்னை தான் :) மிக்க நன்றி. அவசியம் செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செஞ்சிட்டேன்.....சூப்பரா இருந்தது....அதனால இரவுன்னு கூட பார்க்காம சாதத்தை கட்டிடோம்ல....இருந்தாலும் அந்த கலர் வரலை :( அடுத்த முறை வாங்கிட்டு வந்தவுடன் ட்ரை பண்றேன்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

செய்தாச்சா.. வெரி குட். கலரெல்லாம் கண்டுக்காதீங்க... அது கறிவேப்பிலை கலருக்கு ஏற்றபடி மாறும். சில கறிவேப்பிலை டார்க், சிலது லைட் ஷேட்... சுவை பிடிச்சுதா... அதுவே பெரிய சந்தோஷம் எனக்கு :) தேன்க்யூ சோ மச் லாவி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்துட்டேன்! சூப்பரா இருந்துச்சு! எனக்கு சாதத்துக்கு கலந்து சாப்பிடறதை விட தோசைக்கு ரொம்ப பிடிச்சுது. தேங்க்ஸ் வனி!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி. செய்துட்டீங்களா... நான் தோசை கூடலாம் சாப்பிட ட்ரை பண்ணதே இல்லைங்க.. உங்களுக்கு பிடிச்சா சரி தான் :) அடுத்த முறை நானும் ட்ரை பண்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா எப்படி இருக்கீங்க? கறிவேப்பிலை குழம்பு செய்துபார்த்தேன், ரொம்ப நல்லா இருந்தது. கலர் கொஞ்சம் டார்க்கா இருந்தது. அடுத்தமுறை இன்னும் கொஞ்சம் கறிவேப்பிலை கூட செர்த்து செய்து பார்க்கிறேன். நன்றி வனிதா!

மிக்க நன்றி. நீங்க எப்படி இருக்கீங்க?? நான் நலம். கறிவேப்பிலையின் நிறத்தை பொருத்து சில நேரம் குழம்பின் நிரம் இருக்கும். சுவை பிடித்திருந்ததில் மகிழ்ச்சி. செய்து பார்த்து பின்னூட்டம் அளித்தமைக்கு மீண்டும் நன்றி மாலி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

BRIGHT INFO TECH, KARAIKAL....SERVING THE SOCIETY SINCE 2007 -5 YEARS IN THE HOME BASED DATA ENTRY FIELD INVITES YOU TO JOIN AND GROW WITH US. OFFLINE DATA ENTRY PROJECT AVAILABLE AND YOU MAY EARN UPTO RS.12500/- PER MONTH. MOST IMPORTANT THINKS TO NOTE HERE IS NO ACCURACY PROBLEM. GENUINE MONTHLY PAYOUTS. GOVT REGD GENUINE CONCERN. FOR FURTHER ENQUIRIES PLEASE CONTACT : 94429 56082 / 91502 78775 / 94430 19084

BRIGHT INFO TECH, KARAIKAL GOVT REGD - HOME BASED DATA ENTRY JOB PROVIDING CONCERN, SERVING THE SOCIETY SINCE 2007

BRIGHT INFO TECH, KARAIKAL....SERVING THE SOCIETY SINCE 2007 -5 YEARS IN THE HOME BASED DATA ENTRY FIELD INVITES YOU TO JOIN AND GROW WITH US. OFFLINE DATA ENTRY PROJECT AVAILABLE AND YOU MAY EARN UPTO RS.12500/- PER MONTH. MOST IMPORTANT THINKS TO NOTE HERE IS NO ACCURACY PROBLEM. GENUINE MONTHLY PAYOUTS. GOVT REGD GENUINE CONCERN. FOR FURTHER ENQUIRIES PLEASE CONTACT : 94429 56082 / 91502 78775 / 94430 19084

BRIGHT INFO TECH, KARAIKAL GOVT REGD - HOME BASED DATA ENTRY JOB PROVIDING CONCERN, SERVING THE SOCIETY SINCE 2007

BRIGHT INFO TECH, KARAIKAL....SERVING THE SOCIETY SINCE 2007 -5 YEARS IN THE HOME BASED DATA ENTRY FIELD INVITES YOU TO JOIN AND GROW WITH US. OFFLINE DATA ENTRY PROJECT AVAILABLE AND YOU MAY EARN UPTO RS.12500/- PER MONTH. MOST IMPORTANT THINKS TO NOTE HERE IS NO ACCURACY PROBLEM. GENUINE MONTHLY PAYOUTS. GOVT REGD GENUINE CONCERN. FOR FURTHER ENQUIRIES PLEASE CONTACT : 94429 56082 / 91502 78775 / 94430 19084

BRIGHT INFO TECH, KARAIKAL GOVT REGD - HOME BASED DATA ENTRY JOB PROVIDING CONCERN, SERVING THE SOCIETY SINCE 2007

மிக்க நன்றி

சுடு சாதம், அப்பளத்துடன் சாப்பிட சூப்பரா இருந்தது...நன்றி வனி...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ராஜி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா