சப்பாத்தி சன்னா மசாலா

தேதி: July 25, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சப்பாத்தி - 4
சன்னா - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பெரிய தக்காளி - ஒன்று
சன்னா மசாலா தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
பால் - 4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தாளிக்க


 

சன்னாவை 6 மணி நேரம் ஊற வைத்து ஒரு ஸ்பூன் உப்பு போட்டு வேக வைத்து தண்ணீர் வடித்து கொள்ளவும்.
சப்பாத்தியை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
வெங்காயத்தினை நீளமாகவும், தக்காளியை பொடியாகவும் நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளியை கரையும் வரை வதக்கவும்.
பிறகு சன்னா, மசாலா தூள் உப்பு போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியவுடன் சப்பாத்திகளை சேர்த்து பால் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லி இழை தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்