கினோவா பிரியாணி

தேதி: February 10, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

 

கினோவா(Quinoa) - 1 1/2 கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பெரிய தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - 4
கேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி கலந்தது - 1 1/2 கப்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 (சிறிய பற்கள்)
ம‌ஞ்ச‌ள்தூள் - கால் தேக்க‌ர‌ண்டி
மிள‌காய்த்தூள் - 3/4 தேக்க‌ர‌ண்டி
த‌னியாத்தூள் - 1 1/2 தேக்க‌ர‌ண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
எண்ணெய் - ‍ தாளிக்க‌
கடுகு - அரை தேக்க‌ர‌ண்டி
சீர‌க‌ம் - ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு - தேவையான‌ அள‌வு
க‌றிவேப்பிலை - ‍ சிறிது
கொத்த‌ம‌ல்லி - அல‌ங்க‌ரிக்க‌


 

வெங்காய‌த்தை குறுக்கில் வெட்டி பின் நீள‌வாக்கில் நறுக்கி வைக்க‌வும். ப‌ச்சைமிள‌காயை நீள‌வாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கி வைக்க‌வும். இஞ்சியை தோலெடுத்து பொடியாக‌ ந‌றுக்கி லேசாக தட்டி வைக்க‌வும். பூண்டை தோலுரித்து வைக்க‌வும்.
முத‌லில் கினோவாவை த‌ண்ணீரில் போட்டு க‌ழுவி, புது த‌ண்ணீர் விட்டு ஒரு அரை மணி நேரம் ஊற‌ விட‌வும்.
ஒரு அடி க‌ன‌மான‌ பாத்திர‌த்தில், எண்ணெய் விட்டு, க‌டுகு போட்டு வெடித்த‌தும், சீரக‌ம் போட்டு பொரிய‌ விட‌வும். பின் வெங்காய‌ம், க‌றிவேப்பிலை, ப‌ச்சைமிள‌காய் போட்டு ஒரு 5 நிமிட‌ங்க‌ள் வ‌த‌க்க‌வும்.
வெங்காய‌ம் நிற‌ம் மாறி வ‌ரும் போது இஞ்சி, பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி பிறகு பொடியாக நறுக்கி வைத்த த‌க்காளியை போட்டு, பாதி உப்பு, ம‌ஞ்ச‌ள்தூள் போட்டு வ‌த‌க்க‌வும்.
த‌க்காளி ந‌ன்கு வ‌த‌ங்கி மசிந்து வ‌ரும் போது, காய்க‌றி க‌ல‌வையை போடவும்.
சிறிது நேரம் வ‌தக்கியதும், மீதம் உள்ள தூள் வகைகளை எல்லாம் சேர்க்கவும்.
மேலும் சில‌ நிமிட‌ங்க‌ள் வ‌த‌க்கி, மீதி உப்பையும் சேர்த்து, ஒரு கப் கினோவாவிற்கு 1 3/4 கப் என்ற அளவில் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் சூடாகி கொதிக்க தயாராகும் போது, ஊற வைத்த கினோவாவை நீரை வ‌டித்து எடுத்து சேர்க்கவும்.
எல்லாமாக சேர்ந்து நன்கு கொதி வந்ததும், மூடிபோட்டு, அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும். கினோவா வேக‌, சுமார் 20 - 25 நிமிடங்கள் வரை ஆகலாம்.
அதன்பிறகு மூடியை திறந்து பார்த்து தேவைப்பட்டால் மேலும் சில நிமிடங்கள் விட்டு, நீர்வ‌ற்றி வேகும் வரை வைத்திருந்து, பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைத்தூவி தயிர்பச்சடியுடன் பரிமாறவும்.
மாறுப்ப‌ட்ட‌ சுவையுட‌ன், ஆரோக்கிய‌மான‌ கினோவா(Quinoa) பிரியாணி த‌யார்!

கினோவா ந‌ல்ல‌ நார்ச்ச‌த்து, புரதம், மின‌ர‌ல்ஸ் அட‌ங்கிய‌ தானிய‌ வ‌கை. ரைஸ் குக்கரில் செய்வதாக இருந்தால், எல்லாவற்றையும் ரைஸ் குக்கரில் மாற்றி வேக விடவும். ப்ரஷர் குக்கரில் செய்ய எல்லாவற்றையும் சேர்த்து, கொதி வந்ததும் மூடியிட்டு, லேசாக ஸ்டீம் வரும் போது குக்கர் வெயிட் போட்டு, இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ப்ரஷர் குக்கரில் செய்யவதை விட, தனி பாத்திரத்தில் செய்தால் நன்றாக பொலபொலவென வரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

புது ஐட்டமா இருக்கு :) Quinoa - இவங்களை நான் எங்கோ பார்த்திருக்கேன்... ஆனா சமைச்சதில்லை. ஆமாம்... சிரியாவில் நம்ம ஊரு தானியம் ஒன்றுக்கும் இதுக்கும் எனக்கு குழப்பமாகி போய் இதை வாங்கி வந்தேன். என்ன செய்யன்னு தெரியாம தூக்கி போட்டேன். அப்போ எனக்கு குறிப்பு கொடுக்க யாருமில்லையே ;( இப்போ இவங்களை நான் தேடனும். :) பிடிப்போம்... பிடிச்சு இம்முறை சமைப்போம். பிரியாணின்னா சும்மாவா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கினோவா பேரே கேள்விபட்டது இல்லை.ஏதோ நன்வெஜ்னு வந்தேன்பா.ஸ்ரீ ,வனி. பிரியாணி செஞ்சு சும்மா 1 பார்சல் அனுப்புங்க
// பிரியாணின்னா சும்மாவா?? இதை படித்து தனியாக சிரித்தேன்பா..

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

சுஸ்ரீ, 'கினோவா பிரியாணி' பேரை பார்த்ததும் யாரோ அந்நிய நாட்டுக்காரங்க தான் அறுசுவைய ஆக்கிரமிக்க ப்ளான் பண்ணிட்டாங்கடான்னு வெப்பென்ஸோட உள்ளே நுழைஞ்சு பார்த்தேன்பா.. அட.. நம்ம சுசீ தான்.. அப்புறம் ரிலாக்ஸ் ஆனேன் ;)

'கினோவா' இந்த பேரையும், இப்படி ஒரு வஸ்து இருக்குன்னும் இப்பதான் எனக்கு தெரிஞ்சது பா உங்க புண்ணியத்தில். இந்த தானியம் நம்ம ஊர்ல கிடைக்குமா? கிடைச்சா கண்டிப்பா செய்து பார்க்கறேன் பா. விளக்க படங்களும்,செய்முறை குறிப்பும் வெகு நேர்த்தியாக உள்ளன. நிச்சயம் செய்ய தூண்டும் குறிப்பு சுசீ.. வாழ்த்துக்கள் பா :)

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் பா. உங்க முழுப்பெயர் என்ன? தப்பா கேட்டிருந்தா மன்னிச்சு ;)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

க்யூனா தானே.. நானும் க்யூனா புலாவ் செய்து படம் எடுத்து வெச்சிருக்கேன். நல்ல சத்தான குறிப்பு.வாழ்த்துக்கள் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

செல்லாது செல்லாது... படம் எடுத்து வெச்சிருந்தாலும் இங்க அனுப்பினா தான் ஒத்துப்போம் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க கேட்டு இல்லாமலா... நீங்க சொல்லி தானே பேச்சுலர் புலாவ்வே வந்தது :)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சுஸ்ரீ கினோவா பிரியாணி பேரை பாத்துட்டு சல்மா குறிப்புன்னு நினைச்சு வந்தேன் பார்த்தா நீங்களா இருக்கீங்க.
குறிப்பும் சூப்பர்,படங்களும் சூப்பர் வாழ்த்துக்கள்.ஆனால் கினோவா நான் கேள்விபட்டதே இல்லை நம்ம ஊர்ல கிடைக்குமா?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

பேரை பார்த்ததுமே யாரோ நம்ம ஆளுதான்னு நினைச்சேன் சுஸ்ரீ. நானும் இத பத்தி யோசிச்சப்போ இப்படித்தான் நிறைய பேருக்கு தெரியல/கிடைக்கலன்னா என்ன பண்றதுன்னு விட்டு விட்டேன். பிரியாணி சூப்பர். நான் சிம்பிளா உப்புமா மாதிரியும் செய்வேன்..... ஃப்ரோசன் காய்களா!!!

சுஸ்ரீ,
ம்ம்ம்..யம்மி..
வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

கினோவா பிரியாணி கலக்கல் ..புதுமை....என்னமா யோசிக்கிறீங்க...
நிச்சயமா செஞ்சு பார்க்க தோணுது...குட்டீஸ் நலமா?வாழ்த்துக்கள் சுஸ்ரீ..

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இதை எப்புடி சொல்லுறது கினோவாவா,கியூனாவா,கீன் வாவா .எப்படியோ புது பொருள் கேள்விபட்டதே இல்லை.டேஸ்ட் எட்ப்டி இருக்கும்னு சொல்லுங்களேன்.ஓட்ஸ் மாதிரி இருக்குமோ

தளிகா இதை கீன்வா என்று தான் சொல்கிறார்கள் அப்படிதான் வெப்லையும் ப்ரோநவுன்ஸ் பண்ணறாங்க... ஆனா இதை பார்த்தா நமக்கு நம்ம இஷ்ட்டத்துக்கு தான் படிக்க வரும். இதோட டெஸ்ட் பெரிசா தெரியாது சாப்பிட கொஞ்சம் கிரஞ்சியா அதே நேரம் ஸாஃப்டா இருக்கும்.அதில நாம் சேர்க்கும் பொருட்கள் தான் டேஸ்ட் என்ஹேன்ஸ் பண்ணும். உடலுக்கு நல்லது......
தண்ணியில போட்டா அதன் மேலுள்ள தோல் லேசா தவிடு போல மிதக்கும்....... கம்புல வருமே அதேப்போல அது போக நல்லா தேய்த்து கழுவனும். இல்லை என்றால் கசக்கும் என்பார்கள். பிறகு சமைக்கணும். கடுகு மாதிரி ஆனா சின்ன வால் இருக்கும். அது கண்ணாடி போல ட்ரான்ஸ்பரன்டாகி அந்த வால் தனியே தெரியும் குறைந்தது ஒரு கப் அளவு வேக இருபது நிமிடம் ஆகும். சாப்பிட்டு பார்த்து சமையலை முடிக்க வேண்டியது தான்.

சுஸ்ரீ, நான் சொன்னது சரியா உங்களை நேற்றிலிருந்து காணாததால நான் பதில் சொன்னேன்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் & அறுசுவை குழுவினருக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

வனி,
ஆமாம் வனி! புது ஐய்ட்டம்தான், கரக்ட்டா பேரை புடிச்சிட்டிங்க! :) இப்பதான் சமீப காலத்தில்தான் எனக்கும் இதனை தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆக, இப்ப இதை வைத்து, டிஃபரென்ட்டா ட்ரை பண்ணி பார்த்துட்டு இருக்கேன்! :) நீங்களும் வாங்கி ட்ரை பண்ணிடுங்க... நன்றி!

----------------

ஜெயா,
வாங்க ஜெயா... ஆங்கிலத்தில் கீன்வா என்று உச்சரிக்கனும் என்கிறார்கள்... கினோவா என்பது இதோட‌ தமிழ் பெயர்! நானும் இப்ப இந்த Quinoa-ஐ ரீசன்ட்டாதான் தெரிச்சிட்டேன். :)

அன்புடன்
சுஸ்ரீ

கல்பனா,

உங்க பதிவின் முதல் பாராவை ப‌டிச்சிட்டு எனக்கு ஒரே சிரிப்பு, நினைச்சி நினைச்சி சிரிக்கிறேன் போங்க... :) :) Quinoa நம்ம ஊரில் கிடைக்குதான்னு எனக்கு தெரியலைப்பா. ஆமாம் கல்ப்ஸ், எனக்கும் சமீபத்தில்தான் இந்த தானிய வகையைப்பற்றி தெரியவந்தது. அப்புறம் இதில் இருக்கும் நன்மைகளுக்காக சில வெரைட்டிஸ் செய்யத் தொடங்கியிருக்கேன்!. பாராட்டுகளுக்கு மிக்க நன்றி கல்ப்ஸ்!
அப்புறம் பேர், பாருங்க கீழே நம்ம ரம்ஸ் கூப்பிட்றாங்க! :) அதேதான், கூடவே ஒரு 'தா'. சரிதானா?! அட, என்ன இது? இதுக்கு போயி பெரிய வார்த்தை... அதுவும் விஜய்காந்துக்கு தழிழ்ல பிடிக்காத வார்த்தையெல்லாம்... :) :)

அன்புடன்
சுஸ்ரீ

ர‌ம்யா,
சாட்சாத் அதேதான்... ரம்ஸ்!, இந்த Quinoa, இதுக்குதான் எத்த‌னை விதமான உச்சரிப்புகள் இல்லை?! :) :) நீங்களும் செய்தாச்சா?! ஆக்சுவலா சொல்லனும்னா, நான் அனுப்பறதுக்கு முன்னாடி இங்கே அறுசுவையில் நீங்க, லாவண்யா, யாராவது அனுப்பியிருப்பிங்கன்னு நினைச்சேன்! :) அப்ப, உங்க‌ புலாவ்வையும் அனுப்பி விடுங்கள், இன்னொரு ஐய்ட்டம் தெரிந்துகொள்ளலாம். வாழ்த்துக்க‌ளுக்கு ந‌ன்றி ர‌ம்ஸ்!

அன்புடன்
சுஸ்ரீ

சுவ‌ர்ணா,
இந்த பேர், நிறையபேருக்கு ரொம்பதான் சஸ்பென்ஸ் கொடுத்திருக்குப்போல..?! :) அங்க‌ கிடைக்குமான்னு நிஜ‌மா என‌க்கு ஐடியா இல்லைப்பா. யாராவது சொன்னால் தெரிஞ்சிக்கலாம்.
வ‌ருகைக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் மிக்க‌ நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

ஆமாம் உமா, நானும்கூட இதுபோலத்தான், எல்லா இடங்களிலும் கிடைக்குமான்னு சந்தேகத்திலும், இதுக்கு த‌மிழில் என்ன சரியான பேர் போடனும்னு குழ‌ம்பியே :) வெகு நாட்க‌ள் க‌ட‌த்திக்கொண்டு இருந்தேன்.
அப்புற‌ம் இதில் இருக்கும் ந‌ன்மைக‌ளைக் க‌ருதி, தோழிக‌ளுட‌ன் ப‌கிர்ந்துக்கொள்ள விரும்பி, குறிப்பை அனுப்பிவிட்டேன். அட்லீஸ்ட் கிடைப்ப‌வ‌ர்க‌ளாவ‌து செய்து பார்க்க‌லாம் இல்லையா?, அதனால்தான்!பாராட்டிற்கு நன்றி உமா! ஆமாம், சில‌ச‌ம‌ய‌ம் ஃப்ரெஷ் காய்க‌றிக‌ள் எல்லாம் முடிந்து, ஃப்ரிட்ஜ் காலியாகும் நேர‌ங்க‌ளில், ஃப்ரோச‌ன் காய்க‌றிகளும் இட‌ம்பிடிக்கும்! :)

அன்புடன்
சுஸ்ரீ

அன்பு தோழிகளே,
இன்னும் பதிவுகள் போட நினைக்கிறேன், ஆனால் வேலை தடுக்கிறது.
தடங்கலுக்கு வருந்துகிறேன், மீண்டும் வருகிறேன்.
நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

சுஜாதாவை விட சுஸ்ரீ தான் சூப்பரா இருக்கு. நான் ஒத்துக்க மாட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி,
நானே சூட்டிக்கொண்ட புனைப்பெயர்,'சுஸ்ரீ', எனக்கும் ரொம்பப்பிடிக்கும், ஏன்னா அதில என் குட்டிஸ் பேரில ஒரு எழுத்தும் சேர்ந்திருக்கே!! :) அதான் 'சுஸ்ரீ' யாவே வலம் வரேன்! :) நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

:) :)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கம் நன்றி கவி!

அன்புடன்
சுஸ்ரீ

வாங்க இளவரசி, எங்க, இப்பல்லாம் உங்களை ரொம்ப பார்க்கமுடியமாட்டேங்குது. குழந்தைகள் நலமா?!

//கினோவா பிரியாணி கலக்கல் ..புதுமை....என்னமா யோசிக்கிறீங்க...//

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி இளவரசி! அச்சச்சோ, புதுமையெல்லாம் இல்லைங்க‌, இங்கே சில குறிப்புகளை பார்க்கிறப்ப, உங்களையும் சேர்த்துதான் சொல்றேன் (நீங்க கிட்ஸ் ஸ்பெஷல் குறிப்புகள் நிறைய கொடுப்பீங்களே!)

என்னவோ இந்த தானியத்தை பற்றி கேள்விப்பட்டதும், உடம்புக்கு நல்லதாச்சேன்னு இரண்டு மூன்று மெத்தட்டில் செய்து பார்த்தேன். இது காரம், டேஸ்ட் எல்லாம் கூடிவந்து சாப்பிட சூப்பரா இருந்திச்சி, சோ அனுப்பியாச்சு. அவசியம் செய்து பாருங்க இளவரசி. எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. குட்டீஸ் நலம். தங்கள் அன்பான விசாரிப்புகளுக்கு மிக்க நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

என்ன பேரு வைக்கலாம்? எப்படி அழைக்கலாம்?!
குட்டி குட்டியா இருக்கும் இந்த வகை தானியத்தை...

தளிகா,
இப்படிதான் பாடனும்போல இந்த Quino-ஐ! :) ஆமாம் தளிகா, இதை நான் முதன்முதலில் கேள்விப்பட்டதும், க்யூனோ என்று படித்தும், சொல்லிக்கொண்டும் இருந்தேன். அப்புறம் வெப்பில், கீன்வா என்று உச்சரிக்கனும் என்று தெரிந்துகொண்டேன். அதன்பிறகு இதன் தமிழ்ப்பேர் தேடிக்குழம்பி, க‌டைசியாக அது, 'கினோவா' என்று தெரிந்துகொண்டேன்! :) அதோட டேஸ்ட், டெக்ஸ்சர், சமைக்கும் முறை எல்லாம் தெளிவா உமா சொல்லி இருக்காங்க. அதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி உமா!

நம்ம சம்பா கோதுமையில செய்தா இருக்கற மாதிரி, வாயில் கடிபடும் சமயம், கொஞ்சம் சாப்ட்டா இருக்கிறமாதிரி இருக்கும். கூடவே கொஞ்சம் நட்டி (Nutty) ஃப்ளேவர் இருக்கும். இதை வெறும் கடாயில் லேசாக வறுத்துவிட்டு செய்தால் அந்த நட்டி ஃப்ளேவர் கொஞ்சம் குறைவாகத்தெரியும். மத்தப்படி, என்னென்ன கூட சேர்க்கிறமோ அதைக்கொண்டு சுவையை கூட்டி சாப்பிடலாம். உப்புமா, என்றால் ரொம்ப ப்ளையினா இருக்கிற மாதிரி இருக்கு, எனக்கும், பசங்களுக்கும் பிடித்திருந்தது! (அவர்கிட்ட ஓக்கே ஆகலை!:)) அதான், காரம், கரம் மசாலா எல்லாம் சேர்த்து பிரியாணியா செய்தாச்சு. இது வெங்காயத் தயிர் பச்சடியுடன் நல்லா போகுது. நிறைய ஃபைபர், ப்ரோட்டீன் இருக்கு, கொலஸ்ட்ரால் கம்மி பண்ண உதவுதுன்னு தெரிஞ்கிட்டேன். அங்கயும் கிடைக்கும்னு நினைக்கிறேன். வாங்கி நீங்களும் களத்தில குதிச்சிடுங்க! :) நன்றி தளிகா!

அன்புடன்
சுஸ்ரீ

இங்க எனக்கு போன வீக்கென்ட் பயங்கர க்ரேஸியா போச்சு உமா, அதான் ஒரு எட்டு வந்து பதில்போடக்கூட முடியலை. :(

தளிகா கேட்டதும் வந்து விளக்கமான‌ பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி உமா! :)

அன்புடன்
சுஸ்ரீ

கினோவா என்றால் "தினை"யா? இது எங்கு கிடைக்கும்?

ஜெயா