ஈசி வெஜ் சாலட்

தேதி: February 11, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - 1
வெள்ளரி -1
தக்காளி -1
வெங்காயம் - 1
எலுமிச்சை - பாதி பழம்
மல்லி இலை - சிறிது
உப்பு,மிளகுத்தூள் - தேவைக்கு.


 

கேரட்,வெள்ளரி,வெங்காயம்,தக்காளி அனைத்தையும் ஒரே அளவாக பொரியலுக்கு நறுக்குவது போல் நறுக்கி கொள்ளவும்.தக்காளியில் உள்ளே இருக்கும் விதைப்பகுதியை எடுத்து விடவும்.மல்லி இலையை பொடியாக நறுக்கவும்.

நறுக்கியவற்றை ஒரு பவுலில் எடுத்து எலுமிச்சை சாறு சேர்த்து,பின்பு தேவைக்கு உப்பு,மிளகு தூவி கலந்து வைக்கவும்.நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.

சுவையான ஈசி வெஜ் சாலட் ரெடி.


விரைவாக செய்யக் கூடிய இந்த சாலட் சுவையாகவும் இருக்கும்.பார்ட்டியில் இப்படி ஒரு சாலட் வைத்தால் அனைவரும் விரும்பி எடுத்து கொள்வார்கள்.

மேலும் சில குறிப்புகள்