காளான் மசாலா

தேதி: February 11, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.1 (9 votes)

 

பச்சை பட்டாணி - ஒரு கப்
காளான் - ஒரு பாக்கெட் (அ) 200 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி பெரியது - ஒன்று
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
தயிர் - அரை கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
முந்திரி - 10
கசகசா - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு


 

முதலில் வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காளானை தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பட்டாணியை வேக வைத்துக் கொள்ளவும். முந்திரி, கசகசாவை ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
தவாவில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கி தக்காளியை போட்டு நன்கு கரையும் வரை வதக்கவும் .
அதன் பின்னர் கரம் மசாலா, அரைத்த முந்திரி விழுது, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
பிறகு வேக வைத்த பட்டாணி, காளான் சேர்த்து 3 நிமிடம் வேக வைக்கவும் .
காளான் வெந்த பின் தயிர் சேர்த்து 3 நிமிடம் வேக விடவும்.
சுவையான பட்டாணி காளான் மசாலா ரெடி. சூடாக பரிமாறவும். சப்பாத்தி, புல்கா, நாணுடன் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

இது காரம் இல்லாமல் இருக்கும் காரம் வேண்டும் என்பவர்கள் அரை தேக்கரண்டி மிளகாய் பொடி சேர்த்துக் கொள்ளலாம் .


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல டிஷ்... சிம்பிலாவும் இருகு, சூப்பராவும் இருக்கு... செய்து பார்த்துடறேன் :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பார்க்கும் போதே செய்யத் தூண்டுது.. நாளை சண்டே ஸ்பெஷல் இந்த டிஷ் தான்.. :) செய்து சுவைத்து விட்டு பதிவிடுகிறேன்.. :)

காளான் மசாலா பார்க்கவே சூப்பரா இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்ச காளான் கண்டிப்பா செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் கலை.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அட என் குறிப்பு வந்தாச்சா ! ரெண்டு நாளா வராதது தப்பாபோச்சே . முதலில் என் முதல் குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி.

அஹா பல கலையரசி வனிகிட்டயிருந்து எனக்கு முதல் வாழ்த்தா!!!!! (பறக்காத சிவகாமி எறங்கு எறங்கு ....).செய்து பார்த்துட்டு சொல்லுங்க வனி. வாழ்த்துக்கு நன்றி.

changdini ( உங்க பெயர எப்படி வாசிப்பது?) நேத்து சண்டே இந்த டிஷ் செய்திங்களா ? எப்படி இருந்தது ? உங்க பதிவிற்கு நன்றி.

காளான் எனக்கும் ரொம்ப பிடிக்கும். பார்க்க மட்டுமில்லீங்க சாப்பிடவும் நல்லா இருக்கும் . செய்து பார்த்துவிட்டு கண்டிப்பா சொல்லுங்க . வாழ்த்துக்கு நன்றி சுவர்ணா.

ஹாய் கமலி..
உங்க காளான் மசால செய்தாச்சு.. நான் இது வரை கச கசா சேர்த்தது இல்லை..இதில் கசகசா ஃப்ளேவர் நல்லா இருந்தது.. தயிர் சேர்த்தபின் இருந்ததை விட சேர்ப்பதற்கு முன் இருந்த சுவை தான் எனக்கு பிடித்திருந்தது :)

கலைமகள், கலர்புல் ரெசிப்பி. எளிய,சுவையான, குறிப்பு. நிச்சயம் நானும் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பெயர் எப்படி உச்சரிக்கிறதுன்னு போன பதிவுல சொல்ல மறந்துட்டேன்.. அது ச்சாந்தினி(chandini)பா...

உங்களோட காளான் மசாலா பார்க்கவும் அழகா இருக்கு, செய்யவும் ஈஸியா தெரியுது. படங்கள் அத்தனையும் அழகா வந்திருக்கு! வாழ்த்துக்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நீண்ட நாட்களா வரமுடியல.

கல்பனா , சுஸ்ரீ
வாழ்த்துக்கு நன்றி . செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.

சாந்தினி ஆமாங்க தயிர் சேர்த்தா எங்க அம்மா கூட பிடிக்கலன்னு தான் சொல்வாங்க ,ஆன நாங்க எல்லாம் சப்பாத்தியோட ஒரு ரவுண்டு அதிகமா சாப்பிடுவோம் . செய்துபார்த்து பின்னுட்டம் கொடுத்தற்கு நன்றி.

My sun like mushroom but I don't know the cooking method.Now I thank you kalaimagal kamali.