வேலண்டைன் கேக்

தேதி: February 11, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

மைதா - 2 கப்
சர்க்கரை - 3 கப்
நெய் - 2 கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
ஆரஞ்சு, பச்சை நிற ஃபுட் கலர்


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய்யை விட்டு உருக வைக்கவும். அதில் மைதா மாவைப் போட்டு, கேஸை சிம்மில் வைத்து சிவக்காமல் வறுக்கவும். அதனை இரண்டு பாகமாக பிரித்து வைத்துக் கொள்ளவும். 1 1/2 கப் சர்க்கரையை அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அரைக்கரண்டி பாலை விட்டு அழுக்கை நீக்கவும். கம்பிப் பதமாக வந்ததும் வாணலியைக் கீழே இறக்கவும்.
அதில் நெய்யில் வறுத்த மைதா, ஏலப்பொடி, ஆரஞ்சு வண்ணப் பொடி சேர்த்து கைவிடாமல் வேகமாகக் கிளறவும். மீண்டும் அடுப்பில் வைக்கக் கூடாது. அந்த சூட்டிலேயே கெட்டியாகிவிடும்.
கலவை சேர்ந்து ஒட்டாமல் சுருண்டு வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக்கவும்.
வாணலியை அலம்பி விட்டு மீதியுள்ள 1 1/2 கப் சர்க்கரை மற்றும் அரை கப் நீர் சேர்த்து முதலில் கூறியபடியே பாகு வைக்கவும். ஆரஞ்சுக்கு பதிலாக பச்சை நிறப்பொடியை சேர்த்து மேலே கூறியப்படியே கேக்கைக் கிளறவும்.
அதனை ஆரஞ்சு நிற கேக்கின் மேலே கொட்டி சமமாக்கவும்.
இளஞ்சூடாக இருக்கும் போதே விரும்பிய வடிவத்தில் துண்டுகளாக்கவும்.
மேலே பாதாம் பருப்புகளை (விருப்பப்படி முந்திரி, பிஸ்தா) ஒட்டி அழகுப்படுத்தவும்.
எளிமையான, அழகான, சுவையான வேலண்டைன் கேக்கை காதலர் தினத்தன்று செய்து சாப்பிட்டு மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்!!
அனைவருக்கும் இனிய 'காதலர் தின நல்வாழ்த்துக்கள்'!!


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எந்த பக்கம் வாதாடிகிட்டு எந்த மாதிரி ஸ்வீட் செய்து அனுப்பி இருக்கீங்க!!! :( கவுத்துட்டாய்ங்கையா... செல்லது செல்லாது. இதை வேணும்னே பட்டி தீர்ப்புக்கு முன் வெளியிட்ட பாபு அண்ணா சதி பண்ணிட்டார் ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ராதாம்மா, நேரம் பார்த்து தான் குறிப்பை தள்ளியிருக்கீங்க. வெவரமாத் தான் இருக்கீங்க ;) வேலன்டைன் கேக் இனிமை+புதுமை+அருமை. கடைசி கப்பிளும் சூப்பர். யார அவங்க? வாழ்த்துக்கள்ங்கம்மா..

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் அறுசுவைக் குழுவினருக்கு நன்றி.

வனிதா....கவலைப் படாதீர்கள்....இந்த கேக்குக்கும், என் வாதத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!!

கல்பனா....உன் பாராட்டுக்கு நன்றி. வேலன்டைன்ஸ் டேயை நாமதான் வேண்டான்னு சொல்லிருக்கோம். அதைக் கொண்டாடறவங்க இந்த ஸ்வீட் செய்து சாப்பிடலாமில்லயா? இதில் இருக்கும் இரண்டு (கலரும்) பிரிவும் கப்பிள்! இருவரும் சேர்ந்து இணை பிரியாமல் வாழ உணர்த்துவது இந்த கேக்! எப்படி என் விளக்கம்?!!

குட்டீஸ் ரெண்டும் என் பேரனும் (பெண்ணுடைய பையன்), பேத்தியும் (பையனுடைய பொண்ணும்)!! நல்ல ஜோடிதான?!!

ராதாம்மா வேலன்டைன் டேய கொண்டாடுறவங்க மட்டும் தான் இந்த கேக்க சாப்பிடனுமா? ஆனாலும் என்ன ஒரு வில்லத்தனம் உங்களுக்கு அப்போ எங்களுக்கு தனியா கேக்கு செஞ்சு அனுப்புங்கோ ராதாம்மா ...முதல்ல உங்க வீட்டு அட்ரஸ் அ குடுங்கோ உங்க வீட்டுக்காரர் கிட்ட உங்கல பத்தி கொஞ்ச போட்டு விட்டா தான் சரியாகும் போல

ராதாம்மா உண்மையிலேயே கேக் சூப்பரோ சூப்ப்ர் ரொம்ப கலர் புல்லா இருக்கு ,கலர் கலரா இது மாதிரி பாத்தா கண்ணு கெட்டு போகாதுனு டாக்டர் சொன்னாரு அது நால அடிக்கடி இது மாதிரி கல்ர் கலரா செய்து அனுப்புங்கோ வாழ்த்துக்கள் ராதாம்மா........

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

பேரும் நல்லா இருக்கு கேக்கும் நல்லா இருக்கு....

அதோட

//வேலன்டைன்ஸ் டேயை நாமதான் வேண்டான்னு சொல்லிருக்கோம். அதைக் கொண்டாடறவங்க இந்த ஸ்வீட் செய்து சாப்பிடலாமில்லயா? இதில் இருக்கும் இரண்டு (கலரும்) பிரிவும் கப்பிள்! இருவரும் சேர்ந்து இணை பிரியாமல் வாழ உணர்த்துவது இந்த கேக்! எப்படி என் விளக்கம்?!!//

உங்க விளக்கம் கலக்கல் :):) ஆனாலும் உங்க காதலான மனச பாராட்டியே ஆகணும்..:)

குட்டீஸ் க்யூட்டா இருக்காங்க...வாழ்த்துக்கள்..காதலர் தினத்துக்கும்,நன்றிகள் சுவையான் கேக்குக்கும்:)
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ரொம்ப அழகா பண்ணியிருக்கீங்க,ஹார்ட் ஷேப்பில் கட் பண்ணியிருந்தால் பெயருக்கு பொருத்தமாக இருந்திருக்கும்.வாழ்த்துக்கள்.

ராதாம்மா கேக் ரொம்ப நல்லா இருக்கு அதைவிட உங்க குட்டிஸ் சூப்பரா இருக்காங்க நீங்க இந்த கேக் குடுத்து என்னை குழப்பி விட்டுடிங்க நான் இன்னைக்கு தான் உங்களோட கேரட் ஹல்வா பண்ணலாம் என்று இருந்தேன் சரி இதை அடுத்த முறை என் கணவர் வரும் போது தான் பண்ணனும் நீங்களும் நல்லா காதலர் தினம் கொண்டாடுங்க நன்றி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ராதாம்மா கலரும் சூப்பர்,கேக்கும் சூப்பர்ர்ர்ர்ர்,குட்டீசும் சூப்பர்ர்.வாழ்த்துக்கள்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ராதாம்மா..........அருமையா இருக்கு ஸ்வீட்டும் அதன் கலரும் அதன் தீமும். வாழ்த்துக்கள். குட்டீஸ் சூப்பர்.

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

கவிதா....கடைசில உன் வில்லத்தனத்தை என்கிட்டயே காட்டறியே? என் வீட்டுக்காரர்கிட்ட போட்டுக் கொடுக்கப் போறியா? நெவர்...நீ சொன்னதைக் கேட்டு அவர் என்னை வெளிய அனுப்பீட்டா உன் வீட்டுக்குதான் வருவேன் சரியா?! உன் வாழ்த்துக்கு நன்றி...இதையும் உன் கணவருக்கு செஞ்சு கொடுத்து அவர் கம்மெண்டைக் கேட்டு வெக்கபட்டுக்கோ!!!

இளவரசி....என் காதலான மனசை அறிந்து பாராட்டிய உங்களுக்கு நன்றி...

ரீம்....வாழ்த்துக்கு நன்றி. ஹார்ட் ஷேப்பில் கட் பண்ணினால் நிறய வேஸ்ட் ஆகும். அதனால்தான் அப்படி செய்யவில்லை.

ஸ்வர்ணா ...எப்படி இருக்க? பாராட்டுக்கு நன்றி..

ஆனந்தப்ரியா....வாழ்த்துக்கு மிக்க நன்றி.

ஆகா இத இத இததான் நான் எதிர் பார்த்தேன்...கரெக்ட் டைம் க்கு receipe ரிலீஸ் ஆகுதுல்ல...;-)
சூப்பர் அம்மா...அட்வான்ஸ் ஆ ரெடி பண்ணிடீங்க...
இதை வேணும்னே பட்டி தீர்ப்புக்கு முன் வெளியிட்ட பாபு அண்ணா சதி பண்ணிட்டார் ;(//பட்டிக்கு நம்ம remo வரலன்னாலும் என்னா timing ... என்னா timing ...அட..அட..

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

பாராட்டுக்கு நன்றி கோமதி....இந்த கேக்கை செய்து கொடுத்து உன் ஆளை அசத்திடு...!!!

வேலண்டைன் கேக் சூப்பர். சீசனுக்கு தகுந்தாற்ப்போல் செய்து அனுப்பி இருக்கீங்க. கட்டாயம் செய்து பார்த்து சொல்கிறேன். வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு நன்றி வினோஜா....செய்து பாரு.

எப்படி இருக்கீங்க ஆன்டி? பேசி ரொம்ப நாள் ஆச்சி... புதுமையான ஈசியான முறையில் செய்யகூடிய கேக். மிக அருமை.... காதலர் தினத்திற்கு நம் தோழிகள் அவர்கள் கணவருக்கு செய்து கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். நான் இன்னைக்கு தான் பார்த்தேன். அதனால் நேற்று செய்ய முடியவில்லை. வாழ்த்துகள் ஆன்டி

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தனா....ரொம்ப வருத்தமா இருக்கும்மா....எப்படி உன் பதிவை நான் மிஸ் பண்ணினேன்னே தெரியல....தப்பா நினைக்காத. நீ கேக் பண்ணினியா? காரட் ஹல்வாவா? நல்லா வந்துதா? கோவிக்காம சொல்லு தனா!

ரேவதி...நலமா? இன்னிக்குதான் அறுசுவைக்குள்ள வந்திருக்க போலருக்கு....எல்லா ரெசிபியும் படிச்சாச்சா??!! வாழ்த்துக்கு நன்றி...நேத்து இல்லாட்டி என்ன இன்னொரு நாள் செய்து அன்னிக்கு வேலன்டைன்ஸ் டேயை கொண்டாடிடு!

ராதாம்மா

மைதா - 2 கப், சர்க்கரை - 3 கப், நெய் - 2 கப் என்றால் எவ்வளவு என்று கொஞ்சம் சொல்வீங்களா ப்ளீஸ்.
அன்புடன் ஜெயா

ராதாம்மா

மைதா - 2 கப், சர்க்கரை - 3 கப், நெய் - 2 கப் என்றால் எவ்வளவு என்று கொஞ்சம் சொல்வீங்களா ப்ளீஸ்.
அன்புடன் ஜெயா

நான் செய்து பார்த்து சொதப்பி விட்டது. அளவு நான் தப்பா போட்டேனா இல்லை பாவு வைக்கிறதுல தப்பு பண்ணிட்டேனா தெரியவில்லை. ப்ளீஸ் சொல்லித் தாங்க.

அன்புடன் ஜெயா

ஜெயா....உங்கள் பதிவை நான் நேற்று பார்க்கவில்லை....வெரி ஸாரி...

1 கப் என்பது ஒரு அளவுக்கு...நீங்கள் எந்த அளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்...அந்த அளவை வைத்து மற்ற சாமான்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

உதாரணமாக 1 சின்ன கப்பை அளவாக எடுத்துக் கொண்டால் அதையே சர்க்கரை, நெய் எல்லாவற்றிற்கும் அளவாக வைத்துக் கொள்ளவும்.

நீங்கள் செய்ததில் எது சரியாக வரவில்லை? கேக் ஹார்டாகி விட்டதா? பாகு கம்பிப் பதம் வந்ததும் இறக்கி வைத்து அதில் மைதா கலவை சேர்த்து கைவிடாமல் கிளறவும். நெய் முழுதும் முன்னமே சேர்த்து விடுவதால், அது அந்த சூட்டிலேயே சுருண்டு வரும். ரொம்ப கெட்டியாகும்வரை கிளறினால் கடினமாகி விடும். இரண்டு கேக்கும் ஒட்டிக் கொள்ளாது.

பாகு முறுகக் கூடாது. கம்பிப் பதம் என்பது பாகு காய்ந்ததும் இரண்டு விரல்களால் தொட்டுப் பார்த்தால் பிஸுக்கென்று லேஸாக கம்பி மாதிரி வரும்.
ஒரு வண்ண கேக் மட்டும் முதலில் செய்து பாருங்கள். இது மிகவும் ஈஸியான கேக். முயன்று பாருங்கள்.

ராதாம்மா,

பதிலளித்ததற்கு மிக்க நன்றி. நான் சிறிது நேரம் கிளறும்போதே பொடிந்து விட்டது. அதாவது தூளாகிவிட்டது. மறுபடியும் செய்து பார்க்கின்றேன்.

அன்புடன்
ஜெயா